சூரன் அமைச்சியற் படலம்
 
4711
அந்த நல் அமையம் தன்னின் அவுணர் கோன் ஏவல்                                       போற்றி
முந்து செல் ஒற்றர் ஆனோர் மூரி நீர்க் கடலை வாவிச்
செந்தியில் சென்று கந்தன் சேனையும் பிறவும் தேர்ந்து
வந்தனர் விரைவின் அம் கண் மன்னனை வணங்கிச்                                       சொல்வார்.
1
   
4712.
ஏற்ற வெம் பூத வெள்ளம் ஈராயிரம் படையின் வேந்தர்
நூற்றுடன் எண்மர் பின்னும் நுவல் அரும் சிறப்பின்                                     மிக்கோர்
மேல் திகழ் இலக்கத்து ஒன்பான் வீரர் மற்று இனைய                                     ரோடும்
தோற்றம் இல் பரமன் மைந்தன் தொடு கடல் உலகின்                                     வந்தான்.
2
   
4713.
சரதம் ஈது அவுணர் கோவே தாரக வீரன் தன்னைக்
கரை அறு மாயை போற்றும் காமரு பிறங்கல் தன்னை
இரு பிளவாக வேலால் எறிந்தனன் ஈறு செய்து
திரை பொரும் அளக்கர் வேலைச் செந்திமா நகரின்                                      உற்றான்.
3
   
4714.
விலங்கிய கதிர்வேல் அண்ணல் விரைந்து இவண் மேவும்                                        ஆற்றால்
உலம் கிளர் மொய்ம்பில் தூதன் ஒருவனை விடுத்தான்                                        அன்னான்
இலங்கையை அழித்து வந்தான் யாளிமா முகவன் தன்னை
வலங்கையின் வாளால் செற்று வாரிதி கடந்து போனான்.
4
   
4715.
செம் கதிர் அயில் வேல் மைந்தன் தெண்டிரைப் புணரி                                        வாவி
பொங்கு வெம் கணங்களோடும் போர்ப்படை வீரரோடும்
இங்கு வந்து ஆடல் செய்வான் எண்ணினன் இருந்தான்                                        ஈது
சங்கை என்று உன்னல் வாய்மை தகுவன உணர்தி                                        என்றார்.
5
   
4716.
ஒற்றர் சொல் வினவி மன்னன் ஒருதனி இளவல் தன்னை
அற்றம் இல் கேள்வி சான்ற அமைச்சரை மைந்தர்                                    தம்மைச்
சுற்றமொடு அமைந்த தானைத் தொல் பெரும் தலைமை                                    யோரை
மற்று ஒரு கணத்தின் முன்னர் மரபொடு கொணரு                                    வித்தான்.
6
   
4717.
ஆங்கு அவர் யாவரும் அவுணர் மன்னவன்
பூம் கழல் கை தொழூஉப் புடையின் வைகலும்
தீம் கனல் சுடுவது ஓர் சீற்றம் உள் எழ
வீங்கிய உயிர்ப்பினன் விளம்பல் மேயினான்.
7
   
4718.
போற்றலர் ஆகிய புலவர் யாரையும்
மாற்றரும் சிறையில் யான் வைத்த பான்மையைத்
தேற்றிய மகபதி சென்று சென்னிமேல்
ஆற்றினை வைத்திடும் அமலற்கு ஓதினான்.
8
   
4719.
கண் நுதல் உடையது ஓர் கடவுள் வல்லை ஓர்
அண்ணல் அம் குமரனை அளித்து மைந்த நீ
விண்ணவர் சிறையினை வீட்டிச் செல்க எனத்
துண் என நம்மிசைத் தூண்டினான் அரோ.
9
   
4720.
வாய்த்திடு கயிலை மால் வரையை வைகலும்
காத்திடு நந்தி தன் கணத்து வீரரும்
மீத்தகு பூதரும் விரவ மால் அயன்
ஏத்திட அரன் மகன் இம்பர் எய்தினான்.
10
   
4721.
பார் இடை உற்று உளான் பாணி கொண்டது ஓர்
கூர் உடை வேலினால் கொடிய குன்று ஒடு
தாரக இளவலைத் தடிந்து பின் உற
வாரிதி அகன் கரை வந்து வைகினான்.
11
   
