| முகப்பு |
காப்பு
|
|
|
|
|
|
1.
|
திகட சக்கரச் செம்முகம் ஐந்து உளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர வின்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம். |
1
|
|
|
|
| |
|
|
|
|
|
2.
|
உச்சியின் மகுடம் மின்ன ஒளிர் தர நுதலின் ஓடை
வச்சிர மருப்பின் ஒற்றை மணிகொள் கிம்புரி வயங்க
மெய்ச் செவிக் கவரி தூங்க வேழ மா முகம் கொண்டு
உற்ற
கச்சியின் விகட சக்ர கணபதிக்கு அன்பு செய்வாம். |
2 |
|
|
|
| |
|
|
|
|
| |
|
|
|
3.
|
மூ இரு முகங்கள் போற்றி முகம் பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற ஈர் ஆறு தோள் போற்றி காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள் மலர் அடி போற்றி அன்னான்
சேவலும் மயிலும் போற்றி திருக்கை வேல் போற்றி போற்றி. |
3
|
|
|
|
| |
|
|