52திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



மணத்தைத் தன்னுட்படுத்தி, மணம் கான்று - மணம்வீசி, பைத்து மலர்ந்தன
- பசந்து மலர்ந்தன; பரித்தேரான் கண்டு மகிழ்ந்து - குதிரை பூட்டிய
தேரையுடைய பாண்டியன் அதனைக்கண்டு மகிழ்ந்து.

     புலப்படாமையின் பொய்யென்று கூறத்தக்க இடையென்பார்.
‘பொய்த்திடு நுண்ணிடை’ என்றார். பூண்டார் என்னும் முற்று
தொழில்மேனின்றது. அரும்பர், ஈற்றுப்போலி. அரும்பருடைந்து என்னுஞ்
சினைவினை முதன்மேல் நின்றது. பைத்து, பசுமையென்னும் பண்படியாகப்
பிறந்த வினையெச்சம். (5)

செருக்கிய வண்டு விழாமலர் கொய்து தெரிந்தாய்ந்து
நெருக்கிய விண்டை நிரைத்தொடை தொங்க னெடுந்தாமம்
மருக்கிளர் கண்ணி தொடுத்தணி வித்து வணங்காரூர்
கருக்கிய கண்ணுத லார்திரு மேனி கவின்செய்தான்.

     (இ - ள்.) செருக்கிய வண்டு விழாமலர் கொய்து தெரிந்து ஆய்ந்து -
கள்ளுண்டு களித்த வண்டுகள் மோவாத மலர்களைக் கொய்து குற்றமில்லன
தெரிந்து காம்பு முதலியன ஆய்ந்து, நெருக்கிய இண்டை நிரைத்தொடை
தொங்கல் நெடுந்தாமம் - நெருங்கத்தொடுத்த இண்டையும் வரிசையாகிய
தொடையும் தொங்கலும் நெடிய தாமமும், மருக்கிளர் கண்ணி தொடுத்து
அணிவித்து - மணம் வீசும் கண்ணியும் ஆகிய பலவகை மாலைகளைத்
தொடுத்து அணிவித்து, வணங்கார் ஊர் கருக்கிய கண்ணுதலார் திருமேனி
கவின் செய்தான் - பகைவரின் திரிபுரத்தை எரித்து நீறாக்கிய
நெற்றிக்கண்ணையுடைய சோமசுந்தரக்கடவுளின் திருமேனியை அழகு
செய்தான்.

     இண்டை - தண்டவடிவமாகத் தொடுத்தமாலை; தொடை - சதுரமாகத்
தொடுத்தமாலை; தாமம் - கோத்தமாலை; கண்ணி - வட்டவடிவமாகத்
தொடுத்த மாலை. தொடை - தொடுக்கப்படுவது; மாலை. (6)

அன்னவி யன்பொழின் மாமது ரேச ரடித்தாழ்வோன்
பொன்னவிர் சண்பக மாலைபு னைந்த புதுக்கோலம்
தன்னைவி யந்திவர் சண்பக சுந்தரர் தாமென்னா
முன்னரி றைஞ்சின னிம்பம ணிந்த முடித்தென்னன்.

     (இ - ள்.) அன்னவியன் பொழில் மாமதுரேசர் - அந்தப் பரந்த
சோலை சூழ்ந்த மதுரையில் எழுந்தருளிய சோமசுந்தரக் கடவுளின்,
அடித்தாழ்வோன் - அடியை வணங்குவோனாகிய, நிம்பம் அணிந்த
முடித்தென்னன் - வேப்ப மலர் மாலை சூடிய முடியையுடைய
அப்பாண்டியன், பொன் அவிர் சண்பகமாலை புனைந்த புதுக்கோலம்
தன்னை வியந்து - பொன்போல விளங்கும் சண்பகமாலை அணிந்த புதிய
கோலத்தைக் கண்டு வியப்புற்று, இவர் சண்பக சுந்தரர் என்னா முன்னர்
இறைஞ்சினன் - இவர் சண்பக சுந்தரர் என்று கூறித் திருமுன் வணங்கினன்.