சதவுருத் திரத்தா லாட்டி மட்டித்துச் சாத்திப் பூட்டிப்
பதமுற மனுவா லட்ட பாலமு தருத்திப் பஞ்ச
விதமுறு வாசம் பாகு வெள்ளிலை யளித்துப் போகம்
உதவுறு தூப தீபா திகள்பல வுவப்ப நல்கா. |
(இ
- ள்.) சத உருத்திரத்தால் ஆட்டி - சதருத்திர மனுவினால்
அபிடேகஞ் செய்து, மட்டித்து - மான்மதத்தைப் பூசி, சாத்தி - மலர்
ஆடைகளைச் சாத்தி, பூட்டி - அணிகளைப் பூட்டி, பதம் உற மனுவால்
அட்ட பால் அமுதுஅருத்தி - பதமமைய மனுவினால் சமைத்த பாலுணவினை
ஊட்டி, பஞ்சவிதமுறு வாசம் பாகு வெள்ளிலை அளித்து - ஐவகையான
மணப்பொருள்களையும் பாக்கையும் வெற்றிலையையுங் கொடுத்து, போகம்
உதவுறு தூப தீப ஆதிகள்பல - விரும்பிய போகங்களை அளிக்கும் தூபமுந்
தீபமு முதலிய பலவற்றை, உவப்ப நல்கா - மகிழ்கூரத் தந்து.
சதவுருத்திரம்
-எசுர்வேதத்துட் கூறப்பட்ட மந்திர விசேடம். மேலைச்
செய்யுளிற் கூறியவற்றுள் மஞ்சனம் முதல் பனிநீர்காறு முள்ளவற்றால்
ஆட்டி, மான் மதம் மட்டித்து, போதும் தூசும் சாத்தி, மணிப்பூண் பூட்டி,
சுவையமுது அருத்தி என முறையே கொள்க. பதமுற அட்ட என்றும்,
மனுவால் அருத்தி என்றும் கூட்டலுமாம். பால் அமுது - பகுதிப்பட்ட
அமுது; பாலுடன் கூடிய அமுது என்றும், அட்ட அன்னவகையும் பாலுமாகிய
அமுது என்றும் கொள்ளலுமாம். பஞ்சவித முறுவாசம் - ஏலம், இலவங்கம்,
பச்சைக் கருப்பூரம், சாதிக்காய் தக்கோலம் என்பன. போகம் - இம்மை
மறுமை வீட்டின்பங்கள்;
"விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞான மாகும்" |
என்பது முதலிய அருண்மொழிகளா
னுணர்க. தீபாதி, தீர்க்கசந்தி. (40)
ஐம்முகச் சைவச் செந்தீ யகத்தினுந் துடுவை யார
நெய்ம்முகந் தருத்திப் பூசை நிரப்பிநால் வேதஞ் சொன்ன
மெய்ம்மனு நூற்றுப் பத்தான் மூவிலை வில்ல நீலங்
கைம்மல ரேந்திச் சாத்திக் கடவுளை யுவப்பச் செய்து. |
(இ
- ள்.) ஐம்முகச் சைவச் செந்தீ அகத்தினும் - ஐந்து
முகங்களையுடைய சிவபெருமான் திருவுருவமாகிய சிவந்த வேள்வித் தீயின்
கண்ணும், துடுவை ஆர நெய் முகந்து அருத்தி - துடுப்பு நிறைய நெய்யை
முகந்து வார்த்து ஆகுதி செய்து, பூசை நிரப்பி - சிவபூசையை முடித்து, நால்
வேதம் சொன்ன - நான்கு மறைகளுள் கூறிய, மெய்மனு நூற்றுப்பத்தால் -
சிவபெருமானது ஆயிரந் திருப்பெயரினால், மூவிலை வில்வம் நீலம்
கைம்மலர் ஏந்தி - மூன்று இலைகளையுடைய வில்வத்தையும் நீலோற்பல
மலரையும் கையாகிய மலரில் ஏந்தி, சாத்தி - அருச்சித்து, கடவுளை
உவப்பச் செய்து - இறைவனை மகிழச் செய்து.
|