களித்தவ ளொருத்தி நின்ற வாடியுட் கணவன் றன்பின்
ஒளித்தவ னுருவுந் தானு நேர்பட வுருத்து நோக்கித்
துளித்தகண் ணீர ளாகி யேதிலா டோடோய்ந் தின்பங்
குளித்தனை யிருத்தி யோவென் றுதைத்தனள் கோப மூண்டாள். |
(இ
- ள்.) களித்தவள் ஒருத்தி நின்ற ஆடியுள் - கள்ளுண்ட ஒரு
பெண் தான் நின்று பார்த்த கண்ணாடியுள், தன் பின் ஒளித்தவன் கணவன்
உருவும் - தன் பின்னே மறைந்து நின்ற கேள்வன் வடிவமும், தானும்
நேர்பட- தன் வடிவமுந் தோன்ற, உருத்து நோக்கி - செயிர்த்து நோக்கி,
துளித்த கண்ணீரளாகி - துளிக்கின்ற கண்ணீரை யுடையளாய், ஏதிலாள்
தோள் தோய்ந்து இன்பம் குளித்தனை - அயலாள் தோளைப் புணர்ந்து
இன்பக் கடலுள் மூழ்கி, இருத்தியோ என்று - இருக்கின்றாயோ வென்று
கூறி, கோபம் மூண்டாள் உதைத்தனள் - சினமுதிர்ந்து உதைத்தாள்.
களித்தல்
- கள்ளுண்டு மயங்கல். ஒளித்தவனாகிய கணவன் என்க.
கணவன் நிழலைக் கணவனாகவும், தன் நிழலை மற்றொருத்தியாகவும்
மயங்கினாள். மதுவுண்டல் கூறிய இச்செய்யுட்களிலே பேதைமை பற்றிய
நகைச்சுவை விஞ்சியிருத்தல் காண்க.
"எள்ளல் இளமை
பேதைமை மடனென்
றுள்ளப் பட்ட நகைநான் கென்ப" |
என்றார் ஆசிரியர்
தொல்காப்பியனாரும். (75)
இளம்புளிந் தயிர்வி ராய வின்சுவை பொதிந்த சோறு
வளம்பட விருந்தி னோடு மருந்துவார் வசந்த வீணை
களம்படு மெழாலி னோடு கைவிர னடாத்திக் காமன்
உளம்புகுந் தலைப்ப வெண்ணெய்ப் பாவைபோ லுருகிச் சோர்வார். |
(இ
- ள்.) இளம் புளிந் தயிர் விராய - இளம் புளிப்பினையுடைய
தயிர் கலந்த, இன்சுவை பொதிந்த சோறு - இனியசுவை நிறைந்த சோற்றினை,
விருந்தினோடும் வளம்பட அருந்துவார் - விருந்தினரோடும் வளம் பொருந்த
உண்பார்கள்; களம்படும் எழாலினோடு - மிடற்றிலுண்டாகும் ஓசை யமைந்த
பண்ணுடன், வசந்த வீணை - வசந்த காலத்துக்குரிய வீணையை, கைவிரல்
நடாத்தி - வாசித்து, காமன் உளம் புகுந்து அலைப்ப -மதவேள் உள்ளத்திற்
சென்று வருத்துதலால், வெண்ணெய்ப் பாவைபோல் உருகிச் சோர்வார் -
வெண்ணெயாற் செய்த பதுமைபோல் உருகித் தளர்வார்.
"புளிப்பெயர்
முன்னின மென்மையுந் தோன்றும்" |
என்பதனால், புளிந்
தயிர் என மெலி மிக்கது, விருந்து - புதுமை; அது
புதியராய் வந்தார் மேல் நின்றது. எழால் - மிடற்றிசை; வெள்ளை காகுளி
கீழோசை வெடி குரல் நாசியின்ன, எள்ளிய வெழாலின் குற்றம் என விறகு
விற்ற படலத்திற் கூறினமையுங் காண்க. (76)
|