தருமிக்குப் பொற்கிழி யளித்த படலம் 85



கயல் நெடுங்கண் சேப்பும் - கரிய கயல்போன்ற நெடிய கண்களின்
சிவப்பையும், கொவ்வைவாய் விளர்ப்பும் நோக்கி - கொவ்வைக் கனிபோன்ற
வாயின் வெளுப்பையும் பார்த்து, என் நலம் கூட்டுண்டு ஏகும் - எனது
இன்பத்தைக் கொள்ளை கொண்டு செல்லும். ஒளவியமனத்தான் யார் என்று
- வஞ்சமனத்தையுடையான் யாவன் என்று கூறி, அயலார் எள்ள
அயர்கின்றாள் - அயலவர் நகைக்கச் சோர்கின்றாள்.

     கள்ளுண்டலால் வந்த கண் சிவப்பையும் வாய் விளர்ப்பையும்
கலவியால் வந்தனவாக மயங்கினாள் என்க. சேப்பு, செம்மையென்னும்
பண்படியாக வந்த தொழிற் பெயர். (72)

ஒருத்திகள் ளுண்கின் றாடன் னுருவமந் நறவுட் டோன்ற
ஒருத்தியென் னுடன்வந் துண்பாள் காணென வுண்ட தோழி
ஒருத்திவந் தென்செய் வாடன் னுருவமு நோக்கிப் பேதாய்
ஒருத்தியோ விருவ ரென்றா ளெச்சிலென் றுகுத்து நக்காள்.

     (இ - ள்.) ஒருத்தி கள் உண்கின்றாள் - கள் உண்கின்ற ஒரு பெண்,
தன் உருவம் அந் நறவுள் தோன்ற - தன் வடிவம் அம் மதுவுள்ளே
தோன்ற, (க்கண்டு) ஒருத்தி என்னுடன் வந்து உண்பாள் காண் என -
ஒருத்தி என்னோடு வந்து உண்கின்றாள் (இதைக்) காண்பாயாகவென்று கூற,
உண்டதோழி ஒருத்திவந்து - கள்ளுண்டதோழி ஒருத்தி அங்குவந்து, என்
செய்வாள் - என்னசெய்கின்றாளெனின், தன் உருவமும் நோக்கி -
தனதுவடிவத்தையும் (அதனுட்) கண்டு, பேதாய் - அறிவில்லாதவளே,
ஒருத்தியோ - (உன்னோடு உண்பவள்) ஒருத்தியா (அன்று) ; இருவர்
என்றாள் - இருவர் என்று கூறினாள்; எச்சில் என்று உகுத்து நக்காள் -
(அவள்). இது எச்சிற்பட்டதென்று அதனைக் கீழே உகுத்துச் சிரித்தனள்.

     உண்கின்றாளாகிய ஒருத்தி என்க. உருவமும், எச்சவும்மை.
ஒருத்தியோ, ஓகாரம் தெரிநிலை. (73)

சாடியு ணறவ முண்டா டன்னுரு வேறு பாட்டை
ஆடியு ணோக்கி நானோ வல்லனோ வெனைத்தான் கைக்கொண்
டோடினர் பிறரு முண்டோ வுயிரன்னான் வந்திங் கென்னைத்
தேடினென் செய்கே னென்னைத் தேடித்தா சேடி யென்றாள்.

     (இ - ள்.) சாடியுள் நறவம் உண்டாள் - சாடியிலேயுள்ள மதுவை
உண்ட ஒரு பெண், தன் உருவேறுபாட்டை ஆடியுள் நோக்கி - தனது
வடிவத்தின் வேறு பாட்டினைக் கண்ணாடியுட்கண்டு, நானோ அல்லனோ
- (இங்கிருப்பது) நான்தானோ வேறுமகளோ, எனைத்தான் கைக்கொண்டு
ஓடினர் பிறரும் உண்டோ - பிறர் என்னைக் கைப்பற்றி ஓடினரோ,
உயிர்அன்னான் வந்து இங்கு என்னைத்தேடின் என் செய்கேன் - என்
உயிர்போன்ற காதலன் வந்து இங்கு என்னைத் தேடினால் யான்
என்செய்வேன், சேடி என்னைத் தேடித்தா என்றாள் - தோழியே என்னைத்
தேடிக் கண்டு பிடித்துத் தருவாயாக என்று வேண்டினள். (74)