அடைக்கலம்; மருமகன்
என்று மாமன் உருவாய் - மாமன் வடிவெடுத்து
வந்து (ஒரு வணிகச் சிறுவனை) மருமக னென்று கூறி, வழக்கு வலி பேசும்
மைந்த சரணம் - வன்மையாக வழக்குப் பேசிய வீரனே அடைக்கலம்;
குருமொழி தந்து - உபதேச மொழியை அருளி, நாரை குருவிக்கு -
நாரைக்குங் கரிக்குருவிக்கும், வீடு குடி தந்த எந்தை சரணம் -
வீட்டுலகினைக் காணியாகக் கொடுத்தருளிய எமது தந்தையே அடைக்கலம்;
வரு பழி அஞ்சி - தென்னனுக்கு வரும் பழியினை அஞ்சி. வேட மகனுக்கு
இரங்கும் மதுராபுர ஈச சரணம் - வேட மகனுக்கு இரங்கியருளிய மதுரைப்
பதியின் தலைவனே அடைக்கலம்.
முன்னுள்ள
மைந்தன் என்பதற்கு வீரன் என்று பொருள் கொள்க;
மேலைச் செய்யுளிற் கூறிய மைந்தனுக்கு மைந்தன் மைந்தனாகியவன்
என்றுரைத்தலுமாம் புரேச, குணசந்தி. (46)
விருத்தகு
மார பால வருண்மேனி கொண்டு விளையாடு மண்ணல்
சரணம்
குரத்தியை நச்சு பாவி யுயிருண்டு சோரி குடைவாகை வேல சரணம்
கருத்திசை பாண னாளி னிசைபாடி மாறு களைவேத கீத சரணம்
நரித்திரண் மாவை மீள நகரங் கலங்க நரிசெய்த நம்ப சரணம். |
(இ
- ள்.) விருத்த குமார பால அருள் மேனி கொண்டு விளையாடும்
அண்ணல் சரணம் - விருத்தகுமார பாலராகிய அருட் டிருமேனிகொண்டு
திருவிளையாட்டுப் புரியும் அண்ணலே அடைக்கலம்; குரத்தியை நச்சு பாவி
உயிர் உண்டு - ஆசிரியன் மனைவியாகிய மாணிக்கமாலையை விரும்பிய
பாவியாகிய சித்தன் உயிரை உண்டு, சோரி குடைவாகை வேல சரணம் -
அவன் குருதியில் மூழ்கிய வெற்றிமாலையை யணிந்த வேற்படையோனே
அடைக்கலம்; கருத்து இசை பாணன் ஆளின் - நின் திருவடியில் கருத்தை
இசைத்த பாணபத்திரன் அடிமைபோலச் சென்று, இசை பாடி மாறுகளை
வேதகீத சரணம் - இசை பாடி அவன் பகைவனாகிய ஏமநாதனை ஓட்டிய
வேதகீதனே அடைக்கலம்; நரித் திரள் மாவை - நரிக் கூட்டங்களாகிய
குதிரைகளை, நகரம் கலங்க மீள நரி செய்த நம்ப சரணம் -
நகரிலுள்ளவர்கள் கலங்குமாறு மீளவும் நரிகளாக்கிய நம்பனே அடைக்கலம்.
நரித்
திரளைக் குதிரைக ளாக்கி அவற்றை மீள நரிகளாக்கிய
என்க (47)
முற்பக லாறி ரண்டு சிறுபன்றி யுண்ண முலைதந்த வன்னை சரணம்
பொற்புறு மாய வாவை யடலேறு கொண்டு பொருதட்ட சிட்ட சரணம்
பற்பல ஞால மெங்கு மடையப் பிரம்பு படுமட்ட மூர்த்தி சரணம்
கற்பினொ ருத்தி மன்ற லறிவிக்க மூன்று கரிதந்த வள்ளல் சரணம். |
(இ
- ள்.) முற்பகல் - முன்னொரு காலத்தில், ஆறிரண்டு சிறுபன்றி
உண்ண முலை தந்த அன்னை சரணம் - பன்னிரண்டு பன்றிக் குட்டிகள்
பால் பருகுமாறு முலை கொடுத்தருளிய தாயே அடைக்கலம்; பொற்பு உறு
மாய ஆவை - அழகுமிக்க மாயப் பசுவினை, அடல் ஏறு கொண்டு - வலிய
திருநந்தி தேவராகிய ஆனேற்றினால், பொருது அட்ட சிட்ட சரணம் -
போர்புரிந்து கொன்ற மேலானவனே அடைக்கலம்; பற்பல ஞாலம் எங்கும்
அடைய - பலப்பல ஞாலங்களனைத்து வடுவினைப்பெற, பிரம்புபடும்
|