| முகப்பு |
சரவணப் படலம்
|
|
|
|
|
|
1015.
|
ஏற்றம்
ஆனவர் ஒன்று ஒழி பதின்மரோடு இலக்கர்
தோற்றம் எய்திய தன்மையை இத்துணை சொற்றாம் ஆற்றல் சேர் புனல் சரவணத் தடம் தனில் அறுவர் போற்ற வைகினோன் கயிலையில் புகுந்தமை புகல்வாம். |
1 |
|
|
|
| |
|
|
|
|
|
1016.
|
தருப்ப மிக்கு உளார் காண் உறாத் தாவில் சீர்
வெள்ளிப்
பொருப்பில் உற்றிடு பரம் பொருள் கருணையால் பொறைகூர்
கருப்பம் அற்று உயிர் முழுவதும் தந்திடும் கன்னிப்
பருப்பதக் கொடிக்கு அவ்வழி இனையன பகர்வான். |
2 |
|
|
|
| |
|
|
|
|
|
1017.
| பொம்மல் உற்றிடு நான்முகன் ஆதியோர் புந்தி விம்மல் அற்றிட முந்து நம் விழியிடைத் தோன்றிச் செம்மலர்ச் பெரும் சரவணத்து இருந்த நின் சேயை இம் மலைக் கணே உய்க்குதும் வருக என இசைத்தான். |
3 |
|
|
|
| |
|
|
|
|
|
1018.
| * செம்புலி அதளினான் செப்பிற் றோர்தலும் அம்பிகை உவகையோடு அன்பு கொண்டு எழீஇ நம் பெரு மதலையை நாம் கொண்டு ஏகுதும் எம் பெரு முதல்வ நீ எழுதியால் என்றாள். |
4 |
|
|
|
| |
|
|
|
|
|
1019.
| கொம்மை வெம் முலையினால் குறி படுத்திய அம்மை ஈது உரைத்துழி அருளினால் எழா மைம் மலி மிடறு உடை வான நாயகன் இம் என அவளொடும் ஏற தேறினான். |
5 |
|
|
|
| |
|
|
|
|
|
1020.
| நந்தியின் எருத்த மேல் நங்கை யாளொடு நந்தி வந்திடுதலும் நாக மேல் உளார் நந்திய வினைத்தொகை நந்திற்று என்றிடா நந்தி தன் கணத்தொடு நண்ணிப் போற்றினார். |
6 |
|
|
|
| |
|
|
|
|
|
1021.
| அந்தம் இல் விடத்தினை அடக்கு கையுடைச் கந்தரன் ஆதி ஆம் தொல் கணத்தினோர் எந்தைதன் உருவு கொண்டு இருந்த மேலவர் வந்து இரு மருங்கும் ஆய் வழுத்தி ஈண்டினார். |
7 |
|
|
|
| |
|
|
|
|
|
1022.
| ஆன் முக நந்தி எம் அடிகள் உய்த்திடத் தேன் முக நறு மலர் சிதறிச் செம் கையால் கான் முறை வணங்கியே கமலக் கண்ணவன் நான் முகன் மகபதி பிறரும் நண்ணினார். |
8 |
|
|
|
| |
|
|
|
|
|
1023.
| சல்லரி வயிர் துடி தடாரி சச்சரி கல் என இரங்குறு கரடி கா களம் செல் உறழ் பேரிகை திமிலை ஆதி ஆம் பல் இயம் இயம்பின பார் இடங்களே. |
9 |
|
|
|
| |
|
|
|
|
|
1024.
| வேதம் நான்கும் குடிலையும் வேறுள பேதம் ஆய கலைகளும் பேர் இசை நாத மோடு நணுகின விஞ்சையர் கீதம் யாவும் இசைத்துக் கெழுமினார். |
10 |
|
|
|
| |
|
|
|
|
|
1025.
| வள்ளல் வேணியின் மாமதி ஈண்டியே பிள்ளை வெண் பிறையைப் படர் பேர் அராக் கொள்ளும் என்று குறித்தது போற்றல் போல் வெள்ளி வெண் குடை வெய்யவர் ஏந்தினார். |
11 |
|
|
|
| |
|
|
|
|
|
1026.
| சகரர் என்னும் தலைவர்கள் தம் வழிப் பகிரதப் பெயர்ப் பார்த்திவன் வேண்டலும் நிகரிலோன் அருள்நீத்தத்து ஒழுக்கு எனப் புகரில் சாமரம் பூதர்கள் வீசினர். |
12 |
|
|
|
| |
|
|
|
|
|
1027.
| சீறு மால் கரி சீயம் வயப்புலி ஏறு பூட்கை இரலை எண்கே முதல் வேறு கொண்ட வியன் முகச் சாரதர் நூறு கோடியர் நொய் தெனச் சுற்றினார். |
13 |
|
|
|
| |
|
|
|
|
|
1028.
| இமில் உடைப் பல ஏற்று இருங் கேதனம் திமில விண்புனல் நக்கிச் சிதறுவ அமலனைத் தொழுது ஆற்று மெய் அன்பினால் கமலம் உய்த்திடும் காட்சியர் போன்றவே. |
14 |
|
|
|
| |
|
|
|
|
|
1029.
