என்னும் கம்பராமாயணப்பாட்டு
இதனுடன் ஒருபுடை ஒத்து நோக்கற்பாலது.
இச் செய்யுள் உருவகவுயர்வுநவிற்சி. (20)
கலையினா
னிறைந்த விந்து காந்தமண் டபத்துஞ் * செய்த
மலையினு மெழுது மாட மருங்கினு நெருங்கு சோலைத்
தலையினுங் கமல வாவித் தடத்தினுந் தண்முத் தார
முலையினு மன்றிக் கோடை முடிவிடங் காணார் மைந்தர்.? |
(இ
- ள்.) மைந்தர் - ஆடவர்கள், கலையினால் நிறைந்த இந்துகாந்த மண்டபத்தும்
- கலைகளால் நிறைந்த சந்திரகாந்தக் கல்லாலாகிய மண்டபத்திலும், செய்த மலையினும்
- செய்குன்றிலும், எழுதும் மாட
மருங்கினும் - சித்திரம் வரைந்த மாடத்திடத்தும், நெருங்கு சோலைத்தலையினும் - நெருங்கிய
சோலையினிடத்தும், கமலவாவித்
தடத்தினும் - தாமரையையுடைய பொய்கையினிடத்தும், தண்முத்து
ஆரம்முலையினும் - குளிர்ந்த முத்தாரமணிந்த மகளிர் கொங்கைகளிலும்,
அன்றி - அல்லாமல், கோடைமுடிவு இடம் காணார் - வேனில் வெம்மையை
ஆற்றும் இடம் வேறு காணார்.
கலை
நிறைதல் இந்துவுக்கு அடை. இந்து காந்தம் - சந்திரனைக்கண்டு நீர் கக்கும் கல். எழுது
மாடம் - சித்திர மண்டபம், சந்திரகாந்த மண்டபம் முதலிய இடங்களில் மகளிர் முலைத்தடத்தில்
என்பது கருத்தாகக் கொள்க. (21)
நிலந்தரு திருவி னான்ற னிழன்மணி ? மாடக் கூடல்
வலந்தரு தடந்தோண் மைந்தர் வானமும் வீழும் போக
நலந்தரு மகளி ரோடு நாகநா டவர்தஞ் செல்வப்
பொலந்தரு வனைய காட்சிப் பூம்பொழி னுகர்வான் போவார். |
(இ
- ள்.) நிலம்தரு திருவினான்தன் - மாற்றாரது நிலத்தைத்தரும்
போர்த்திருவினையுடைய வங்கிய சூடாமணி மாறனது, நிழல் மணிமாடக்கூடல்
- ஒளியினையுடைய மணிகள் அழுத்திய மாடங்கள் நிறைந்த கூடலிலுள்ள,
வலம் தருதடம் தோள்மைந்தர் - வெற்றியைத் தரும் பெரிய
தோள்களையுடைய காளையர், வானமும் வீழும் போக நலம்தரு மகளிரோடு
- விண்ணவரும் விரும்பும் இன்ப நலத்தை அளிக்கும் மாதராருடன்,
நாகநாடவர்தம் செல்வப் பொலம்தரு அனைய காட்சி - அவ்வான நாடரின்
செல்வமிக்க பொன்மயமாகிய கற்பகச்சோலைபோன்ற தோற்றத்தையுடைய,
பூம்பொழில் நுகர்வான் போவார் - பூஞ்சோலையின் இன்பத்தை நுகர்தற்குப்
போவாராயினர்.
"நிலந்தரு திருவிற்
பாண்டியன்" |
என்னும் தொல்காப்பியப்
பாயிரவடிக்கு நச்சினார்க்கினியர் கூறிய
பாருள்காணற் பாலது; நிலந்தரு திருவினான்ற எனப் பாடமோதி,
மரக்கலத்தாலுமன்றி நிலவுலகு தருஞ்செல்வத்தால் நிறைந்த என்று
|