இளைத்தார்
போல் என்றும், பசியினர் போல் என்னும் கூறியது இவை
யெல்லாம் நாடகமாத்திரமேயன்றி உண்மையல்ல என்றற்கு. வாயைக்குவித்து
எழுப்பும் சீழ்க்கை யொலியால் காற்று வருவித்தல் பணியாளரிடைக்
காணப்படும் வழக்கு. (31)
[அறுசீரடியாசிரிய
விருத்தம்] |
இடும்பைநோய்
வெள்ள நீந்தி யின்பநீர் வெள்ளத் தாழ்ந்த
கொடும்புற முதியாண் முன்போய்க் கூறுவார் கோலுக் கேற
இடம்படு கரைக ளெல்லா மடைபடு கின்ற வின்னங்
கடும்பசி யுடையே னன்னே பிட்டிடு கடிதி னென்றார். |
(இ
- ள்.) இடும்பை நோய் வெள்ளம் நீந்தி - துன்ப நோயாகிய
வெள்ளத்தினை நீந்திக்கடந்து, இன்பநீர் வெள்ளத்து ஆழ்ந்த - இன்பமாகிய
வெள்ளத்தில் அழுந்திய, கொடும்புறம் முதியாள் முன்போய் - வளைந்த
முதுகினையுடைய முதியவளாகிய வந்தியின் முன் சென்று, கூறுவார் -
சொல்லுவார்; கோலுக்கு ஏற இடம்படு கரைகள் எல்லாம் அடைபடுகின்ற -
அளந்து விட்டகோலுக்குப் பொருந்த இடமகன்ற கரைகளெல்லாம்
அடைபடுகின்றன; அன்னே - தாயே, இன்னம் கடும்பசி உடையேன் - யான்
இன்னும் மிக்க பசியுடையேன் (ஆகலின்), கடிதின் பிட்டு இடு என்றார் -
விரைவில் பிட்டு இடுவாயாக என்று கூறியருளினர்.
நீர்
வெள்ளத்துக்கு அடை. ஏற - பொருந்த. கடும்பசி - மிக்க
பசி. (32)
ஆங்கவ ளப்போ
தட்ட சிற்றுண வளித்தா ளையர்
வாங்கியங் கையு நாவுங் கனலெழ வாயிற் பெய்து
பாங்கிரு கொடிறு மொற்றிப் பதமுறப் பருகிக் கொண்டு
நீங்கிமுன் போலப் போந்து நெடுங்கரை யடைக்க லுற்றார். |
(இ
- ள்.) ஆங்கு அவள் அப்போது அட்ட சிற்றுணவு அளித்தாள் -
அவ்விடத்தில் அவ்வந்தி அப்பொழுது செய்த பிட்டினைக் கொடுத்தாள்;
ஐயர் - இறைவர், வாங்கி அங்கையும் நாவும் கனல் எழ வாயில் பெய்து -
அதனை வாங்கி அகங்கையும் நாவும் தீயெழ வாயிற்போட்டு, இருபாங்கு
கொடிறும ஒற்றி - இரண்டு பக்கங்களிலுமுள்ள கொடிற்றினைக் கையால்
ஒற்றி, பதம்உற - அது உண்ணும் பதத்தினைப் பொருந்த, பருகிக்கொண்டு
நீங்கி - அதனை அருந்திக்கொண்டே அவ்விடத்தினின்றும் நீங்கி,
முன்போலப் போந்து - முன்போல் வந்து, நெடுகரை அடைக்கலுற்றார் -
நீண்ட கரையினை அடைக்கத்தொடங்கினார்.
பசி
மிகுதியால் விரைந்துண்பார்போலச் சூட்டினைக் கருதாது வாயிற்
போட்டனர் என்க. வாங்கினமையாற் கையும், வாயிற்பெய்தமையால் நாவும்
வெம்மையுற. கனல் - தழல் போலும் வெம்மை. கொடீறு - கவள். (33)
|