எக்கரை
அல்குலாக உருவகஞ்செய்து கரையைப் பெண்ணாக
உருவகஞ்செய்யாமையால் இது வியனிலை யுருவகமும்; மரகதம், முத்து,
பொன், பவளம் என்னும் உவமைகளால் முறையே இலை, அரும்பு, மலர்,
மகரந்தம் என்னும் பொருள்களை இலக்கணையாகக் கூறுதலால் உருவக
வுயர்வு நவிற்சியணியும் ஆம். உகுப்ப, முற்று. திரைகடல், வினைத்தொகை.
(13)
ஊடினார் போல
வெம்பி யிலையுதிர்ந் துயிரன் னாரைக்
கூடினார் போல வெங்குங் குழைவரத் தழைத்து நீங்கி
வாடினார் போலக் கண்ணீர் வாரமெய் பசந்து மையல்
நீடினா ரலர்போற் பூத்து நெருங்கின மரங்க ளெல்லாம். |
(இ
- ள்.) மரங்கள் எல்லாம் - மரங்கள்யாவும், ஊடினார்போல
வெம்பி இலை உதிர்ந்து - ஊடிய மகளிர்போல வெம்பி இலையை உதிர்த்து,
உயிர் அன்னாரைக் கூடினார்போல - உயிரையொத்த நாயகர்களைக் கூடிய
மகளிர்போல, எங்கும் குழைவரத் தழைத்து - எவ்விடத்தும் குழைகள்
தோன்றத் தழைத்து, நீங்கி வாடினார்போல - அத்தலைவரைப் பிரிந்து
வாடுகின்ற மகளிர்போல, கண்ணீர்வார மெய்பசந்து - கண்ணீரொழுக உடல்
பசந்து, மையல் நீடினார் அலர்போல் பூத்து நெருங்கின - காமமயக்கம்
மிக்க மகளிரின் பழிச்சொல்போல பூக்கள் மலர்ந்து நெருங்கின.
ஊடினார்
உளம் வெம்பி அணிகளைக் களைதல் போல எனவும்,
கூடினார் உடல் குழையத் தழைத்தல்போல எனவும், நீங்கிவாடினார்
விழிநீரொழுக மெய் பசலை யுறுதல்போல எனவும் உவமைகளை
விரித்துரைத்துக்கொள்க. குழைவரத் தழைத்து - குழையாக வளரும்படி
தழைகொண்டு, உடல் குழையப் பூரித்து. கண்ணீர் - கண்களினின்று
பெருகுநீர், தேனாகிய நீர். பசந்து - பசுமைகொண்டு, பசலை பூத்து. அலர்
- மலர், பழிச்சொல். இது பலவயிற் போலியுவமையணி. (14)
விழைதரு காத
லார்தா மெலிவுற மெலிந்து நெஞ்சங்
குழைவுறக் குழைந்து நிற்குங் கோதிலாக் கற்பி னார்போல்
மழையறுங் கோடை * தீப்ப மரந்தலை வாட வாடித்
தழைவுறத் தழைத்து நின்ற தழீஇயபைஞ் கொடிக ளெல்லாம். |
(இ
- ள்.) விழைதரு காதலார் தாம் மெலிவுற மெலிந்து - தம்மால்
விரும்பப்பட்ட காதலர் மெலியத் தாமும் மெலிந்து, நெஞ்சம் குழைவுறக்
குழைந்து நிற்கும் - அவர் மனங் களிகூரத் தாமுங் களிகூர்ந்து நிற்கும்,
கோது இலாக் கற்பினார் போல் - குற்றமற்ற கற்புடைய மகளிர்போல, மழை
அறும் கோடை தீப்ப - மழை யற்ற கோடை தீத்தலால், மரம் தலைவாட -
மரங்கள் தலைவாட தழீஇய பைங்கொடிகள் எல்லாம் - அவற்றைச் சுற்றிய
பசிய கொடிகள் யாவும், வாடி - தாமும் வாடி, தழைவுறத் தழைத்து நின்ற -
அவைகள் தழைக்கத் தாமும் தழைத்து நின்றன.
(பா
- ம்.) * மழைவறுங்கொடை.
|