மலர்களும், முகங்களும்
கமலமும் - முகங்களும் தாமரை மலர்களும், வாயும்
வண்ண ஆம்பலும் - வாய்களும் அழகிய ஆம்பல் மலர்களும், தத்தமில்
மலைவன அனைய - தங்கள் தங்களுக்குள்ளே போர் புரிதலை ஒத்தன.
மலர்கள்
மகளிர் அவயவங்களோடு தாக்கல் மலைதலை யொத்தன
வென்க. தொறும், தொழிற் பயில்வுப் பொருளில் வந்த இடைச்சொல்.
மலைவன, தொழிலை யுணர்த்திற்று. (48)
கூழை பாசியின் விரிந்திட மகிழ்ந்துநீர் குடையும்
மாழை யுண்கணார் கொங்கையு முகங்களு மருங்கர்
சூழ ரும்பொடு மலர்ந்தசெந் தாமரைத் தொகுதி
ஆழ்த ரங்கநீ ரிடைக்கிடந் தலைவன வனைய. |
(இ
- ள்.) கூழை பாசியின் விரிந்திட - கூந்தல் பாசியைப்போல விரிய,
மகிழ்ந்து நீர் குடையும் - மகிழ்ந்து நீராடுகின்ற, மாழை உண்கணார் -
மாவடுவின் பிளவு போன்ற மையுண்ட கண்களையுடைய மகளிரின்
கொங்கையும் முகங்களும் - கொங்கைகளும் முகங்களும், ஆழ்தரங்கம்
நீரிடைக் கிடந்து அலைவன - ஆழ்ந்த அலைகளையுடைய நீரின்கட் கிடந்து
அசைவனவாகிய, மருங்கர்சூழ் அரும்பொடு - பக்கத்திற் சூழ்ந்த
மொட்டுகளோடு, மலர்ந்த செந்தாமரைத் தொகுதி அனைய - மலர்ந்த
செந்தாமரைக் கூட்டங்களை ஒத்தன.
அலைவனவாகிய
அரும்பையும் மலரையும் ஒத்திருந்தன வென்க.
கொங்கையும் முகங்களும் அசைதல் அரும்பொடு மலர்த்தொகுதி அலைதலை
யொத்தன என ஒரு சொல் வருவித்துரைத்தலுமாம். மருங்கர், போலி.
அலைவன, தொழிற்பெயர். (49)
தூய நீர்குடைந் தேறுந்தன் றுணைவியைத் துணைவன்
வாயுங் கண்களும் வேறுற்ற வண்ணங்கண் டென்கண்
ஏய வின்னுயி ரனையவ ளெங்குளா ளென்றான்
காயும் வேற்கணாள் முலைகுளிப் பாட்டினாள் கண்ணீர். |
(இ
- ள்.) தூயநீர் குடைந்து ஏறும் தன் துணைவியை - தூயநீரில்
மூழ்கிக் கரையேறுந் தனது தலைவியை, துணைவன் - தலைவன், வாயும்
கண்களும் வேறுற்ற வண்ணம் கண்டு - அவள் வாயும் விழகளும்
வேறுபட்டிருக்குந் தன்மையைக் கண்டு (தன் தலைவி அல்லள் இவள்
என்று கருதி), என்கண் ஏய இன் உயிர் அனையவள் எங்குளாள் என்றான்
- என்னிடத்துப் பொருந்திய இனிய உயிர் போல்வாள் எங்கே உள்ளாள்
என்று வினவினான்; காயும் வேல்கணாள் - (அதனைக் கேட்ட அவள்)
கொல்லுலையிற் காயும் வேல்போலுஞ் சிவந்த கண்களையுடையளாய்,
கண்ணீர் முலை குளிப்பாட்டினாள் - கண்ணீரால் முலைகளைக்
குளிப்பாட்டினாள்.
வாயுங்
கண்களும் வேறுற்ற வண்ணம் - செந்நிறமுடைய வாய்
வெண்ணிறமாகவும் வெண்ணிறமுடைய கண் செந்நிறமாகவும் மாறிய தன்மை.
தலைவியின் வாயுங் கண்களும் இங்ஙனம் நிறம் மாறினமையாலே அவளை
|