திருச்சிற்றம்பலம்
மதுரை
யறுபத்துநான்கு திருவிளையாடற்போற்றிக் கலிவெண்பா.
|
காப்பு.
நாற்றிக்கும்
போற்று நதிமதுரைச் சொக்கரையாம்
போற்றிக் கலிவெண்பாப் போற்றிசெயச் - சீற்றமதன்
றைக்குஞ் சரமுகத்தான் சாயவிழித் தோனுதவு
கைக்குஞ் சரமுகத்தான் காப்பு. |
பூமேவு கற்பகநா டாளும்
புரந்தரனார்
தீமை விருத்திரனைச் செற்றபழி - போமாறு
பொற்கமலந் தோய்ந்து விமானமிசைப் பூசிக்க
நற்கருணை செய்த நலம்போற்றி - நற்றவத்தோர்
ஈசனார் சாத்து மெழின்மலரைக் கால் சிதைத்த
வாசவனார் வெள்ளானை மண்ணிழிந்து - பூசனைசெய்
தல்லற் படுசாபந் தீர வருள்சுரந்த
மல்லற் கருணை வளம்போற்றி - நல்வணிகன்
கண்டுவந்து கூறக் கனவினருட் சித்துருவங்
கொண்டுவந்து காடெறிந்து கோநகரங் - கண்டிடெனக்
கொத்தறா நிம்பக் குலசே கரனையெதிர்
சித்தரா யாட்கொண்ட சீர்போற்றி - பத்தி
மலையத் துவசன் மகந்தன்னின் மூன்று
முலையுத் தமியாய் முளைத்துக் - கலைமுழுதுங்
கற்றுமுடி சூடிக் கயற்கண்ணி வெங்கலியைச்
செற்றுலகை யாண்டிருந்த சீர்போற்றி - கொற்றமணித்
தேரேறி யெட்டுத் திசைவென்று நந்திகணப்
போரேறி வென்றெதிர்க்கும் போதிலொரு- வாரேறு
கொங்கை மறைந்தமதிக் கொம்பைமணஞ் செய்துமுடி
மங்கலஞ் செய்த வளம்போற்றி - அங்கனக
மன்றாடல் வேட்டவிரு மாதவர்க்கு வெள்ளிமன்றுள்
நின்றாடிக் காட்டு நிலைபோற்றி - குன்றமென
|