உலர்ந்த நெஞ்சுகொண் டொதுங்கி நாயகன்
நலந்த ருங்கழ னண்ணி னானவன்
மலர்ந்த பாடல்கொண் டறிஞர் வைகிடத்
தலர்ந்த சிந்தைகொண் டடைந்த மைந்தனே. |
(இ
- ள்.) உலர்ந்த நெஞ்சுகொண்டு ஒதுங்கி - வாடிய மனத்துடன்
நடந்து, நாயகன் நலம் தரும் கழல் நண்ணினான் - இறைவனது நன்மையைத்
தருந் திருவடியை அடைந்தனன்; அவன் மலர்ந்த பாடல்கொண்டு -
அவ்விறைவன் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாசுரத்தைப் பெற்றுக்கொண்டு,
அறிஞர் வைகுஇடத்து - சங்கப்புலவர் இருக்கும் இடத்திற்கு, அலர்ந்த
சிந்தையொடு அடைந்த மைந்தன் - மகிழ்ந்த உள்ளத்தோடு சென்ற
அத்தருமி என்பான்.
மலர்ந்த
- அருளிச்செய்த. அலர்ந்த சிந்தை - களிப்பு மிக்க சிந்தை.
மைந்தன் நண்ணினான் என்க. (95)
செய்யுள் கொண்டுபோய்த் திருமுன் வைத்துளப்
பையுள் கொண்டவப் பனவ னென்னைநீ
மையுண் கண்ட*விவ் வழுவு பாடலைக்
கையு ணல்கினாய் கதியி லேற்கெனா. |
(இ
- ள்.) உளம் பையுள் கொண்ட அப்பனவன் - உள்ளத்திற்
கவலை கொண்ட அம்மறையோன், செய்யுள்கொண்டுபோய் திருமுன்
வைத்து - திருப்பாசுரத்தைக் கொண்டுபோய்த் திருமுன் வைத்து, மை உண்
கண்ட - கருமை பொருந்திய திருமிடற்றை யுடையவனே, நீ இவ்வழுவு
பாடலை - நீ குற்றமுள்ள இப்பாடலை, கதி இலேற்குக் கையுள் நல்கினாய்
என்னை எனா - ஒரு பற்று மற்ற எனக்குக் கையில் அளித்தருளினையே
அது என்னை என்று கூறி.
பையுள்
- துன்பம். மையுள் கண்ட எனப் பாடமோதி, மையும் கரு
நிறம் பெறக் கருதும் கண்டத்தை யுடையாய் என்றுரைப்பாரு முளர். கீரன்
இக்கவி குற்றமுடைத்தென்று கூறினமையின் வழுவு பாடல் என்றானென்க.
(96)
[அருசீரடியாசிரியவிருத்தம்]
|
வறுமைநோய்
பிணிப்பப் பன்னாள் வழிபடு மடியே னின்பாற்
பெறுபொரு ளிழந்தே னென்று பேசிலேன் யார்க்கு மேலாங்
கறைகெழு மிடற்றோய் நின்றன் கவிக்குற்றஞ் சில்வாழ் நாட்சிற்
றறிவுடைப் புலவர் சொன்னா லாருனை மதிக்க வல்லார். |
(இ
- ள்.) வறுமை நோய் பிணிப்ப - வறுமையாகிய பிணி
என்னைக்கட்டி வருத்த, பல் நாள் வழிபடும் அடியேன் - பலநாட்களாக
வழிபாடு செய்துவரும் அடியேன், நின்பால் பெறு பொருள் இழந்தேன்
என்று
*
(பா - ம்.) மையுள் கண்ட.
|