வேறு மாதாகக் கருதி
என் உயிரனையவள் எங்குளாள் என வினாவினான் : அது கேட்ட தலைவி அவன் மற்றொருத்தியைத்
தன் இன்னுயிரனையளாகக்
கொண்டு வினாவினன் எனக்கருதி வெகுண்டு அழுதனள் என்க. காயும் -
பகைவரைக் கொல்லும் என்றுமாம். காயும் வேற்கணாள் என்றது அவளது
வெகுளியைக் குறித்தவாறு. கண்ணீரால் என உருபுவிரிக்க. மிக அழுதாள்
என்பதனை வேறுவகையாற் கூறினார். (50)
மங்கை நல்லவ
ளொருத்திநீ ராடுவான் மகிழ்நன்
அங்கை பற்றின ளேகுவாளவன்குடைந்*தேறும்
பங்க யக்கணா ளொருத்தியைப் பார்த்தலுஞ் சீசீ+
எங்கை யெச்சினீ ராடலே னெனக்கரை நின்றாள். |
(இ
- ள்.) மங்கை நல்லவள் ஒருத்தி - மங்கைப் பருவமுடைய ஒரு
பெண் நீர் ஆடுவான் - நீராடுதற் பொருட்டு, மகிழ்நன் அங்கைபற்றினள்
ஏகுவாள் - கொழுநனது அழகிய கையைப் பிடித்துக்கொண்டு செல்கின்றவள்,
அவன் - அக்கொழுநன், குடைந்து ஏறும் பங்கயக்கணாள் ஒருத்தியைப்
பார்த்தலும் - அங்கு நீராடிக் கரையேறும் தாமரை போன்ற கண்களையுடைய
ஒரு பெண்ணைப் பார்த்த வளவில், சீசீ எங்கை எச்சில்நீர் ஆடலேன் என -
சீச்சீ எனது தங்கையின் எச்சிலாகிய நீரில் யான் ஆடேன் என்றுகூறி, கரை
நின்றாள் - கரையிலே நின்றனள்.
ஆடுவான்,
வானீற்று வினையெச்சம். பற்றினள், முற்றெச்சம். ஏகுவாள்
பெயர். சீ சீ, இகழ்ச்சிக் குறிப்பு. நீராடச் சென்ற இருவருள் தலைவன் தன்
னெதிர்ப்பட்ட ஓர் மாதைப் பராக்காக நோக்க, அது கண்ட தலைவி இவள்
இவன் காமக்கிழத்தியாகல் வேண்டும் அதனாலன்றோ உவந்து நோக்கினான்
எனக் கருதி, அவள் ஆடிய நீரிலேதான் ஆடேனெனப்புலந்து நின்றாள்
என்க. (51)
வனைந்த பைங்கழ லான்புன லாடலின் மார்பின்
நனைந்த குங்குமத் தலையெறி நளினமொட் டழுந்தப்
புனைந்த கொங்கையால் வடுப்படப் பொறித்தவள் யாரென்
றினைந்த ழுங்கினா ணெய்சொரி யெரியென வொருத்தி. |
(இ
- ள்.) வனைந்த பைங் கழலான் - பசிய வீரக்கழலை யணிந்த
ஒரு ஆடவன், புனல் ஆடலின் - நீராடுதலால், மார்பில் நனைந்த குங்குமத்து
- அவனது மார்பின்கண் நனைந்துள்ள குங்குமக் குழம்பில், அலைஎறி
நளினமொட்டு அழுந்த - அலைகளால் வீசப்பட்ட தாமரை மொட்டு அழுந்தி
வடுப்படுத்த, ஒருத்தி - (அதனைக்கண்ட) தலைவி, புனைந்த கொங்கையால்
வடுப்படப் பொறித்தவள் யார் என்று - முத்து மாலை அணிந்த
கொங்கைகளால் வடுப்படுமாறு அழுத்தியவள் யார் என்று வினவி, இனைந்து
- வருந்தி, நெய்சொரி எரிஎன இனைந்து அழுங்கினாள் - நெய் சொரிந்த
நெருப்புப் போலச் சினம் மிக்கு நைந்து வருந்தினாள்.
(பா
- ம்.) * அவன் குடைந்து. +பார்த்தனன் சீச்சீ.
|