4722.
அன்னதோர் அறுமுகன் ஆங்கு ஒர் தூதனை
என் இடை விடுத்தலும் ஏகி மற்று அவன்
மைந் நிற நெடுங்கடல் வரைப்பில் பாய்ந்து ஒராய்ப்
பொன் அவிர் இலங்கைமா புரத்தை வீட்டினான்.
12
   
4723.
இலங்கை அம் காவலும் இகப்பு உற்று இன்னதோர்
பொலங்கெழு திரு நகர் நடுவண் புக்கு உலாய்
நலம் கிளர் என்ன அவைக் களத்தின் நண்ணினான்
கலங்கலன் நிறையது மாயைக் கற்பினான்.
13
   
4724.
நண்ணினன் எதிருற நவை இல் வீரர் போல்
விண்ணவர் பாங்கராச் சில விளம்பி என்
கண் முனம் சிலர் உயிர் களைந்து வன்மையால்
எண்ணலன் பின் உற எழுந்து போயினான்.
14
   
4725.
போய் அவன் இந்நகர் பொடித்துச் சிந்தியான்
ஏயின ஏயின படைஞர் யாரையும்
மாய் உறு வித்தனன் மற்றும் என் இளம்
சேய் உயிர் கொண்டனன் செருக்கு நீங்கலான்.
15
   
4726.
அழிந்தது இத்திரு நகர் அளப்பு இல் தானைகள்
கழிந்தன செறிந்தது களே பரத் தொகை
கிழிந்தது பாரகம் கெழீஇய சோரியாறு
ஒழிந்தது என் ஆணையும் உயர்வும் தீர்ந்தது ஆல்.
16
   
4727.
ஒற்று என வந்த அவ் ஒருவன் தன்னையும்
பற்றி வெம் சிறையிடைப் படுத்தினேன் அலேன்
செற்றிலன் ஊறதே எனினும் செய்திலேன்
எற்று இனி வசை உரைக்கு ஈறு கூறுகேன்.
17
   
4728.
இம்பரின் இவை எலாம் இழைத்த தூதுவன்
நம் பதி இகந்து போய் இலங்கை நண்ணிய
மொய்ம்பு உடை யாளி மா முகவன் சாடியே
அம்புதி கடந்தனன் அவனி எய்தினான்.
18
   
4729.
கார் பொரு மிடற்றவன் காதன் மா மகன்
வாரிதி கடந்து இவண் வந்து நம்மொடும்
போர் பொர நினைகுவான் போலும் இவ் வெலாம்
சாரணர் மொழிந்தனர் சரதம் ஆகும் ஆல்.
19
   
4730.
நெற்றியில் அனிகமாய் நின்ற பூதரைச்
செற்று இகல் வீரரைச் செகுத்துச் சேயினை
வெற்றி கொண்டு ஏனையர் தமையும் வீட்டியே
மற்று ஒரு விகலை முன் வர வல்லேன் இனி யான்.
20
   
4731.
சூரன் என்று ஒரு பெயர் படைத்த தொல்லையேன்
பார் இடர் தம்மொடும் பாலன் தன்னொடும்
போரினை இழைத்திடல் புரிந்து வெல்லினும்
வீரம் அது அன்று எனா வறிது மேவினேன்.
21
   
4732.
துய்த்திடும் திருவினில் வலியில் சூழ்ச்சியில்
எத்துணைப் பெரியர் தாம் எனினும் மேலையோர்
கைத்து ஒரு வினை செயக் கருதில் தம்முடை
மெய்த்துணையோரை முன் வினவிச் செய்வர் ஆல்.
22
   
4733.
ஆதலின் வினவினன் யானும் ஆற்றுதல்
ஈது என உரைத்திரால் என்று மன்னவன்
ஓதினன் அன்னதை உணர்ந்து கைதொழூஉ
மேதி அம் பெயரினான் இவை விளம்பினான்.
23
   
4734.
மேல் உயர் மாயைகள் விளைக்கும் வெற்பினை
மாலினை வென்ற நின் வலிய தம்பியை
ஏல ஒர் கணத்தின் முன் எறிந்த வீரனைப்
பாலன் என்று உரைப்பதும் உணர்வின் பாலதோ.
24
   
4735.
மேதக தாரக வீரன் தானையை
ஆதிபர் தம்முடன் அட்ட தீரரை
ஏதும் ஓர் வலியிலா எளியர் என்பதும்
பூதர் என்று இகழ்வதும் புலமைப் பாலவோ.
25
   
