செம்பஞ்சுக் குழம்போடு,
குங்குமம் அளைந்து - குங்குமமுங் கலந்து,
செம்புனல் ஆய் - சிவந்த நீரினையுடையனவாய், குடைந்தவர்க்கு நீராஞ்சன
வட்டக் கலத்தை ஒத்தன - நீராடிக் கரையேறியவர்க்கு (அமைத்த)
நீராஞ்சனமெடுக்கும் வட்டக் கலத்தினை ஒத்தன; கடிக்கா - மணமுள்ள
சோலைகள், சுற்றி நின்றார் ஒத்த - (அவற்றைச்) சுற்றி நின்ற மகளிரை
ஒத்தன.
மகளிரின்
ஊடல் தீர்த்தற்கு ஆடவர் அவர் காலில் வீழ்ந்து
வணங்கும் பொழுது அன்னார் சினமிக்கு ஆடவர் தலைமீது உதைத்தலால்
அவர் காலில் ஊட்டிய செம்பஞ்சுக் குழம்பு ஆடவரின் தலைமீது
பொறிக்கப்பட்டிருக்கு மென்க. நீராஞ்சனம் - ஆலத்தி. வட்டக்கலம் -
வட்டில்; தட்டம். சுற்றி - சுழற்றி. (63)
பட்டும் பன்னிறக்
கலிங்கமும் பன்மணிக் கலனுங்
கொட்டுஞ் சாந்தமு நானமுங் குங்குமச் சேறுங்
கட்டுந் தாமமுந் தமதுகட் டழகெலாங் கவர
மட்டுண் கோதைய ராடவர் மனமெலாங் கவர்ந்தார். |
(இ
- ள்.) பட்டும் பல்நிறக் கலிங்கமும் - பட்டாடைகளும்
பலநிறமுள்ள பருத்தி நூலாடைகளும், பல்மணிக் கலனும் - பல மணிகள்
அழுத்திய அணிகளும், கொட்டும் சாந்தமும் - நிறையப் பூசிய சந்தனமும்,
நானமும் - மான்மதமும், குங்குமச் சேறும் - குங்குமக் குழம்பும், கட்டும்
தாமமும் - கட்டிய மாலைகளுமாகிய இவைகள், தமது கட்டழகு எலாம்
கவர - தங்கள் கட்டழகு முழுதையுங் கவர்ந்து கொள்ள, மட்டு உண்
கோதையர் - மணமிக்க மாலையணிந்த மகளிர், ஆடவர்மனம் எலாம்
கவர்ந்தார் - ஆடவர்களின் உள்ளமனைத்தையும் கவர்ந்தனர்.
ஆடையணி
முதலியவற்றால் மகளிர் அழகு பெறாது அவரால்
அவை அழகு பெற்றன வென அவர்களது இயற்கை யழகின் சிறப்புக்
கூறுவார் தமது கட்டழகெலாங் கவர என்றார். மேல் புதுமது
நுகரப்புக்கார் என்று கூறுதலின் ஈண்டு மதுவுண்ட மகளிர் என்னலாகாமை
யறிக. (64)
[அறுசீரடியாசிரியவிருத்தம்]
|
காவியுங்
கமலப் போதுங் கள்ளொழு காம்பற் போதும்
ஆவியுட் பூத்த போல வாடியுட் பூப்ப நோக்கி
ஏவிரண் டன்ன கண்ணா லனங்கனை யேவல் கொள்ளும்
பூவிரி பொலங்கொம் பன்னார் புதுமது நுகரப் புக்கார். |
(இ
- ள்.) காவியும் கமலப்போதும் - நீலோற்பல மலரும் தாமரை
மலரும், கள் ஒழுகு ஆம்பல் போதும் - தேன் ஒழுகும் ஆம்பல்
மலருமாகிய இவை, ஆவியுள் பூத்தபோல - வாவியுள் மலர்ந்தனபோல,
ஆடியுள் பூப்ப நோக்கி - கண்ணாடியுள்ளும் மலருமாறு பார்த்து, இரண்டு
ஏ அன்ன கண்ணால் - இரண்டு கணைகளை ஒத்த கண்களால், அனங்கனை
ஏவல் கொள்ளும் - மதவேளையும் பணிகொள்ளும், பூவிரி பொலம் கொம்பு
|