"சிவஞ்சத்தி
நாதம் விந்து சதாசிவன் றிகழு மீசன்
உவந்தரு ளுருத்தி ரன்றான் மாலய னொன்றி னொன்றாய்ப்
பவந்தரு மருவ நாலிங் குருவநா லுபய மொன்றாய்
நவந்தரு பேத மேக நாதனே நடிப்ப னென்பர்" |
என்னும் சிவஞான
சித்தியார்த் திருவிருத்தங் காண்க. (84)
தந்தை தாயிலேன் றனிய னாகிய
மைந்த னேன்புது வதுவை வேட்கையேன்
சிந்தை நோய்செயுஞ் செல்ல றீர்ப்பதற்
கெந்தை யேயிது பதமென் றேத்தியே. |
(இ
- ள்.) எந்தையே - எமது தந்தையே, தந்தை தாய் இலேன் -
தந்தை தாய் அற்றவனாய், தனியனாகிய மைந்தனேன் - ஒரு பற்றுக்கோடு
மில்லாதவனாயுள்ள சிறியேன், புதுவதுவை வேட்கையேன் - கடிமணம்
புரியும் விருப்பமுடையேன்; சிந்தை நோய் செயும் செல்லல் தீர்ப்பதற்கு -
(அது முடித்தற்குப் பொருளின்மையின்) மனத்தை வருத்தும் வறுமைத்
துன்பினை நீக்குவதற்கு, இது பதம் என்று ஏத்தியே - இது தருணம் என்று
கூறித் துதித்து.
செல்லல்
- துன்பம்; வறுமைத் துன்பம். (85)
நெடிய வேதநூ
னிறைய வாகமம்
முடிய வோதிய முறையி னிற்கெனும்*
வடுவி+ லில்லற வாழ்க்கை யின்றிநின்
அடிய ருச்சனைக் கருக னாவனோ. |
(இ
- ள்.) நெடிய வேதநூல் நிறைய - உயர்ந்த மறை நூல்கள்
முற்றவும், ஆகமம் முடிய - ஆகமங்கள் முற்றவும், ஓதிய முறையில் நிற்கு
எனும் - ஓதி அறிந்த முறையில் நிற்பேன் எனினும், வடு இல் இல்லற
வாழ்க்கை இன்றி - குற்றமில்லாத இல்லற வாழ்க்கை இல்லாமல், நின் அடி
அருச்சனைக்கு அருகன் ஆவனோ - தேவரீரின் திருவடியை
அருச்சிப்பதற்கு உரியன் ஆவனோ (ஆகேன்).
வேதநூலை
நிறைய ஓதிய முறையில், ஆகமங்களை முடிய ஓதிய
முறையில் எனத் தனித்தனி கூட்டுக. நிற்கு - நிற்பேன். எனினும் என்பது
எனும் என விகாரமாயிற்று. இல்லறவாழ்க்கை உற்றோரே சிவபெருமானை
அருச்சித்தற்குரிய ரென்பது வேதாகமங்களின் துணிபென்பது இதனாற்
பெற்றாம். (86)
ஐய யாவையு மறிதி யேகொலாம்
வையை நாடவன் மனக்க ருத்துணர்ந்
துய்ய வோர்கவி யுரைத்தெ னக்கருள்
செய்ய வேண்டுமென் றிரந்து செப்பினான். |
(பா - ம்.) * நிற்பினும். + வடிவில்.
|