(இ
- ள்.) கண்டிகை மதாணி ஆழி கதிர்முடி - மகரகண்டிகையும்
பதக்கமும் மோதிரமும் ஒளி பொருந்திய முடியும், வயிரம் வேய்ந்த
குண்டலம் - வயிரங்கள் பதித்த குண்டலமும் ஆகத்துக் குடிகொண்ட அழகு
எலாம் கொள்ளை கொள்ள - திருமேனியின்கண் குடியாக இருக்கும்
அழகையெல்லாம் கவரவும், தண் தமிழ் மூன்றும் வல்லோன் - தண்ணிய
மூன்று தமிழிலும் வல்லவன், தான் எனக் குறியிட்டாங்கே - தானே எனக்
குறியிட்டதுபோல, புண்டரம் - திரிபுண்டரம், நுதலில் பூத்து - நெற்றியின்கண்
இடப்பெற்று, பொய் இருள் கிழித்துத்தள்ள - நிலையில்லாத அஞ்ஞான
விருளைக் கிழித்து ஓட்டவும்.
கொண்ட
என்னும் பெயரெச்சத்து அகரம் தொக்கது; கண்டிகை
முதலியன ஆகத்திற் குடிகொண்டு என்றுரைத்தலுமாம். புண்டரம் - தருநீறு
மூன்று கீற்றாக நெற்றியில் இடப்படுவது. முத்தமிழும் வல்லோன் எனக்
குறியிட்டாற்போல் இடப்பட்ட திரிபுண்டரம் என்றது தற்குறிப்பு. பொய்யிருள்
- ஆணவமலமாகிய இருள்; மும்மல இருள் என்றுமாம். (99)
விரிகதிர்ப் படாத்திற் போர்த்த மெய்ப்பையு ளடங்கிப் பக்கத்
தெரிமணிக் கடகத் திண்டோ ளிளையவ ரடைப்பை யோடுங்
குருமணிக் களாஞ்சி யம்பொற் கோடிகந் தாங்க முத்தாற்
புரிமதிக் குடைக்கீழ்ப் பொற்காற் கவரிபால் புரண்டு துள்ள. |
(இ
- ள்.) விரிகதிர் படாத்தில் போர்த்த - விரிந்த ஒளியையுடைய
ஆடையாற் போர்க்கப் பெற்ற மெய்ப்பையுள் அடங்கி - நிலையங்கியினுள்
உடலைக்கரந்து பக்கத்து - இருபக்கங்களிலும் எரிமணிக் கடகத் திண்தோள்
இளையவர் - நெருப்புப்போலும் மணிகள் அழுத்திய கடகங்கள் அணிந்த
திண்ணிய தோள்களையுடைய இளைஞர், அடைப்பையோடும் குருமணிக்
களாஞ்சி - அடைப்பையையும் நிறம் பொருந்திய மணிகள் பதித்த
காளாஞ்சியையும், அம்பொன் கோடிகம் தாங்க - அழகிய பொன்னாலாகிய
பூந்தட்டினையும் தாங்கி வரவும், முத்தால் புரி மதிக்குடைக்கீழ் -
முத்தாலாகிய சந்திரவட்டக் குடையின் கீழே, பால் பொன்கால் கவரி புரண்டு
துள்ள - இருபாலும் பொற்காம்பினையுடைய சாமரை புரண்டு துள்ளவும்.
போர்த்த
என்பது தைத்த என்னும் பொருட்டு. மெய்ப்பை - சட்டை.
எரிமணி - மாணிக்கமணி. அடைப்பை - வெற்றிலைப்பை. களாஞ்சி -
தாம்பூலத் தட்டு, உமிழுங்கலன். (100)
சொல்வரம் பிகந்த பாத மென்பது தோன்ற வேதம்
நல்லபா துகையாய்ச் சூட நவின்றன கற்றுப் பாட
வல்லவர் மறையி னாறு மனுமுதற் கலைபோற் பின்பு
செல்லநூ லாய்ந்தோர் வைகுந் திருந்தலைக் களத்தைச் சேர்ந்தான். |
(இ
- ள்.) சொல்வரம்பு இகந்த பாதம் என்பது தோன்ற - சொல்லின்
எல்லையைக் கடந்த திருவடி யென்பது புலப்பட, வேதம் நல்ல பாதுகையாய்ச்
சூட - மறை நல்ல பாதுகை வடிவமாகி (அதனைத் தன்
|