4736.
மீது எழு திரைக்கடல் விரைவில் பாய்ந்து நம்
மூது எயில் வளநகர் முடித்து நின்னுடைக்
காதலன் உயிரையும் கவர்ந்த கள்வனைத்
தூதன் என்று உரைப்பதும் அறிஞர் சூழ்ச்சியோ.
26
   
4737.
கற்றை அம் சிறை உடைக் கலுழன் ஊர்தரு
கொற்றவன் திசைமுகன் அமரர் கோமகன்
மற்று ஒரு வடிவமாய் வந்ததே அலால்
ஒற்றுவன் நிலைமை வேறு உணரல் பாலதோ.
27
   
4738.
உன் தனி இளவலும் ஒரு நின் ஓங்கலும்
பொன்றிய காலையே புராரி மைந்தன் மேல்
சென்றிலை அல்லது உன் சேனை தூண்டியும்
வென்றிலை தாழ்ந்து இவண் வறிது மேவினாய்.
28
   
4739.
தீ அழல் வறியதே எனினும் சீரியோர்
ஏ இது சிறிது என எள்ளல் பாலரோ
வாயதன் ஆற்றலை அடக்கலார் எனின்
மாயிரும் புவி எலாம் இறையின் மாய்க்கும் ஆல்.
29
   
4740.
மாற்றலர் சூழ்ச்சி அது எனினும் மாறதாய்
வீற்று ஒரு நிலைமையது எனினும் மேவும் உன்
ஏற்று எதிர் காப்பரே என்னின் அன்னவர்க்கு
ஆற்ற அரும் இடுக்கண் வந்து அடைதற் பாலதோ.
30
   
4741.
துறந்திடா வளம் தனைத் துய்த்துச் செய்வகை
மறந்தனம் ஆகியே வன்மை யாளரை
எறிந்தவர் தமை இகழ்ந்து இங்ஙன் வாழ்தும் மேல்
சிறந்தவர் யாம் அலால் ஏவர் சீரியோய்.
31
   
4742.
முன்னம் அக் குமரன் மேல் முனிந்து சேறியேல்
உன் நகர்க்கு ஏகுமோ ஒற்று மற்று நீ
அன்னது புரிந்திலை ஆடல் மைந்தனோடு
இந்நகர் அழிந்தது என்று இரங்கல் பாலையோ.
32
   
4743.
மொய்யுடை நின் முகன் முடிந்த தன்மையும்
ஐய நின் திரு நகர் அழிவது ஆனதும்
செய் உறு நிலைமைகள் தெரிந்து செய்திடா
மையலின் கீழ்மையால் வந்த வாகும் ஆல்.
33
   
4744.
கழிந்திடு பிழையினைக் கருதி சாலவுள்
அழிந்திடல் இயற்கை அன்று அறிஞர்க் காதலால்
ஒழிந்தன போக ஒன்று உரைப்பன் கேண்மியா
விழிந்தது என்று உன்னலை இமைப்பில் செய்தி நீ.
34
   
4745.
ஆயது பிறவிலை அவுணர் தம்மொடு
மேயின படையொடும் விரைந்து கண் நுதல்
சேயினை வளைந்து அமர் செய்யப் போதியால்
நீ இனித் தாழ்க்கலை நெருநல் போலவே.
35
   
4746.
என்று இவை மேதியன் இசைப்பக் கேட்டலும்
நன்று இதுவாம் என நவின்று கை யெறிந்து
ஒன்றிய முறுவலும் உதிப்ப நல் அறம்
கொன்றிடு துர்க்குணன் இனைய கூறுவான்.
36
   
4747.
வன்திறல் உவணன் மேல் வந்த மாயன் மேல்
நின்றிடும் அமரர்மேல் நேர்ந்து போர் செயச்
சென்றிலை இளையரால் திறல் கொண்டு ஏகினாய்
இன்று இனிப் பாலன் மேல் ஏகல் ஆகுமோ.
37
   
4748.
இறுதியில் ஆயுளும் இலங்கும் ஆழியும்
மறு இலா வெறுக்கையும் வலியும் வீரமும்
பிற உள திறங்களும் தவத்தில் பெற்றனை
சிறுவனோடே அமர் செய்தற்கே கொலாம்.
38
   
