(இ
- ள்.) உனக்கு அரிதா ஒன்றும் காணேம் - உனக்கு அரிதாக
ஒன்றையுங் கண்டிலேம் ஆகலின், உனக்கு அரிய வரம் இனி யாம் தருவது
எவன் - உனக்கு அரிய வரத்தினை இனி யாம் தருவது எங்ஙனம், எனக்
கருணை செய்து - என்று அருள் புரிந்து, இச்சை வடிவாய் இலிங்கத்திடை
சென்றிருந்தானாக - இச்சை வடிவாய்ச் சிவ லிங்கத்தினுள்
சென்றிருந்தனனாக; தனக்கு அரிய வரம் நல்கும் சிவலிங்கம் - (அக்
குறுமுனிவன்) தனக்கு அரிய வரத்தினை நல்கியருளுஞ் சிவலிங்க
மொன்றினை, தன் பெயரால் தாபித்தான் - தனது பெயரினால் நிறுவினான்;
தன் இனக் கருணை வசிட்டாதி முனிவர்களும் - அவன் இனமாகிய
அருளையுடைய வசிட்டன் முதலிய முனிவர்களும், தம் பெயரால் இலிங்கம்
கண்டார் - தந்தம் பெயரினால் ஒவ்வோ ரிலிங்கத்தினை நிறுவினார்கள்.
இச்சைவடிவு
- சுதந்திர வடிவு. (52)
ஏத்தியருச்
சனைசெய்து நினைவிலரி தாயன்பி லெளிய வட்ட
மூர்த்தியையங் கயற்கண்ணி யன்பனைமுப் போதும்போய் முடிதாழ்ந்
தின்பம்
பூத்தமனத் தினராகிக் கருவித்தேன் பொதிந்தசிறு புட்போ லந்த
மாத்தலனில் வசிட்டாதி முனிவர்தபோ வனஞ்செய்து வதிந்தார்
மன்னோ.
|
(இ
- ள்.) ஏத்தி அருச்சனை செய்து - (தாம் நிறுவிய
சிவலிங்கங்களைத்) துதித்து அருச்சித்து, நினைவில் அரிதாய் அன்பில்
எளிய அட்ட மூர்த்தியை - நினைத்தற்கு அரிதாகி அன்பிற்கு எளிய அட்ட
மூர்த்தியும், அங்கயற்கண்ணி அன்பனை - அங்கயற்கண்ணம்மையின்
தலைவருமாகிய சோமசுந்தரக் கடவுளை, முப்போதும் போய் முடி தாழ்ந்து
- மூன்று காலங்களிலுஞ் சென்று தலை வணங்கி, இன்பம் பூத்த
மனத்தினராகி - இன்பம் நிறைந்த மனத்தினை யுடையராய், கருவித் தேன்
பொதிந்த சிறு புள்போல் - மிக்க தேனடையில் மொய்த்த வண்டுகள் போல,
அந்த மாத் தலனில் - அந்தச் சிறந்த பதியின்கண், வசிட்ட ஆதி முனிவர்
- வசிட்டர் முதலிய முனிவர்கள் தபோவனம் செய்து வதிந்தார் - தவ
வனமொன் றாக்கி அதிற் றங்கி யிருந்தனர்.
கருவி
- தொகுதி. சிறுபுள் - ஈ, வண்டு. தேனிலே மொய்த்த வண்டு
அதனை நுகர்ந்து சலனமற் றிருந்தாற் போன்று சிவானந்தம் நுகர்ந்து
சலிப்பற் றிருந்தனர் என்க. (53) திருவாலவாய்க் காண்டம் முற்றிற்று. ஆகச்
செய்யுள் 3363.
திருவிளையாடற்
புராணம் முற்றுப்பெற்றது.
பரஞ்சோதி
முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணத்திற்கு
நடுக்காவேரி மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய உரை முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்.
|