அன்னார் - பூக்கள்
மலர்ந்த பொற்கொம்பு போன்ற அம்மகளிர், புதுமது
நுகரப் புக்கார் - புதிய மதுவினைப் பருகப் புகுந்தனர்.
மகளிர்
கண்ணாடியில் முகம் பார்த்த காலையில் அவர் கண் முகம்
வாய் என்பன அதனுட் டோன்றுதல் காவி கமலம் ஆம்பல் என்னும்
பூக்களை அது பூத்தமை போன்றிருந்த தென்க. பூத்த, தொழிற்பெயர்.
அனங்கனையும் என்னுஞ் சிறப்பும்மை தொக்கது. (65)
பொன்னினும் வெள்ளி யானும் பளிங்கினும் புலவன் செய்த
நன்னிறக் கலத்திற் கூர்வா ணட்டென வாக்கிச் சேடி
மின்னனா ரளித்த தேறற் சிறுதுளி விரலிற் றெள்ளித்
துன்னிவீழ் களிவண் டோச்சித் தொண்டையங் கனிவாய் வைப்பார். |
(இ
- ள்.) சேடி மின் அனார் - மின்போன்ற தோழிகள், பொன்னினும்
வெள்ளியானும் பளிங்கினும் - பொன்னாலும் வெள்ளியாலும் பளிங்காலும்,
புலவன் செய்த நல் நிறக் கலத்தில் - கம்மப் புலவனாற் செய்யப்பட்ட நல்ல
ஒளியையுடைய கலங்களில், கூர்வாள் நட்டென வாக்கி அளித்த - கூரிய
வாளை நட்டாற்போல வார்த்துக் கொடுத்த, தேறல் - மதுவில், சிறு துளி
விரலில் தெள்ளி - சிறிய துளியை விரலாற்றொட்டுத் தெறித்து, துன்னி வீழ்
களிவண்டு ஓச்சி - நெருங்கி வீழும் மதுமயக்கத்தையுடைய வண்டுகளை
ஓட்டி, அம் தொண்டைக் கனிவாய் வைப்பார் - அழகிய கோவைக்
கனிபோன்ற வாயில் வைத்து அருந்துவார்.
புலவன்
- பொன் முதலியவற்றாற் கலம் இயற்றும் அறிவுடையான்;
கம்மியன் கலத்தில் வீழும் மதுவின் இடையறா வொழுக்கு அதில் வாள்
நட்டது போன்றிருந்தது. நட்டென, தொகுத்தல். சேடி மின்னனார்,
பன்மையிலொருமை. வாக்கி - வார்த்து; வாக்கு, பகுதி. கள்ளுண்பார்
அதனை விரலாற்றொட்டுத் தெறித்துப் பின் உண்ணுதல் மரபு என்க. (66)
வள்ளத்து வாள்போல் வாக்கு மதுக்குடந் தன்பாற் பெய்த
கொள்ளைத்தேன் மதுவைக்* கொள்ளை கொளவந்த வள்ள மீதென்
றுள்ளத்து வெகுண்டு வைவா ளூன்றிமார் பிடப்ப தொத்த
கள்ளைச்சூழ் காளை வண்டு செருச் செயல் காண்ப வொத்த. |
(இ
- ள்.) வள்ளத்து வாள்போல் வாக்கும் மதுக்குடம் - கிண்ணத்தில்
வாளை நட்டாற்போல வார்க்கா நின்ற மதுக்குடமானது (அத்தோற்றத்தால்),
தன்பால் பெய்த கொள்ளைத் தேன் மதுவை - தன்னிடத்துப் பெய்துவைத்த
மிக்க மணமுள்ள கள்ளினை, கொள்ளை கொளவந்த வள்ளம் ஈது என்று -
கவர வந்த வள்ளம் இதுவென்று கருதி, உள்ளத்து வெகுண்டு - மனத்திற்
சினங்கொண்டு, வைவாள் ஊன்றி மார்பு இடப்பது ஒத்த - கூரிய வாளை
ஊன்றி அதன் மார்பைப் பிளப்பதை ஒக்கும்; கள்ளைச் சூழ் காளை வண்டு
- அம்மதுவினைச் சூழ்ந்த இளமையுடைய வண்டுகள், செருச் செயல் காண்ப
ஒத்த - அப்போர்ச் செயலைக் காண்பன ஒத்தன.
(பா
- ம்.) * தெண்மது.
|