| அன்ன காலை அகிலமும் ஈன்று அருள் கன்னி தன்னொடு காமர் வெள் ஏற்றின் மேல் மன்னி வைகு மதி முடி வானவன் தன்னதால் அத் தைத்து அணந்து ஏகினான். |
15 |
|
|
|
| |
|
|
|
|
|
1030.
| தன்னது ஆலயம் நீங்கியே கயிலையைத் தணந்து பொன்னின் நீடிய இமைய மால் வரைப் புறத்து ஏகி அன்ன மாடு உறும் சரவணப் பொய்கையை அடைந்தான் என்னை ஆளுடை நாயகன் இறைவியும் தானும். |
16 |
|
|
|
| |
|
|
|
|
|
1031.
|
பிறை உலாம் சடைத் தேவனும் அவன் தனைப் பிரியாது
உறையும் மாதும் ஓர் அறுவகை உருவு கொண்டு உற்ற
சிறுவன் நீர்மையை நோக்கியே திரு அருள் செய்து
நிறையும் வான் புனல் பொய்கை அம் கரை இடை நின்றார்.
|
17 |
|
|
|
| |
|
|
|
|
|
1032.
| முண்டகச் சரவணம் தனில் மூ இரு வடிவம் கொண்டு உலாவி வீற்று இருந்திடும் ஒரு பெரும் குமரன் அண்டர் நாயகன் தன்னுடன் அகிலம் ஈன்றாளைக் கண்டு மாமுக மலர்ந்தனன் தனது உளம் களித்தான். |
18 |
|
|
|
| |
|
|
|
|
|
1033.
| அந்த வேலையில் கவுரியை நோக்கி எம் ஐயன் இந்த நின் மகன் தனைக்கொடு வருக என இயம்பச் சுந்தரம் கெழு விடையினும் துண் என இழிந்து சிந்தை கொண்ட பேர் ஆதரம் தன்னொடும் சென்றாள். |
19 |
|
|
|
| |
|
|
|
|
|
1034.
|
சரவணம் தனில் தனது சேய் ஆறு உருத் தனையும்
இருகரங்களால் அன்புடன் எடுத்தனள் புல்லித்
திருமுகங்கள் ஓர் ஆறு பன்னிரு புயம் சேர்ந்த
உருவம் ஒன்று எனச் செய்தனள் உலகம் ஈன்று உடையாள்.
|
20 |
|
|
|
| |
|
|
|
|
|
1035.
|
எந்தை
சத்திகள் உயிர் எலாம் ஒடுங்குறும் எல்லை
முந்து போல ஒன்று ஆகியே கூடிய முறை போல் அந்தம் இல்லது ஓர் மூ இரு வடிவும் ஒன்றாகிக் கந்தன் என்று பேர் பெற்றனன் கவுரி தன் குமரன். |
21 |
|
|
|
| |
|
|
|
|
|
1036.
| முன்பு புல்லிய குமரவேள் முடி தொறும் உயிர்த்து மின் பிறங்கிய புறந்தனை நீவலும் விமலை தன் பெரும் தனம் சுரந்து பால் சொரிந்தன தலையாம் அன்பு எனப் படுகின்றது இத் தன்மையே அன்றோ. |
22 |
|
|
|
| |
|
|
|
|
|
1037.
| ஆதி நாயகன் கருணையாய் அமலமாய் பரம போத நீரதாய் இருந்த தன் கொங்கையில் பொழிபால் ஏது இலாதது ஓர் குரு மணி வள்ளம் மீது ஏற்றுக் காதல் மா மகற்கு அன்பினால் அருத்தினாள் கவுரி. |
23 |
|
|
|
| |
|
|
|
|
|
1038.
|
கொங்கை ஊறுபால் அருத்தியே குமரனைக் கொடு
சென்று
எங்கள் நாயகன் முன்னரே இறைஞ்சு வித்திடலும்
அம் கையால் அவன் தனை எடுத்து அகல மேல் அணைத்துப்
பொங்கு பேர் அருள் நீர்மையால் இருத்தினன் புடையில். |
24 |
|
|
|
| |
|
|
|
|
|
1039.
| அருத்தி தந்திடு குமரவேள் ஒருபுடை அமரப் பெருத்த மன் உயிர் யாவையும் முன்னரே பெற்ற ஒருத்தி தன்னையும் கையினால் ஒய் என வாங்கி இருத்தினான் தனது இடந்தனில் எம்மை ஆள் இறைவன். |
25 |
|
|
|
| |
|
|
|
|
|
1040.
| ஏலவார் குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும் பாலன் ஆகிய குமரவேள் நடு உறும் பான்மை ஞாலம் மேல் உறும் இரவொடு பகலுக்கும் நடுவாய் மாலை ஆனது ஒன்று அழிவின்றி வைகும் மாறு ஒக்கும். |
26 |
|
|
|
| |
|
|
|
|
|
1041.
