84திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



உண்டவ ளொருத்தி கள்வா யுதிக்குந்தன் முகமுங் கண்ணுங்
கண்டுதா மரைகள் வேலை முளைத்ததக் கள்ளை யார
மொண்டுணாப் பேதைத் தும்பி யம்மது முளரி வார்தேன்
நுண்டுளி செறிவ தென்னா நொடித்துக்கை புடைத்து நக்காள்.

     (இ - ள்.) உண்டவள் ஒருத்தி - மதுவைப் பருகிய ஒரு பெண்,
கள்வாய் உதிக்கும் தன் முகமும் கண்ணும் கண்டு - கள்ளின்கண் தோன்றுந்
தனது முகத்தையும் கண்ணையுங்கண்டு, தாமரை கள் வேலை முளைத்தது
- தாமரை மதுக்கடலில் முளைத்தது, அக்கள்ளை ஆரமொண்டு உணாப்
பேதைத் தும்பி - அம்மதுவை நிறைய அள்ளி உண்ணாத அறிவில்லாத
வண்டு, அம்மது முளரிவார் தேன் நுண்துளி செறிவது என்னா நொடித்து
- அம்மதுக் கடலில் முளைத்த தாமரையினின்று ஒழுகும் மதுவின் சிறு
துளியைச் சூழ்கின்றது என்று சொல்லி, கை புடைத்து நக்காள் - கை தட்டிச்
சிரித்தாள்.

     கள்ளிலே தோன்றிய முகத்தைத் தாமரையாகவும், கண்ணை
வண்டாகவும் மயங்கினாள் என்க. (70)

மங்கையா ளொருத்தி தானுண் டெஞ்சிய மதுவுட் டோன்றுந்
திங்களை நோக்கி யென்னைப் பிரிவின்கட் டீயாய்ச் சுட்டாய்
இங்குவந் தகப்பட் டாயே யினிவிடேன் கிடத்தி யென்னா
அங்கொரு வள்ளங் கொண்டு சேமித்தா ளருந்தல் செய்யாள்.

     (இ - ள்.) மங்கையாள் ஒருத்தி - மங்கைப் பருவமுள்ள ஒரு பெண்,
தான் உண்டு எஞ்சிய மதுவுள் - தான் பருகி மிகுந்த கள்ளினுள், தோன்றும்
திங்களை நோக்கி - பிரதிபலிக்கும் சந்திரனைப் பார்த்து, பிரிவின்கண்
என்னைத் தீயாய்ச் சுட்டாய் - (என் தலைவனைப்) பிரிந்திருந்த காலத்து
என்னை நெருப்பாக நின்று காய்ந்தனை; இங்கு வந்து அகப்பட்டாயே -
(இன்று) இங்கே வந்து அகப்பட்டுக் கொண்டாயே, இனி விடேன் - இனி
உன்னை விடமாட்டேன், கிடத்தி என்னா - இங்ஙனே கிடப்பாயாக என்று
கூறி, அருந்தல் செய்யாள் - அக்கள்ளைப் பருகாது, அங்கு ஒரு வள்ளம்
கொண்டு சேமித்தாள் - அங்கு மற்றொரு வள்ளத்தினால் மூடி வைத்தனள்.

     கிடத்தி, த் எழுத்துப்பேறு, இ விகுதி. சேமித்தல் - காவல் செய்தல்.
(71)

வெவ்விய நறவ முண்ட விளங்கிழை யொருத்தி கையிற்
கௌவிய வாடி தன்னிற் கருங்கய னெடுங்கட் சேப்புங்
கொவ்வைவாய் விளர்ப்பு நோக்கி யென்னலங் கூட்டுண் டேகும்
ஒளவிய மனத்தான் யாரென் றயர்கின்றா ளயலா ரெள்ள.

     (இ - ள்.) வெவ்விய நறவம் உண்ட விளங்கிழை ஒருத்தி - வெம்மை
யுடைய கள்ளை உண்ட விளக்கமாகிய அணிகளையணிந்த ஒரு பெண்,
கையில் கௌவிய ஆடிதன்னில் - கையிற்பற்றிய கண்ணாடியில், கருங்