உள்ள
மிகுதி - மனவெழுச்சி; சுருங்கா உள்ளமுமாம்;
"உள்ள மிலாதவ
ரெய்தா ருலகத்து
வள்ளிய மென்னுஞ் செருக்கு" |
என்னும் திருக்குறளும்,
"வளன் வலியுறுக்கும்
உளமிலாளர்" |
என்னும் புறப்பாட்டடியும்
இங்கு நோக்கற் பாலன. பூக்கள் உலர்ந்து
கிடந்தும் அளிதேன் நக்கக்கிடக்கின்றன என்னும் பொருளை நல்லோர்
செல்வங் குன்றினும் அலந்தவர்க்கு உயிரை மாறியாயினும் கொடுப்பர்
என்னும் பொருளாற் சாதித்தலின் இது வேற்றுப்பொருள்வைப்பணி. (17)
நாறிய தண்ணந் தேமா நறுந்தளிர் கோதிக் கூவி
ஊறிய காமப் பேட்டை யுருக்குவ குயின்மென் சேவல்
வீறிய செங்கோல் வேந்தன் வெளிப்படத் தேயங் காவல்
மாறிய வேந்தன் போல வொடுங்கின மயில்க ளெல்லாம். |
(இ
- ள்.) மென்குயில் சேவல் - மெல்லிய ஆண்குயில்கள்,
நாறியதண் அம் தேமா நறுந்தளிர் கோதி - தோற்றிய குளிர்ந்த அழகிய
தேமாவின் நறிய தளிர்களைக்கோதி, காமம் ஊறிய பேட்டைக் கூவி
உருக்குவ - காமமரும்பிய பேட்டினைக் கூவி உருக்குவன; வீறிய செங்கோல்
வேந்தன் வெளிப்பட - பெருமிதமுடைய செங்கோலையுடைய பெருவேந்தன்
தோன்ற, தேயம் காவல் மாறிய வேந்தன்போல - நாடு காவல்மாறிய குறுநில
மன்னன்போல, மயில்கள் எல்லாம் ஒடுங்கின - மயில்கள் யாவும் ஒடுங்கின.
இளவேனிற்காலத்தில்
மாமரம் தளிர்த்தலும், குயில்கள் அதன்மீதிருந்து
கூவி மகிழ்தலும், மயில்கள் கூவா தொடுங்கலும் இயல்பு. நறுந்தளிர் எனப்
பின்வருதலின் நாறிய என்பதற்குத் தோன்றிய என்றுரைக்க. இளவேனிலைச்
செங்கோல் வேந்தனாகக் கொள்க. நாடு காவல் மாறி யொடுங்கிய குறுநில
மன்னன் என விரித்துக் கொள்க. (18)
பொங்கரி னுழைந்து வாவி புகுந்துபங் கயந்து ழாவிப்
பைங்கடி மயிலை முல்லை மல்லிகைப் பந்தர் தாவிக்
கொங்கலர் மணங்கூட் டுண்டு குளிர்ந்துமெல் லென்று தென்றல்
அங்கங்கே கலைக டேரு மறிவன்போ லியங்கு மன்றே. |
(இ
- ள்.) தென்றல் - தென்றற் காற்று, அங்கு அங்கே கலைகள்
தேரும் அறிவன் போல் - பல விடங்களிலுஞ் சென்று நூல்களை
ஆராய்ந்தறியும் அறிவுடை மாணவன் போல, பொங்கரில் நுழைந்து -
சோலையில் நுழைந்து, வாலி புகுந்து - தடாகத்திற் புகுந்து, பங்கயம் துழாவி
- தாமரையை அளாவி, பைங்கடி மயிலை முல்லை மல்லிகைப் பந்தர்தாவி
- பசிய மணமுள்ள இருவாட்சியும் முல்லையும் மல்லிகையுமாகிய இவற்றின்
|