கொள்ளை
இரண்டனுள் முன்னது மிகுதிப் பொருட்டு. தேன் - மணம்;
தெண்மது எனப் பாடமாயின் தெளிந்த மது என்க. இடப்பது, தொழிற் பெயர்.
(67)
தணியலுண்
டுள்ளஞ் சோரு மொருமக டணிய லுண்பான்
பிணியவிழ் கோதை யாளோர் பெண்மகள் கலத்தில் வாக்குந்
துணிமதுத் தாரை தன்னை வாளெனத் துணிந்து பேதாய்
திணிகதிர் வாளால் வள்ளஞ் சிதைத்தியோ வென்று நக்காள். |
(இ
- ள்.) தணியல் உண்டு உள்ளம் சோரும் ஒருமகள் - கள்ளினை
நுகர்ந்து மதிமயங்கிய ஒரு மாது, தணியல் உண்பான் - கள்ளினைப் பருகுதற்
பொருட்டு, பிணி அவிழ் கோதையாள் ஓர் பெண்மகள் - முறுக்கவிழ்ந்த
மலர்மாலை யணிந்த ஒரு பெண், கலத்தில் வாக்கும் துணிமதுத் தாரை
தன்னை - வள்ளத்தில் வார்க்கின்ற தெளிந்த மது தாரையை, வாள் எனத்
துணிந்து - வாட்படை என்று துணிந்து, பேதாய் - அறிவில்லாதவளே, திணி
கதிர் வாளால் - செறிந்த ஒளியையுடைய வாட்படையினால், வள்ளம்
சிதைத்தியோ என்று நக்காள் - வள்ளத்தை அழிக்கின்றாயோ என்று கூறிச்
சிரித்தாள்.
தணியல்
- கள். உண்பான், வினையெச்சம். உண்பான் வாக்கும்
தாரையை என்க. துணி - தெளிவு. இது போல்வனவற்றை மயக்கவணியிற்
பாற் படுத்துக. (68)
மலர்தொறுஞ் சிறுதே னக்கித் திரிவண்டு மடவார் தங்கைத்
தலனெடுத் தோச்ச வோடா தழீஇத்தடஞ் சாடி மொய்ப்ப
இலமெனப் பல்லோர் மாட்டு மிரந்திரந் தின்மை நீங்கா
தலமரும் வறியோர் வைத்த நிதிகண்டா லகல்வ ரேயோ. |
(இ
- ள்.) மலர்தொறும் சிறு தேன் நக்கித் திரிவண்டு - பூக்கள்
தோறுஞ் சென்று சிறிய தேனை நக்கித் திரிகின்ற வண்டுகள், மடவார் -
மதுவுண்ணும் மகளிர், தம் கைத்தலன் எடுத்து ஓச்ச - தமது கையை
மேலெடுத்து ஓட்டவும், ஓடா - ஓடாமல், தடம் சாடி - பெரிய மதுச்
சாடியை, தழீஇமொய்ப்ப - தழுவி மொய்ப்பன வாயின; இலம் எனப்
பல்லோர் மாட்டும் இரந்து இரந்து - வறியம் என்று கூறிப் பலரிடத்தும்
பலகாலும் இரந்தும், இன்மை நீங்காது அலமரும் வறியோர் - இலம்பாடு
நீங்காமல் மனஞ் சுழன்று அலையும் வறுமையுடையோர், வைத்த நிதி
கண்டால் - சேமித்து வைத்த நிதியினைக்காணின், அகல்வரேயோ - (யாவர்
அகற்றினும் அதனைவிட்டு) நீங்குவரோ (நீங்கார் என்றபடி.)
மலர்தொறுஞ்
சிறுதேன் நக்கித் திரிதல் பல்லோர் மாட்டும் இரந்து
திரிதலை யொக்கும். ஓடா, ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம். தழீஇ,
சொல்லிசை யளபெடை. இது வேற்றுப்பொருள் வைப்பணி. (69)
|