72திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



உவமை கூறியது உவமை வழுவாயினும் பூக்கொய்தலிற் பெரிது முயன்றனர்
என்னும் குணமிக்குத் தோன்றுதலால் வழுவன் றென்க. (44)

மையுண் கண்ணியர் மைந்தரோ டம்மலர்
கொய்யுஞ் செல்வ நுகர்ந்து கொழுங்கணும்
மெய்யுந் தோயிற் கொழுநரின் வேற்றுமை
செய்யும் பொய்கை திளைப்பச்சென் றாரரோ.

     (இ - ள்.) மைஉண் கண்ணியர் - மையுண்ட கண்களை யுடைய
அம்மகளிர,் மைந்தரோடு - ஆடவரோடு, அம்மலர் கொய்யும் செல்வம்
நுகர்ந்து - அப்பூக் கொய்யும் செல்வத்தைத் துய்த்து, தோயில் - கலந்தால்,
கொழுங்கணும் மெய்யும் - மதர்த்த கண்களையும் உடலையும், கொழுநரின்
வேற்றுமை செய்யும் - கொழுநர் வேறுபடுத்துவதுபோல் வேறுபடுத்தும்,
பொய்கை திளைப்பச்சென்றார் - பொய் கையின்கண் நீராட்டயரச் சென்றனர்.

     செல்வம் என்றது காமத்தை; சீவகசிந்தாமணியில் "வீணைச் செல்வம்"
என்பதற்கு ‘இசை நாடகம் காமத்தை விளைத்தலின் அவற்றாற் பிறக்கும்
காமத்தை வீணைச் செல்வம் என்றார்’ என நச்சினார்க்கினியர்
உரைத்திருப்பது நோக்கற்பாலது. கொழுநரைத் தோய்தலால் உண்டாகும்
வேறுபாடு பொய்கையிற் றிளைத்தலாலும் உண்டாகுமென்பது
கருத்தாகக்கொள்க. அவ்வேறுபாடாவன - கண் சிவத்தல், இதழ் வெளுத்தல்,
கொங்கைமேற் சந்தனக்கோலம் அழிதல், உடம்பு அலசல் முதலியன.
‘கொழுநரின் வேற்றுமை செய்யும் பொய்கை’ என்றதும் அவர்கள் காமக்
குறிப்புடன் திளைப்பச் சென்றன ரென்பதைக் குறித்தற் பொருட்டாம். அரோ,
அசை. பெருங்காப் பியத்துட் புனைந்து கூறுதற்குரிய புனல் விளையாட்டு
இச்செய்யுள் முதலாகக் கூறுகின்றார். (45)

அன்ன மன்னவ ராடுங் கயந்தலை
நன்னர் நீல நளினங் குமுதமென்
றின்ன வன்றி யெழின்முல்லை சண்பகம்
பொன்னங் கோங்கமும் பூத்தது போன்றதே.

     (இ - ள்.) அன்னம் அன்னவர் ஆடும் கயந்தலை - அன்னம்
போன்ற அம்மகளிர் நீர் விளையாடும் பொய்கையானது, நன்னர் நீலம்
நளினம் குமுதம் என்று இன்ன அன்றி - நல்ல நீலோற்பலமும் தாமரையும்
ஆம்பலுமென்று கூறப்படும் இம்மலர்களையே யன்றி, எழில்முல்லை சண்பகம்
பொன்அம் கோங்கமும் - அழகிய முல்லையையும் சண்பகத்தையும்
பொன்போன்ற அழகிய கோங்கினையும், பூத்தது போன்றது பூத்திருத்தலை -
ஒத்தது.

     இந்நூலாசிரியர் கயந்தலை என்பதனைக் கயமென்னும் பொருளிற்
பல விடத்தும் வழங்குவர். நன்னர், பண்புப்பெயர்; நல்பகுதி, நர் விகுதி.
நீர் விளையாடப் புகுந்த மகளிர் பற்களும் உடலும் தனமும் பொய்கையிலே
தோன்றுதலால் அப்பொய்கை நீர்ப்பூவே யன்றிக் கொடிப்பூவும்