-
வேறு |
அன்றிரு போது
முண்டி துறந்திரா வறுக்குந் தீவாள்
என்றெழு முன்னீ ராடி நியதிக ளியற்றி யைந்தும்
வென்றுளத் தன்பு பாய விளைமுழு முதலைப் பார்மேல்
மின்றிரண் டென்ன நின்ற விமானமீ திருப்பக் கண்டார். |
(இ
- ள்.) அன்று இருபோதும் உண்டி துறந்து - அன்று இரண்டு
வேளையும் உணவை நீத்து, இரா அறுக்கும் தீவாள் என்று - இரவைப்
போழும் வெவ்விய வாளையுடைய சூரியன், எழுமுன் நீராடி - எழுவதற்கு
முன்னே நீராடி, நியதிகள் இயற்றி - நாள் வினைகளை முடித்து, ஐந்தும்
வென்ற உளத்து - ஐம்புலன்களையும் வென்ற உள்ளமாகிய வயலில்,
அன்புபாய - அன்பாகிய நீர் பாய்தலால், விளை முழுமுதலை - இன்னருள்
விளையாநின்ற முழுமுதலை, பார்மேல் மின் திரண்டென்ன நின்ற -
நிலவுலகின் மேல் மின் திரண்டு நின்றாற்போல நின்ற, விமானமீது
இருப்பக்கண்டார் - விமானத்தின்மேல் இருக்கப் பார்த்தனர்.
அறுக்கும்
என்பதற்கேற்ப வாள் என்றார். வாள் - வாட்படை,
கிரணம். என்று - சூரியன். வென்ற என்பதன் அகரம் தொக்கது. ஐந்தும்
வென்ற என்பதற்கு ஐம்புல வாசைகளாகிய களைகளைக் களைந்து என
விரித்துரைத்தலுமாம். முதல் - பயிர், முதற்கடவுள்;
"அன்புறு பத்தி வித்தி யார்வநீர் பாய்ச்சுந் தொண்டர்க்
கின்புரு வான வீச னின்னருள் விளையுமா போல்" |
என இவ்வாசிரியர்
நாட்டுப்படலத்தில் உரைத்தமையுங் காண்க.
உள்ளத்தே
விளையும் சிவபோகமானது புறத்தே விமானத்தி லிருக்கத்
தரிசித்தன ரென்க. (38)
வாசமஞ் சனந்தேன் கன்னல் பைங்கனி மறுவி லானைந்
தாசறு மமுத மைந்து தென்மலை யாரம் வாசம்
வீசுதண்*பனிநீர் வெள்ள மான்மதம் விரைமென் போது
தூசணி மணிப்பூ ணல்ல சுவையமு தின்ன தாங்கா.
|
(இ
- ள்.) வாச மஞ்சனம் தேன் கன்னல் - மணம் ஊட்டிய
திருமஞ்சனமும் தேனும் கருப்பஞ்சாறும், பைங்கனி மறு இல் ஆன் ஐந்து -
பசிய பழங்களின் சாறும் குற்றமற்ற பஞ்ச கவ்வியமும், ஆசு அறும் அமுதம்
ஐந்து - குற்றமற்ற பஞ்சாமிர்தமும், தென்மலை ஆரம் - பொதியின்
மலைச்சாந்தும், வாசம் வீசு தண்பனிநீர் வெள்ளம் - மணம் வீசுங் குளிர்ந்த
பனிநீர்ப் பெருக்கும், மான்மதம் விரைமென்போது - கத்தூரியும் நறிய மெல்லிய மலர்களும்,
தூசு அணிமணிப்பூண் - ஆடையும் அழகிய மணிப் பூண்களும், நல்ல சுவை அமுது - நல்ல சுவையினையுடைய
அமுதும், இன்ன தாங்கா - இவற்றைக் கையிலேந்தி.
மஞ்சனம்
- திருமுழுக்கு; அதன் நீருக்காயிற்று. அமுதம் ஐந்து - பால், தயிர், நெய், தேன், சருக்கரை
என்பன. சுவை அமுது - இனிய நைவேத்தியங்கள் ; சருக்கரைப் பொங்கல் முதலிய அன்ன வகையும்,
பிட்டுமுதலிய பலகார வகையும் பால் முதலியனவுமாம். (39)
(பா
- ம்.) * வீசு தெண்.
|