80திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     (இ - ள்.) மாசு இல் நானமும் - குற்ற மில்லாத மான்மதமும், சூடிய
மாலையும் - அணிந்த மாலைகளும், மெய்யில் பூசு சாந்தமும் ஆரமும் -
மெய்யினிற் பூசிய சந்தனமும் முத்தாரமுமாகிய இவற்றை, பொய்கைக்குக்
கொடுத்து - வாவிக்குக் கொடுத்து, வாசம் மெய்யினில் - மணமிக்க தங்கள்
மேனியில், அம்புய வாசமும் மயங்க - தாமரை மலரின் மணமும் விரவ,
இளையவர் ஆசை மைந்தரோடு - இளமை வாய்ந்த மகளிர் அன்புள்ள
ஆடவருடன், அகன்கரை அடைவார் - அகன்ற கரையை அடைவாராயினர்.

     இளையவர் மகளிரை யுணர்த்திற்று;

"பந்தினை யிளையவர் பயிலிடம்"

எனக் கம்பர் கூறுதலுங் காண்க. அகன், லகரம் னகரமாய்த் திரிந்தது
புணர்ச்சியில் விகாரம்; மரூஉ என்றுமாம். நானம் முதலியவற்றைப்
பொய்கைக்குக் கொடுத்து அங்குள்ள அம்புயவாசம் பெற்றனர் என்றமையால்
இது பரிவருத்தனையணி. (61)

தைய லார்சிலர் நனைந்தநுண் டானையுட் பொதிந்த
மெய்யெ லாம்வெளிப் படக்கரை யேறுவான் வெள்கி
ஐய தாபொலந் துகிலென வன்பரைக் கூய்க்கண்
செய்ய மாயனைக் கேட்குமாய்ச் சிறுமிய ரொத்தா.

     (இ - ள்.) தையலார் சிலர் - மகளிர் சிலர், நனைந்த நுண்தானையுள்
- நனைந்த மெல்லிய ஆடையுள்ளே, பொதிந்த மெய் எலாம் - மறைபட்ட
உறுப்புக்கள் யாவும், வெளிப்பட - வெளித்தோன்றலால், கரை ஏறுவான்
வெள்கி - கரை ஏற வெட்கி, அன்பரைக் கூய் - தங்கள் தங்கள் காதலரைக்
கூவி, ஐய பொலம் துகில் தா என - ஐயனே பொன்னாடை அளிப்பாயென்று
கேட்டலால் (அவர்கள்), செய்ய கண் மாயனைக் கேட்கும் - சிவந்த
கண்களையுடைய கண்ணனை (துகில்) கேட்கின்ற, ஆய்ச் சிறுமியர் ஒத்தார்
- இடைச் சிறுமியரைப் போன்றார்.

     ஆடைமிக்க மென்மை யுடைமையால் நனைந்த விடத்து அற்றம்
வெளிப்படுப்பதாயிற்று. ஏறுவான், வினையெச்சம். தனித்தனி கூவிக்
கேட்டன ரென்பார் ‘ஐயதா’ என ஒருமையாற் கூறினார். யமுனையாற்றில்
நீராடிய ஆய்ச்சிறுமியரின் உடைகளைக் கவர்ந்து கண்ணன் குருந்தமரத்தில்
ஒளித்தனன் என்பது வரலாறு. (62)

உலத்தை வென்றதோ ளாடவ ருச்சிமேற் பொறித்த
அலத்த கத்தொடு குங்கும மளைந்துசெம் புனலாய்
மலர்த்த டங்குடைந் தவர்க்குநீ ராஞ்சன* வட்டக்
கலத்தை யொத்தன சுற்றிநின்+றாரொத்த கடிக்கா.

     (இ - ள்.) மலர்த்தடம் - மலர்கள் நிறைந்த பொய்கைகள், உலத்தை
வென்ற தோள் ஆடவர் உச்சிமேல் பொறித்த - திரண்ட கல்லை வென்ற
தோளையுடைய ஆடவர்களின் முடிமீது தீட்டிய, அலத்தகத்தொடு -


     (பா - ம்.) * நீராசனம். +சுற்ற. +கடிகா.