|
விடை உற்றிடு பரமற்கும் அவ் விமலைக்கும் விறல் சேய்
இடை உற்றது கண்டார் அயன் மகவான் முதல் இமையோர்
கடை உற்றிடு கடல் ஆம் எனக் கல் என்று இரைத்து அணுகாப்
புடை உற்றனர் எதிர் உற்றனர் புறன் உற்றனர் புகழ்வார். |
27 |
|
|
|
| |
|
|
|
|
|
1042.
|
காமாரி தன் விழி தந்திடு கழிகாத ஒழியாத்
தோமாரியல் புளனாகிய சூரன் கொடும் தொழிலால்
யா மாரினும் இழுக்கு உற்றனம் எமை ஆள் இனி என்னாப்
பூமாரிகள் பொழிந்தார் பணிந்து எழுந்து ஆசிகள் புகன்றார்.
|
28 |
|
|
|
| |
|
|
|
|
|
1043.
|
வார் அற்புதம் உற வீங்கிய வன்னத்தன முருந்தின்
மூரல் பவளச் சே இதழ் முழுமாமதி வதனக்
தாரற் பெயர் பெறு மங்கையர் அது காலையில் அரன் முன்
பேரற் பொடு பணிந்தே எழப் பெரும் தண்
அளிபுரிந்தான். |
29 |
|
|
|
| |
|
|
|
|
|
1044.
| கந்தன் தனை நீர் போற்றிய கடனால் இவன் உங்கள் மைந்தன் எனும் பெயர் ஆகுக மகிழ்வால் எவரேனும் நுந்தம் பகல் இடை இன்னவன் நோன்தாள் வழிபடுவோர் தம்தம் குறை முடித்தே பரந்தனை நல்குவம் என்றான். |
30 |
|
|
|
| |
|
|
|
|
|
1045.
|
என்னா அருள் புரிகின்றுழி இமையத்தவள் சேயைத்
தன்னார் அருளொடு சென்று எதிர் தழுவித் தனத்து இழிபால்
பொன்னார் மணி வள்ளத்து முன் பூரித்து அருத்திடவே
அன்னாள் முலை அமுதுக்கு அவை ஆறு ஒத்து ஒழுகினவே.
|
31 |
|
|
|
| |
|
|
|
|
|
1046.
|
வானார்
சுர நதி போல் சரவணத்து ஊடு அவை புகலும்
தூ நான் மறை கரை கண்டவன் முதல் வந்திடு
துணைவர்
ஆனா அறு சிறுவோர் தமை அளித்தோன் சபித்
திடலால்
மீனாய் அவண் வதிகின்றவர் புகும் பாலினை மிசைந்தார். |
32 |
|
|
|
| |
|
|
|
|
|
1047.
|
கயிலைக்கு இறையவள் மெய்த்தன கலசத்தினும்
உகுபால்
அயில் உற்றிடு பொழுதத் தினில் அறலில் புடை
பெயரும்
அயிலைத்தனு ஒருவித்தவ வடிவு உற்று எழுதருவார்
துயில் உற்று உணர்பவர் ஒத்தனர் மயல் அற்றிடு தொடர்பால்.
|
33 |
|
|
|
| |
|
|
|
|
|
1048.
|
அன்னார் அறு வருமாய் எழுந்து அகன் பொய்கை
விட்டு அமலன்
முன்னாய் வணங்கினர் போற்றலும் முனி மைந்தர்கள் பரங்கோ
என்னா உரை பெறு குன்றிடை இருந்தே தவம் புரிமின்
சின்னாள் மிசை இவன் வந்து அருள் செயும் என்று அருள்
செய்தான். |
34 |
|
|
|
| |
|
|
|
|
|
1049.
|
நன்றால் எனத் தொழுது அன்னவர் நாதன் விடை
பெற்றே
சென்றார் உடு மடவாரொடு திருமால் அயன் முதலா
நின்றார் தமக்கு அருள் செய்தவர் நிலயம்புக அருளிப்
பொன்தாழ் சடையினன் வெள்ளி அம் பொருப்பின்
தலை புக்கான். |
35 |
|
|
|
| |
|
|
|
|
|
1050.
|
அடையார் புரம் எரி செய்திடும் அமலன் கயிலையில் போய்
விடையூர்தியின் இழிந்தே தனி விறல் சேயொடும்
வெற்பின்
மடவாளொடு நடவாப் பொலன் மா மந்திரத்து
அவையின்
இடையார் அரி யணை மீ மிசை இருந்தான் அருள் புரிந்தே.
|
36 |
|
|
|
| |
|
|
|
|
|
1051.
|
சேயோன் எனும் முன்னோன் தனைச் சிலம்பின் வரும் ஒன்பான்
மாயோர் உதவிய மைந்தரும் மற்று உள்ள இலக்கத்
தூயோர்களும் தொழுதே மலர் தூவிப் பணிந்து ஏத்தி
ஆயோர் தமது உயிரே என அவனைக் குறித்து அணைந்தார்.
|
37 |
|
|
|
| |
|
|