இவற்றையுடைய கொடி
தலைவியையும் உணர்த்தின. உவமானச் சொற்களால்
உவமேயங்களைக் கூறுதலால் உருவகவுயர்வு நவிற்சியணியுமாம். கொடியும்
தானும் இருப்பான் என்றது வழுவமைதி.
"தானுந்தன் றையலுந்
தாழ்சடையோ னாண்டிலனேல்" |
என்னுந் திருவாசகத்திற்போல.
(78)
வெவ்விய வேலான் வீசும் வாசமோந்* தீது வேறு
திவ்விய வாச மாக விருந்தது தென்றல் காவில்
வௌவிய வாச மன்று காலுக்கும் வாச மில்லை
எவ்வியல் வாச மேயோ விதுவென வெண்ணங் கொள்வான். |
(இ
- ள்.) வெவ்விய வேலான் - கொடிய வேற்படையினையுடைய
சண்பக மாறன், வீசும் வாசம் மோந்து - அங்ஙனம் வீசிய மணத்தை
உயிர்த்து, ஈது வேறு திவ்விய வாசமாக இருந்தது - இது வேறு தெய்வத்
தன்மை பொருந்திய மணமாக இருந்தது; தென்றல் காவில் வௌவிய வாசம்
அன்று - தென்றல் சோலையிற் கவர்ந்த மணம் அன்று; காலுக்கும் வாசம்
இல்லை - காற்றுக்கும் இயல்பாக மணமில்லை (ஆயின்), இது எவ்வியல்
வாசமேயோ என - இம்மணம் எதன்கட் பொருந்திய மணமோ என்று,
எண்ணங்கொள்வான் - எண்ணுவானாகி.
திவ்வியம்
- தெய்வத் தன்மை. இவ்வுலகத்து இதுகாறும் உணர்ந்த
வாச மன்றென்பான் வேறு திவ்விய வாசமாக விருந்தது என்றான். காவில்
வௌவிய வாசமன்று, வேறு திவ்விய வாசமாக விருந்தது என
மாற்றியுரைத்தலுமாம். காற்று ஊறு, ஓசை என்னும் இருகுணமே
உடையதாகலின் காலுக்கும் வாசமில்லை என்றான். எவ்வியல் என்பதனை
எதன்கட் பொருந்திய என விரித்துக் கொள்க. எண்ணங்கொள்வான், ஒரு
சொல்லாய் எச்சமாயிற்று; (79)
திரும்பித்தன் றேவி தன்னை நோக்கினான் றேவி யைம்பால்
இரும்பித்தை வாச மாகி யிருந்தது கண்டிவ் வாசஞ்
சுரும்பிற்குந் தெரியா தென்னாச் சூழ்ந்திறும் பூது கொண்டீ
தரும்பித்தைக் கியல்போ செய்கை யோவென வையங் கொண்டான். |
(இ
- ள்.) திரும்பித் தன் தேவி தன்னை நோக்கினான் - திரும்பித்
தனது மனைவியைப் பார்த்தான்; தேவி ஐம்பால் இரும்பித்தை வாசமாகி
இருந்தது கண்டு - (அந்தமணம்) தேவியின் ஐந்து பகுப்பாக முடிக்கப்படும்
பெருமை பொருந்திய கூந்தலின் மணமாயிருத்தலைக் கண்டு. இவ்வாசம்
சுரும்பிற்கும் தெரியாது என்னாச் சூழ்ந்து - இம்மணம் வண்டிற்கும்
தெரியாது என்று எண்ணி, இறும் பூது கொண்டு - வியப்புற்று, ஈது -
இம்மணம். அரும்பித்தைக்கு இயல்போ செய்கையோ என ஐயங்கொண்டான்
(பா
- ம்.) * வாசமோர்ந்து.
|