அட்டமூர்த்தி சரணம்
- பிரம்படிபட்ட அட்டமூர்த்தியே அடைக்கலம்;
கற்பின் ஒருத்தி மன்றல் அறிவிக்க - கற்பினையுடைய ஒரு வணிகமாதின்
மணத்தை அவள் மாற்றாளுக்கு அறிவிக்க, மூன்று கரி தந்த வள்ளல்
சரணம் - மூன்று சான்றுகள் கொடுத்தருளிய வள்ளலே அடைக்கலம்.
ஞாலமெங்கும்
வடுப்படுதற்குக் காரணங் கூறுவாராய் அட்டமூர்த்தி
என்றார். (48)
அளவைக ளாலும்
வேத முதனூல்க ளாலு மயன்மாய னாலு+
மளவாக்
களவையு னக்கு நாம குணசின்ன சாதி கதிசெய்தி யில்லை யவையும்
உளவென யாம றிந்து துதிசெய்ய வேகொ லுலகஞ்செ யன்பி
னெளிதாய்
விளையருண் மேனி கொண்டிவ் வறுபத்து நாலு விளையாடல் செய்த
படியே. |
(இ
- ள்.) அளவைகளாலும் வேத முதல் நூல்களாலும் - காட்சி
முதலிய அளவைகளாலும் வேதங்களாகிய முதனூல்களாலும்,
அயன்மாயனாலும் அளவாக் களவை - அயனாலுந் திருமாலாலும் அளந்து
காணமுடியாத மறைவையுடையை; உனக்கு நாமம் குணம் சின்னம் சாதி கதி
செய்தி இல்லை - உனக்குப் பெயரும் குணமும் குறியும் சாதியும் பிறப்பும்
தொழிலும் இல்லையே; யாம் அறிந்து துதி செய்யவே கொல் - யாம் அறிந்து
துதிப்பதற்குப் போலும், உலகம் செய் அன்பின் எளிதாய் - உயர்ந்தோர்
செய்யும் அன்பிற்கு எளிதாக, அவையும் உள என - அவையும் நினக்கு
உள்ளன வென்று கூறுமாறு, விளை அருள்மேனி கொண்டு - விளையும்
அருட்டிருமேனி கொண்டு, இவ்வறுபத்து நாலு விளையாடல் செய்தபடி -
இந்த அறுபத்து நான்கு திருவிளையாடல்களுஞ் செய்தருளிய தன்மை.
வேதத்தை
வேறு பிரித்தமையின் அளவைகள் என்றது காட்சி
அநுமானங்களை. வேதம் முதலாகிய நூல்களாலும் என்றுமாம்.
"மறையினா லயனால் மாலால் மனத்தினால் வாக்கால் மற்றும்
குறைவிலா வளவி னாலும் கூறொணா தாகிநின்ற இறைவர்" |
என்று சிவஞான
சித்தியார் கூறுவதுங் காண்க. களவை - களவினை
யுடைய; ஐ முன்னிலை விகுதி. "ஒளிக்குஞ் சோரனை" என
மாணிக்கவாசகரும், "வேதங் கிடந்து தடுமாறும் வஞ்சவெளி" என
இந்நூலாசிரியரும் கூறுதல் காண்க. நீ பற்பல நாம குண சின்ன சாதி கதி
செய்தி உடையையாய் விளையாடல் செய்தபடி என விரிக்க. (49)
அறுசீரடியாசிரிய
விருத்தம். |
எனத்துதித்த
வசிட்டாதி யிருடிகளைக் குறுமுனியை யெறிதே னீப
வனத்துறையுஞ் சிவபெருமா னிலிங்கத்தின் மூர்த்தியாய் வந்து
நோக்கிச்
சினத்தினைவென் றகந்தெளிந்தீர் நீர்செய்த பூசை துதி தெய்வத்
தானம்
அனைத்தினுக்கு மெனைத்துயிர்க்கு நிறைந்துநமக் கானந்த மாயிற்
றென்னா. |
(பா
- ம்.) +அறியாக்களவை.
|