மகளிரே
தெய்வம் என்பார் உலகாயதர்;
"ஊடுவ துணர்வதுற்ற கலவிமங் கையரை
யுள்கி
வாடுவ தடியில் வீழ்ந்து வருந்துவ தருந்த வம்பின்
கூடுவ துணர்வு கெட்டுக் குணமெலாம் வேட்கை யேயாய்
நீடுவ தின்ப முத்தி யித்தினின் றார்கண் முத்தர்"
|
என உலகாயதன் கூற்றாகச்
சிவஞான சித்தியார்ப்
பரபக்கத்துள் ஓதுதல்
காண்க. மகளிர் வளைப்ப இயல்பாக நடுங்கி மலர் சிந்தித் தேன் சொரியும்
கொம்பினை வேட்கையால் உடல் கம்பித்து அவரருளைப்பெற வேண்டி
அடிகளில் மலர் தூவிக் கண்ணீருடன் வணங்குவனவாகக் கற்பித்தார். மலர்
முகம் - மலரினிடம், மலர் போலும் முகம். கண்ணீர் - கள்ளாகிய நீர், விதி
நீர். உலகியல் என்றது ஆடவர் ஒழுகுந்தன்மை. மெய்யே போலும் என்றது
தற்குறிப்பு. (33)
மைக்கணா
ளொருத்தி யெட்டா நிமிர்கொம்பை வளைக்குந் தோறுங்
கைக்குநேர் படாமை வாடுங் கடிமலர்க் கொடிபோ னிற்பத்
தைக்கும்பூங் கணைவே ளன்னா னொருமகன் றலைப்பட் டென்னை
எய்க்கின்றாய் தோண்மே லேறிப் பறியென வேந்தி நின்றான். |
(இ
- ள்.) மைக்கணாள் ஒருத்தி - மைதீட்டிய கண்ணையுடைய ஒரு
பெண், நிமிர் கொம்பை எட்டா வளைக்குந் தோறும் - உயர்ந்த
கொம்பொன்றை எட்டிவளைக்குந் தோறும், கைக்கு நேர்படாமை - கைக்கு
எட்டாமையால், வாடும் கடிமலர்க்கொடி போல் நிற்ப - வாட்டமுற்ற
மணமுள்ள மலர்க்கொடி போலச் சோர்ந்து நிற்க, தைக்கும் பூங்கணை வேள்
அன்னான் ஒரு மகன் தலைப்பட்டு - பாய்ந்துருவும் மலர்க் கணையையுடைய
மன்மதன் போன்றானாகிய ஓர் ஆண்மகன் எதிர்ப்பட்டு, என்னை
எய்க்கின்றாய் - என்னை வாடுகின்றாய், தோள்மேல் ஏறிப் பறி என -
எனது தோளின் மேல் ஏறி மலர்களைக் கொய்வாயாக வென்று கூறி, ஏந்தி
நின்றான் - அவளைத்தாங்கி நின்றான்.
நேர்படாமையின்
என உருபு விரிக்க. யானிருக்க நீ இளைப்ப
தென்னை என்றானென்க. இது கலவியைக் குறிப்பாலுணர்த்தலின் உதாரம்
என்னும் குணவணியாகும். (34)
தையலா ளொருத்தி யெட்டா மலர்க்கொம்பைத் தளிர்க்கை நீட்டி
ஐயநுண் மருங்கு னோவ வருந்தலு மாற்றாக் கேள்வன்
ஒய்யென விதுவு மென்னை யூடிய மகளி ரேயோ
கொய்யென வளைத்து நின்றான் கண்முத்தங் கொழிப்ப நின்றாள். |
(இ
- ள்.) தையலாள் ஒருத்தி - ஒரு பெண், எட்டாமலர்க் கொம்பை
- எட்டாத பூங்கொம்பொன்றை வளைக்க, தளிர்க்கை நீட்டி - தளிர்போன்ற
தனது கையை நீட்டி, ஐயம் நுண்மருங்குல் நோவவருந்தலும் - (உண்டோ
இல்லையோ என்னும்) ஐயம் விளைக்கும் நுண்ணிய இடை வருந்த
வருந்தலும், ஆற்றாக்கேள்வன் - அதனைப் பொறாத அவள் கொழுநன்,
|