பந்தரிலே தாவி,
கொங்கு அலர் மணம் கூட்டுண்டு - மகரந்தத்தையுடைய
மலர்களின் மணங்களைக் கவர்ந்து. குளிர்ந்து மெல்லென்று - குளிர்ந்து
மெதுவாய், இயங்கும் - உலாவும்.
நன்
மாணாக்கனொருவன் நல்லாசிரியர் பலருழையுஞ் சென்று அவர்கள்
பால் நூற்பொருள் பலவும் உணர்ந்து நன்னடை வாய்ந்து சாந்த
குணமுடையனாய் ஒழுகுதல் போலத் தென்றல் பல விடங்களிலுஞ் சென்று
தவழ்ந்து அங்கங்குள்ள குணங்களைக் கவர்ந்து தண்ணிதாய் மெத்தென்ற
தன்மை வாய்ந்து உலாவும் எனத் தொழிலுவமங்கொள்க.
"அருடருங் கேள்வி யமையத் தேக்கப்
பற்பல ஆசான் பாங்குசெல் பவர்போல்
மூன்றுவகை யடுத்த தேன்றரு கொழுமலர்
கொழுதிப் பாடுங் குணச்சுரும் பினங்காள்" |
என்று கல்லாடங் கூறுவது
சிந்திக்கற்பாலது. பந்தர், ஈற்றுப்போலி. (19)
தாமரை களாஞ்சி தாங்கத் தண்குயின் முழவ மேங்க
மாமரு தமருங் கிள்ளை மங்கல மியம்பத் தும்பி
காமர மிசைப்ப முள்வாய் கைதை*வா ளெடுப்ப வேனிற்
கோமகன் மகுடஞ் சூடி யிருப்பதக் குளிர்பூஞ் சோலை. |
(இ
- ள்.) தாமரை களாஞ்சி தாங்க - தாமரை காளாஞ்சி தாங்கவும்,
தண் குயில் முழவம் ஏங்க - குளிர்ந்த குயில் முழவம் ஒலிக்கவும், மாமருது
அமரும் கிள்ளை - பெரிய மருதமரத்தில் இருக்குங் கிளி, மங்கலம் இயம்ப
- மங்கலங் கூறவும், தும்பி காமரம் இசைப்ப - வண்டுகள் இசைப்பாட்டுப்
பாடவும், முள்வாய் கைதை வாள் எடுப்ப - முட்களையுடைய தாழை வாளை
ஏந்தவும், வேனில் கோமகன் மகுடம் சூடி இருப்பது - வேனிற்காலத்திற்குரிய
மன்மதன் முடிசூடி வீற்றிருக்கப்பெறுவது, அக் குளிர் பூஞ்சோலை - அந்தத்
தண்ணிய பூஞ்சோலை.
களாஞ்சி
- காளாஞ்சி; தாம்பூலமெடுக்குங் கலம். தாமரை, குயில்,
கிளி, வண்டு, தாழை என்பவற்றை முறையே காளாஞ்சி யேந்துவார்,
முழவொலிப்பார்; மங்கலங்கூறுவார், இசைபாடுவார், வாளெடுப்பார் ஆகவும்,
தாமரை மலர், குயிலொலி, கிளிமொழி, வண்டிசை, தாழைமடல் என்பவற்றை
முறையே காளாஞ்சி, முழவு, மங்கல வாழ்த்து, இசைப்பாட்டு, வாள் ஆகவும்
கொள்க. இங்கேகூறிய வெல்லாம் ஓர் அரசற்கும் மன்மதனுக்கும்
பொருந்துமாறு காண்க. வேனிற் கோமகன் என்பதற்கு வேனிலாகிய அரசன்
என்றுரைப்பாரு முளர்.
"தண்டலை
மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக்
கொண்டல்கள் முழவி னேங்கக் குவளைகண் விழித்து நோக்கத்
தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்
வண்டுக ளினிது பாட் மருதம்வீற் றிருக்கு மாதோ |
*
(பா - ம்.) முள்வாய்க் கைதை.
|