4749.
மே தகு பசிப்பிணி அலைப்ப வெம்பலில் இக்
காதல் கொண்டு அலமரும் கணங்கள் தம்மையும்
தூதுவன் தன்னையும் தொடர்ந்து போர் செயப்
போதியோ அமரரைப் புறம் கண்டு உற்று உளாய்.
39
   
4750.
இன்று நின் பெரும் படைக்கு இறைவர் யாரையும்
சென்றிட விடுக்குதி சிறிது போழ்தினில்
குன்று எறி பகைஞனைக் கூளி தம்மொடும்
வென்று இவண் மீள்குவர் வினையம் ஈது என்றான்.
40
   
4751.
கருதிடு துர்க்குணக் கயவன் இன்னன
உரை தரு முடிவினில் ஒழிக இங்கு எனாக்
கரு மணி ஆழி அம்கை அமைத்தரோ
தரும வெம் பகை உடை அமைச்சன் சாற்றுவான்.
41
   
4752.
குலம் படு நவமணி குயின்று பொன்புனை
அலம் படை கொண்டு புன் முதிரை ஆக்கத்தால்
புலம் படக் கீறுவ போலும் வீர நீ
சிலம்படி மைந்தனோடு ஆடல் செய்வதே.
42
   
4753.
மேல் உயர் கண் நுதல் விமலன் அன்று எனின்
ஆலவன் அன்று எனின் அயனும் அன்று எனில்
காலனும் அன்று எனில் காவல் வீர நீ
பாலனொடு அமர் செயின் பயன் உண்டாகுமோ.
43
   
4754.
மன் இளம் குதலை வாய் மதலை மீதினும்
இன்னினி அமர் செய இறத்தி என்னினும்
அன்னவன் நினது பேர் ஆற்றல் காண்பன் ஏல்
வென்னிடும் எதிர்ந்து போர் விளைக்க வல்லனோ.
44
   
4755.
நேர் அலர் தங்களை நேர்ந்து உளார் எனப்
பேர் இகல் ஆற்றியே பெரிது மாய்வதும்
பூரியர் கடன் அலால் புலமைக்கு ஏற்பதோ
சீரியர் கடன் அவை தெரிந்து செய்வதே.
45
   
4756.
எரிமுகன் இரணியன் எனும் உன் மைந்தரில்
ஒருவனுக்கு ஆற்றலர் இலக்கத்து ஒன்பது
பொரு திறல் வயவரும் பூதர் யாவரும்
அரன் அருள் புரிதரும் அறு முகத்தனும்.
46
   
4757.
கீள் கொடு நகம் கொடு கிள்ளும் ஒன்றினை
வாள் கொடு தடியுமோ வன்மை சான்றது ஓர்
ஆள் கொடு முடித்திடும் அவரை வென்றிட
நீள் கொடு மரம் கொடு நீயும் சேறியோ.
47
   
4758.
மாண் இமை கூடு உறா மகவு தன்னொடும்
ஏண் அறு சாரதர் இனங்கள் தம்மொடும்
பூணுதி செரு எனும் புகற்சி கேட்பர் ஏல்
நாணுவர் நமர் எலாம் நகுவர் தேவரும்.
48
   
4759.
பொற்றையை முடித்தனன் பொருவு இல் தம்பியைச்
செற்றனன் என்று இளம் சிறுவன் தன்னையும்
வெற்றி கொள் புதல்வனை வீட்டினான் எனா
ஒற்றையும் மதித்தனை தொன்மை உன்னலாய்.
49
   
4760.
ஆறு அணி செம் சடை அண்ணல் தந்திடும்
பேறு உடை வேலினைப் பிள்ளை உய்த்தலும்
மாறு உள படையினான் மாற்றல் ஆமையால்
ஈறது வாயினன் இளவல் தாரகன்.
50
   
5761.
எல்லை மற்று அன்னதின் எல்லை தன் பகை
கல் உயர் மொய்ம்பன் மாகாயன் என்பது ஓர்
வல் அவுணன் தனை வருதி என்று கூய்
ஒல்லையின் இனையது ஒன்று உரைத்தல் மேயினான்.
415
   
5762.
சேய் உயர் வட மதில் சிகரி தன் இடைப்
போயினை அந் நெறி புரத்தியால் எனா
ஆயிரப் பத்து எனும் அனிக வெள்ளமோடு
ஏயினன் தான் உறும் இருக்கை எய்தினான்.
416
   
