64திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     (இ - ள்.) நீடும் தரங்கம் இரங்கும் நிறை நீர் நிலையே அன்றி -
நீண்ட அலைகள் ஒலிக்கும் நிறைந்த ஓடைகளே அல்லாமல், பாடும் சுரும்பு
உண் கழுநீர் பைந்தாள் குமுதம் பதுமம் - இசைபாடும் வண்டுகள் மது
உண்ணும் குவளையையும் பசிய தாளையுடைய ஆம்பலையும் தாமரையையும்,
கோடும் பூத்த என்ன - பூங்கொம்புகளும் பூத்தனபோல, கொடி ஏர்
இடையார் குழையும் தோடும் கிடந்த வதனத் தொகையால் - கொடி போன்ற
அழகிய இடையையுடைய மகளிரின் குண்டலமும் தோடும் பொருந்திய
முகங்களின் தொகுதியால், சோலை பொலிவ - சோலைகள் விளங்காநின்றன.

     நீரிற் பூத்தற்குரிய குவளை ஆம்பல் தாமரை என்பன கோட்டிற்
பூத்தாற் போல மகளிருடைய கண் வாய் முகம் என்பன விளங்கின வென்க.
குவளை முதலியவற்றைக் கோடு பூத்தவென்ன என்றது இல்பொருளுவமை.
(29)

பிடிக ளென்ன நடந்தா ருடன்போய்க் கொழுநர் பெருந்தண்
கொடிகண் மிடைந்த வில்லி லியக்கர் போலக் குறுகிக்
கடிகொள் பனிநீர் தெளித்து வேடை தணித்துங் கன்றும்
அடிகள் பிடித்துஞ் சேடி யவர்கைக் குதவி யாவார்.

     (இ - ள்.) கொழுநர் - கணவர்கள், பிடிகள் என்ன நடந்தாருடன்
போய் - பெண் யானைகள் போல நடந்த மகளிருடன் சென்று, பெருந்தண்
கொடிகள் மிடைந்த இல்லில் - பெரிய குளிர்ந்த கொடிகள் மிடைந்த
இல்லின்கண், இயக்கர் போலக் குறுகி - இயக்கர்கள் போலச் சார்ந்து, கடி
கொள் பனிநீர் தெளித்து வேடைதணித்தும் - மணங்கொண்ட
பனிநீரைத்தெளித்து வெம்மையை ஆற்றியும், கன்றும் அடிகள் பிடித்தும் -
நடத்தலாற் கன்றிய அவர்கள் அடிகளைப் பிடித்தும், சேடியர்கைக்கு
உதவியாவார் - தோழியர்களிள் கைகளுக்கு உதவி புரிவாராவர்.

     கொடிகள் மிடைந்தஇல் - இல்போன்று கொடிமிடைந்த இடம்; லதாக்
கிருஹம். சேடியர் செய்யும் பணியைத் தாம் செய்தலால் அவர்
கைக்குதவியாவார் என்றனர். (30)

மைவார் தடங்கண் மடவார் வளைப்பார் கொம்பின் மலரைக்
கொய்வார் குமிழ்மோந் துயிர்ப்பார் குழையுஞ் செவியுங் குழலும்
பெய்வார் மகிழ்ச்சி செய்வார் பேரா மையல் கூர
எய்வார் கணைபோற் றைப்பக் கொழுநர் மார்பத் தெறிவார்.

     (இ - ள்.) மைவார்தடம் கண்மடவார் - மைதீட்டிய நீண்டபெரிய
கண்களை யுடையமகளிர், வளைப்பார் கொம்பின் மலரைக்கொய்வார் -
கொம்புகளை வளைத்து அவற்றின் மலர்களைக் கொய்து, குமிழ் மோந்து
உயிர்ப்பார் - குமிழம்பூப்போன்ற மூக்கில் மோந்து உயிர்த்து, குழையும்
செவியும் குழலும் பெய்வார் - குழைகளிலும் காதுகளிலும் கூந்தலிலும்
அணிந்து, மகிழ்ச்சி செய்வார் - (நாயகர்களுக்கு) மகிழ்ச்சியை
விளைப்பார்கள்; பேரா மையல் கூர - நீங்காத காமமயக்கம் மிக, எய்வார்