கற்புடைய
மகளிரும் காதலரும் ஈருடற்கோருயிர்போல் அன்பால்
இயைந்து நிற்பராகலின் அவருள் ஒருவரெய்தும் இன்ப துன்பங்கள்
ஏனையர்க்கும் எய்துமென்க;
ழுகாகத் திருகண்ணிற்
கொன்றே மணிகலந் தாங்கிருவர்
ஆகத்து ளோருயிர் கண்டனம் யாமின்றி யாவையுமாம்
ஏகத் தொருவ னிரும்பொழி லம்பல வன்மலையில்
தோகைக்குந் தோன்றற்கு மொன்றாய் வருமின்பத் துன்பங்களேழு |
என்னும் திருக்கோவையார்ப்பாட்டு
இங்கே சிந்திக்கற்பாலது. நின்ற, அன்
சாரியை பெறாத பலவின்பால் முற்று. இது தொழிலுவமையணி. (15)
சேட்டிகைத்
தென்கா றள்ளத் தெண்மதுச் சிதறத் தும்பி
நீட்டிசை முரலச் சாயா நின்றுபூங் கொம்ப ராடல்
நாட்டியப் புலவ னாட்ட நகைமுகம் வெயர்வை சிந்தப்
பாட்டிசைத் தாடா நின்ற பாவைமார் போன்ற வன்றே. |
(இ
- ள்.) சேண் தென்திகைக் கால்தள்ள - நெடிய தென்றிசை
யினின்று வருந் தென்றற் காற்று தள்ளுதலால், தெண் மதுச் சிதற - தெளிந்த
தேன் துளிக்க, தும்பி நீட்டிசை முரல - வண்டுகள் நெட்டிசைபாட, சாயா
நின்று ஆடல் பூங்கொம்பர் - ஒசிந்து ஆடும் பூங்கொம்புகள், நாட்டியப்
புலவன் ஆட்ட - கூத்து வல்லோன் ஆட்டுவிக்க, நகைமுகம் வெயர்வை
சிந்த - ஒளிபொருந்திய முகத்தினின்றும் வியர்வை சிதற, பாட்டு இசைத்து
ஆடாநின்ற பாவைமார் போன்ற - பாட்டுப்பாடி ஆடா நின்ற நாடக
மகளிரை ஒத்தன.
திகை
- திசை. கொம்பர், இறுதிப்போலி. கொம்பர் ஆடல்
பாவைமார் ஆடல்போன்றன என மாற்றித் தொழிலுவமை யாக்கலுமாம்.
(16)
மலர்ந்தசெவ்
வந்திப் போதும் வகுளமு முதிர்ந்து வாடி
உலர்ந்துமொய்த் தளிதே னக்கக் கிடப்பன வுள்ள மிக்க
குலந்தரு நல்லோர் செல்வங் குன்றினுந் தம்பா லில்லென்
றலந்தவர்க் குயிரை மாறி யாயினுங் கொடுப்ப ரன்றோ. |
(இ
- ள்.) மலர்ந்த செவ்வந்திப்போதும் வகுளமும் - விரிந்த
செவ்வந்தி மலரும் மகிழம் பூவும், உதிர்ந்து வாடி உலர்ந்தும் - நிலத்தில்
உதிர்ந்து வாடிப் புலர்ந்தும், அளிமொய்த்துத் தேன் நக்கக் கிடப்பன -
வண்டுகள் மொய்த்துத் தேன் உண்ணக் கிடப்பனவாயின; உள்ளம் மிக்க -
உள்ள மிகுதியையுடைய, குலம்தரு நல்லோர் - உயர்குடிப் பிறந்த
நல்லோர்கள், செல்வம் குன்றினும் - செல்வஞ் சுருங்கிய விடத்தும், தம்பால்
இல் என்று அலந்தவர்க்கு - தம்மிடத்து வந்து இல்லை என்று கூறி
வருந்தியவர்க்கு, உயிரை மாறியாயினும் கொடுப்பர் அன்றோ - தம்முயிரை
மாறியாகிலும் கொடுப்பாரல்லவா.
|