5763.
அத் துணை ஏகியே அவுணர் கம்மியன்
உத்தர நெடு மதில் ஓங்கு கோபுரம்
சித்திர உறுப்பொடு சித்தத்து உன்னியே
வித்தக வன்மையால் விதித்துப் போகவே.
417
   
5764.
அடு கரி புரவி தேர் அவுணர் தானை ஆம்
கடலுடன் சென்று மா காயன் என்பவன்
வட மதில் சிகரியின் வாய்தல் போற்றியே
சுடர்கெழு தீபிகை சுற்ற வைகினான்.
418
   
5765.
ஆயது நிகழ் உழி ஆழி வெற்பின் வாய்
ஞாயிறு நணுக நள் இருளின் யாம் இனி
போயது மெய்ப்புலன் புந்தி சேர் உழி
மாயை அது அகன்றிடும் வண்ணம் என்னவே.
419
   
5766.
கங்குல் என்று உரை பெறு கடவுள் கற்பு உடை
நங்கையை மேவுவான் நயப்பு மேல் கொளா
அங்கு அவளைத் தொடர்ந்து அணுகுவான் எனச்
செம் கதிர் அண்ணல் கீழ்த் திசையில் எய்தினான்.
420
   
5767.
இரவி வந்து உற்றுழி எழுந்து சூர் மகன்
மரபுளி நாள் கடன் வழாமல் ஆற்றியே
செருவினில் உடைந்திடும் சிறுமை சிந்தியாப்
பொரு வரு மாயையைப் போற்றல் மேயினான்.
1
   
5768.
போற்றினன் முன் உறு பொழுதின் மாயவள்
கோல் தொழில் கன்றிய குமரன் முன்னரே
தோற்றினள் நிற்றலும் தொழுத கையினன்
பேற்றினை உன்னியே இனைய பேசுவான்.
2
   
5769.
தாதை தன் அவ்வை கேள் சண்முகத்தவன்
தூதுவனோடு போர்த் தொழிலை ஆற்றினேன்
ஏதம் இல் மானமும் இழந்து சாலவும்
நோதக உழந்தனன் நோன்மை நீங்கினேன்.
3
   
5770.
துன்னலரோடு போர் தொடங்கி ஈற்றினில்
பின்னிடுவார் பெறும் பிழையும் பெற்றனன்
என் இனி வரும் பழி இதற்கு மேல் என்றான்
அன்னது மாயை கேட்டு அறைதல் மேயினாள்.
4
   
5771.
மறை நெறி விலக்கினை வான் உளோர் தமைச்
சிறை இடை வைத்தனை தேவர் கோமகன்
முறையினை அழித்தனை முனிவர் செய்தவம்
குறை உறுவித்தனை கொடுமை பேணினாய்.
5
   
5772.
ஓவரும் தன்மையால் உயிர்கள் போற்றிடும்
மூவரும் பகை எனின் முனிவர் தம்மொடு
தேவரும் பகை எனின் சேணில் உற்று உளோர்
ஏவரும் பகை எனின் எங்ஙன் வாழ்தி ஆல்.
6
   
5773.
பிழைத்திடும் கொடு நெறி பெரிதும் செய்தலால்
பழித் திறம் பூண்டனை பகைவர் இந்நகர்
அழித்து அமர் இயற்றிட அவர்க்குத் தோற்றனை
இழைத்திடும் விதியினை யாவர் நீங்கினார்.
7
   
5774.
நூற்று இவண் பல பல நுவலின் ஆவது என்
மாற்ற அரும் திறல் உடை மன்னன் மைந்த நீ
சாற்றுதி வேண்டுவ தருவன் என்றலும்
ஆற்றவும் மகிழ் சிறந்து அனையன் கூறுவான்.
8
   
5775.
நின்று அமர் இயற்றியே நென்னல் என்றனை
வென்றனன் ஏகிய வீர வாகுவை
இன்று அனிகத் தொடும் ஈறு செய்திட
ஒன்று ஒரு படையினை உதவுவாய் என்றான்.
9
   
5776.
அடல் வலி பிழைத்திடும் அவுணன் சொற்றன
கெடல் அரும் மாயவள் கேட்டுத் தன் ஒரு
படையினை விதித்து அவன் பாணி நல்கியே
கடிதினில் ஒருமொழி கழறல் மேயினாள்.
10
   
