எம்மைப் பணிவது என்
என்று நக்கு - எம்மை வணங்குவது என் கருதி
என்று கூறிச் சிரித்து, பரிவுமேல் பரிவு செய்தாள் - (தலைவனுக்குந்)
துன்பத்தின் மேல் துன்பஞ் செய்தாள்.
மற்றொருத்தியைத்
தலையிடை ஒளித்துவைத்திருக்கின்றீர் என்பாள்
கங்கை மணாளனை யொப்பீர் எனச் சுருங்கச் சொல்லல் என்னும்
அணிதோன்றக் கூறினாள். வெகுளியால் எம்மை என்றும், பணிவது கரவு
என்பது தோன்றப் பணிவது என் என்றும் கூறினாளென்க. முன்னிருந்த
துன்பத்தின் மேலும் மிக்க துன்பம் விளைத்தனள் என்பார் பரிவுமேற் பரிவு
செய்தாள் என்றார். (40)
மதுகைவா ளொருவ னங்கோர் மங்கைதன் வடிவைநோக்கிப்
பதுமமே யடிகை காந்தள் பயோதரங் கோங்குகாவிப்
புதுமலர் விழிவா யாம்பற் போதுநும் மூர லெப்போ
ததனைவாய் திறந்து காட்டிப் போமினென் றடுத்து நின்றான். |
(இ
- ள்.) மதுகைவாள் ஒருவன் அங்கு ஓர் மங்கை தன் வடிவை
நோக்கி - வலியவாளையுடைய ஒரு ஆடவன் அங்கு ஒரு பெண்ணின்
வடிவத்தை நோக்கி, அடி பதுமமே - (நுமது) பாதம் தாமரை மலரே, கை
காந்தள் - கை காந்தள் மலரே, பயோதரம் கோங்கு - கொங்கை கோங்கின்
அரும்பே, விழி காவிப்புது மலர் - விழி புதிய குலோற்பல மலரே, வாய்
ஆம்பல் போது - வாய் ஆம்பல் மலரே, நும்மூரல் எப்போது - நுமதுபல்
எந்த மலரோ (அறியேன்), அதனை வாய்திறந்து காட்டிப்போமின் என்று -
அதனை வாய் திறந்து காண்பித்துப் போவீராக என்று கூறி, அடுத்து
நின்றான் - நெருங்கி நின்றான்.
நினது
புன்னகையாற் றலையளி செய்ய வேண்டுமென இரப்பான்
மூரல் எப்போது அதனை வாய்திறந்து காட்டுக என வேறோராற்றாற்
கூறினான். நும் என்றும் போமின் என்றும் பன்மையாற் கூறினது தன்
எளிமை தோன்ற அவளை உயர்த்துச் சொல்லியவாறு. இது வஞ்ச
நவிற்சியணி. (41)
விடைத்தனி யேறன் னானோர் விடலையோர் வேற்க ணாண்முன்
கிடைத்துநும் மிடத்தெ னெஞ்சங் கெட்டுவந் தொளித்த தல்குற்
றடத்திடை யொளித்த தேயோ தனத்திடை யொளித்த தோபூம்
படத்தினைத் திறந்து காட்டிப் போகெனப் பற்றிச் சென்றான். |
(இ
- ள்.) தனிவிடை ஏறு அன்னான் ஓர் விடலை - ஒப்பற்ற
இடபவேறு போல்வானாகிய ஒரு விடன், ஓர் வேல்கணாள் முன் கிடைத்து
- ஒரு வேல் போன்ற கண்ணையுடைய பெண்ணின் முன் சென்று, என்
நெஞ்சம் கெட்டு வந்து நும்மிடத்து ஒளித்தது - என் மனம் (என்னினின்றும்)
நீங்கி வந்து நும்பால் ஒளித்தது; அல்குல் தடத்திடை ஒளித்ததேயோ - அது
அல்குலிடத்து ஒளித்ததோ, தனத்திடை ஒளித்ததோ - கொங்கையின் கண்
ஒளித்ததோ, பூம்படத்தினைத் திறந்து காட்டிப்போக என - (அவற்றை மூடிய)
அழகிய ஆடையைத் திறந்து காட்டிப் போவாயாக வென்று கூறி, பற்றிச்
சென்றான் - அவளைப் பின்றொடர்ந்து சென்றான்.
|