(இ
- ள்.) எனத் துதித்த வசிட்ட ஆதி இருடிகளை - என்று துதித்த
வசிட்டர் முதலிய முனிவர்களையும், குறுமுனியை - அகத்திய முனிவனையும்,
எறிதேன் நீபவனத்து உறையும் சிவபெருமான் - தேன்பொழியுங்
கடம்பவனத்தின்கண் எழுந்தருளிய சோமசுந்தரக் கடவுள், இலிங்கத்தில்
மூர்த்தியாய் வந்து நோக்கி - சிவலிங்கத்தினின்றும் உருவத் திருமேனியுடன்
வெளிவந்து பார்த்து, சினத்தினை வென்று அகம் தெளிந்தீர் - சினத்தை
வென்று உள்ளந் தெளிந்தவர்களே, நீர் செய்த பூசை துதி - நீவிர் செய்த
வழிபாடும் துதிமொழியும், தெய்வத்தானம் அனைத்தினுக்கும் எனைத்து
உயிர்க்கும் நிறைந்து - தெய்வம் இருக்கும் திருப்பதிகள் அனைத்திற்கும்
உயிர்கள் அனைத்திற்கும் நிறைந்து, நமக்கு ஆனந்தம் ஆயிற்று என்னா -
நமக்கு இன்பத்தைத் தந்தன என்று.
வசிட்டாதி,
தீர்க்க சந்தி. மூர்த்தியாய் - சகளமூர்த்தியாய். சினம்
என்றது காமம் முதலியவற்றுக்கும் உபலக்கணம். பூசையும் துதியும் என
எண்ணும்மை விரிக்க. தெய்வத்தானம் அனைத்தினும் நிறையுங் காரணத்தை
மூர்த்தி விசேடத்திற் காண்க. எல்லாவுயிருள்ளும் விரவி யுடனிற்றலால்
அனைத்துயிர்க்கும் நிறைந்த தென்க. ஆயிற்று - ஆயின. (50)
சிறந்தவருள்
சுரந்துகுறு முனியைவரு கென்றுகரஞ் சிரமேல்
வைத்துப்
புறந்தடவி யெமையொப்பாய் நீயேநின் கற்புடைய பொலங்கொம்
பன்னாள்
அறந்தழையு முமையொப்பா ளாதலினா லுமையொப்பா ரகிலத்
தியாரே
நிறைந்ததவம் புரிந்தோனுந் தவத்துறுதி பெற்றோனு நீயே யன்றோ. |
(இ
- ள்.) சிறந்த அருள் சுரந்து - மேம்பட்ட திருவருள் சுரந்து,
குறுமுனியை வருக என்று கரம் சிரமேல் வைத்து - அகத்திய முனிவனை
வரக்கடவாயென்று (அருகில் அழைத்து) திருக்கரத்தை அவன் முடியின்மேல்
வைத்து, புறம் தடவி - முதுகினைத் தடவி, நீயே எமை ஒப்பாய் - நீயே
எம்மை ஒப்பாய்; நின் கற்புடைய பொலம் கொம்பு அன்னாள் - நினது
கற்புடைய பொற்கொம்பு போன்ற உலோபாமுத்திரையே, அறம் தழையும்
உமை ஒப்பாள் - முப்பத்திரண்டு அறங்களையும் வளர்க்கும் உமையைப்
போல்வாள்: ஆதலினால் உமை ஒப்பார் அகிலத்து யார் - ஆகையால்
உம்மை ஒப்பவர் உலகத்தின்கண் வேறு யாவர் (ஒருவருமில்லை): நிறைந்த
தவம்புரிந்தோனும் - நிறைந்த தவஞ் செய்தவனும், தவத்து உறுதி
பெற்றோனும் நீயே அன்றோ - அத்தவத்தினாற் பயனடைந்தோனும் நீயே
யல்லவா ?
வருகென்று,
அகரந் தொக்கது. அகத்தியன் இறைவ னொப்பா
னென்றும், உலோபாமுத்திரை உமையொப்பா ளென்றும் மேல் கீரனுக்
கிலக்கண முபதேசித்த படலத்திலும் கூறியிருத்தல் காண்க. (51)
உனக்கரிய
வரமினியாந் தருவதெவ னுனக்கரிதா வொன்றுங்
காணேம்
எனக்கருணை செய்திலிங்கத் திடையிச்சை வடிவாய்ச்சென்
றிருந்தா
னாகத்
தனக்கரிய வரநல்குஞ் சிவலிங்கந் தன்பெயராற் றாபித் தான்றன்
இனக்கருணை வசிட்டாதி முனிவர்களுந் தம்பெயரா லிலிங்கங்
கண்டார். |
|