தருமிக்குப் பொற்கிழி யளித்த படலம் 89



- அரிய கூந்தலுக்கு இயற்கையோ (அன்றிச்) செயற்கையோ என்று ஐயுற்றான். ஐம்பால் - ஐந்து பகுப்பு; முடி, கொண்டை, சுருள், குழல், பனிச்சை என்பன. பித்தை பெண் மயிரை உணர்த்தி நின்றது. செய்கை - செயற்கை. (80)

ஐயுறு கருத்தை யாவ ராயினு மறிந்து பாடல்
செய்யுந ரவர்க்கே யின்ன வாயிரஞ் செம்பொ னென்றக்
கையுறை வேலா னீந்த பொற்கிழி கைக்கொண் டேகி
மெய்யுணர் புலவர் முன்னாத் தூக்கினர் வினைசெய் மாக்கள்.

     (இ - ள்.) ஐயுறு கருத்தை அறிந்து - யான் ஐயுற்ற கருத்தினை
உணர்ந்து, பாடல் செய்யுநர் யாவராயினும் - பாடுகின்றவர்
யாவராயிருந்தாலும், அவர்க்கே இன்ன ஆயிரம் செம்பொன் என்று -
அவருக்கே இந்த ஆயிரம் செம்பொன் அடங்கிய முடிப்பு உரியதென்று
கூறி, அ கை உறை வேலான் ஈந்த பொற்கிழி - அந்த வேற்படை ஏந்திய
கையினனாகிய சண்பகமாறன் கொடுத்த பொன்முடிப்பை, வினைசெய்
மாக்கள் கைக்கொண்டு ஏகி - ஏவலாளர் பெற்றுச் சென்று, மெய் உணர்
புலவர் முன்னாத் தூக்கினர் - உண்மையை உணர்ந்த சங்கப் புலவர்
இருக்கை முன்னே கட்டித் தொங்கவிட்டனர்.

     இன்ன, இகரச் சுட்டின் திரிபு. கையிற் பொருந்திய வேல் எனக்
கிடந்தவா றுரைத்தலுமாம். வேலான் ஈந்தனன் அங்ஙனம் ஈந்த என
விரித்துரைக்க. முன்னா - முன்னாக. (81)

வங்கத்தார் பொருள்போல் வேறு வகையமை கேள்வி நோக்கிச்
சங்கத்தா ரெல்லாந் தம்மிற் றனித்தனி தேர்ந்து தேர்ந்து
துங்கத்தார் வேம்ப னுள்ளஞ் சூழ்பொரு டுழாவி யுற்ற
பங்கத்தா ராகி யெய்த்துப் படருறு மனத்த ரானார்.

     (இ - ள்.) சங்கத்தார் எல்லாம் - சங்கப்புலவரனைவரும், வங்கத்து
ஆர் பொருள் போல் - மரக்கலத்தில் நிறைந்த பொருளின் வகைபோல,
வேறுவகை அமை கேள்வி - வேறு வேறு வகையாக அமைந்த நூல்களால்,
தம்மில் நோக்கி - தம்முள் (ஒன்றுபட்டு) ஆராய்ந்தும், தனித்தனி தேர்ந்து
தேர்ந்து - ஒவ்வொரு வரும் தனித்தனியே பன்முறை ஆராய்ந்தும், துங்கத்
தார் வேம்பன் உள்ளம் சூழ் பொருள் துழாவி - சிறந்த வேப்ப மலர்
மாலையை யணிந்த சண்பகமாறன் உள்ளத்துக் கருதிய பொருளைத் தேடி (க்
காணாமையால்), உற்ற பங்கத்தாராகி - சிறுமை யுற்றவராய், எய்த்துப் படர்
உறு மனத்தரானார் - இளைத்துத் துன்ப மிக்க மனத் தினையுடையரானார்.

     வங்கத்திலே பல திணைப் பொருள்களும் நிறைந்திருக்குமாறுபோல
பல திணைப் பொருள்களும் நிறைந்த நூல்கள் என்க. கேள்வியால் என
உருபு விரிக்க. தார் வேம்பன் என்பதை வேப்பந்தாரன் எனவும், உற்ற