5777.
மற்று இது விடுத்தியால் மறையில் கந்தவேள்
ஒற்றனைப் பிறர் தமை உணர்வை வீட்டியே
சுற்றிடும் வாயுவின் தொழிலும் செய்யும் ஆல்
இற்றையில் சயம் உனதே ஏகுவாய் என்றாள்.
11
   
5778.
உரைத்து இவை மாயவள் உம்பர் போந்துழி
வரத்தினில் கொண்டிடும் மாய மாப்படை
பரித்தவன் நெருநலிற் பழியை நீங்கியே
பெருத்திடும் பெருமிதப் பெற்றி கூடினான்.
12
   
5779.
கூர்ப்புறு பல்லவம் கொண்ட தூணியைச்
சீர்ப்புறத்து இறுக்கி மெய் செறித்துச் சாலிகை
கார்ப்பெரும் கொடு மரம் கரம் கொண்டு இன்னது ஓர்
போர்ப் பெரும் கருவிகள் புனைந்து தோன்றினான்.
13
   
5780.
கால் படை அழல் படை காலன் தொல் படை
பாற் படு மதிப்படை பரிதியோன் படை
மால் படை அரன் படை மலர் அயன் படை
மேல் படு சூர் மகன் எடுத்தல் மேயினான்.
14
   
6781.
என்னா இரங்கி இறைவன் வருந்துதலும்
அன்னான் உழையில் அவுணர் சிலர் ஓடித்
துன்னார் களத்தில் துணிவுற்ற சீர் மதலை
பொன்னார் உடலம் கொடு புலம்பிப் போந்தனரால்.
178
   
6782.
சேந்த குஞ்சித் சிலதர் செஞ் ஞாயிறு
பாய்ந்த அண்ணல் படிவ மிசைக் கொளா
வேந்தன் முன் உற உய்த்து விரைந்தவன்
பூந்தண் சேவடி பூண்டு புலம்பினார்.
179
   
6783.
அண்டர் தம்மை அருஞ்சிறை வீட்டியே
தண்டகம் செய் தனிக் குடை மன்னவன்
துண்டம் ஆகிய தோன்றல் தன் யாக்கையைக்
கண்டு அரற்றிக் கலுழ்ந்து கலங்கினான்.
180
   
6784.
அற்ற மைந்தன் சிரத்தினை யாங்கையால்
பற்று நல் எழில் பார்த்திடும் கண்களில்
ஒற்றும் முத்தம் உதவும் உரன் இலாப்
புற்று அராவில் உயிர்க்கும் புரளுமால்.
181
   
6785.
துஞ்சல் ஆகித் துணிவுற்றும் தெவ்வர் மேல்
நெஞ்சு கொண்ட நெடுஞ்சினம் தீர்கிலை
விஞ்சு மானமும் வீரமும் வன்மையும்
எஞ்சுமே கொல் இனி உன்னொடு என்னுமால்.
182
   
6786.
கையில் ஒன்றைக் கதும் எனப் பற்றிடாச்
செய்ய கண்படு செம்புனல் ஆட்டியே
வெய்யவன் கொடு விண்ணினும் தந்தகை
ஐய ஈது கொலோ என்று அரற்றுமே.
183
   
6787.
வாள் அரம் படு வாளிகள் மூழ்கலில்
சாளரங்கள் எனப் புழை தாங்கிய
தோளை மார்பினை நோக்கும் தொலைவு இலா
ஆளை நீ அலது ஆர் உளரே எனும்.
184
   
6788.
பாறு உலாய பறந்தலை தன் இடை
வேறு வேறு அது நின் மெய்யினைக்
கூறு செய்து அவன் ஆவி குடித்தலால்
ஆறுமோ என் அகத்துயர் என்றிடும்.
185
   
6789.
மூண்ட போர்த்தொழில் முற்றிய என் மகன்
ஈண்டு வந்தது ஒர் தூதுவன் எற்றிட
மாண்டு உளான் என்று உரைத்திடின் மற்றியான்
ஆண்ட பேர் அரசு ஆற்றல் நன்றே எனும்.
186
   
6790.
சிரத்தை மார்பினைச் செங்கையைத் தொன்மை போல்
பொருத்தி நோக்கிப் புரளும் என் புந்தியை
வருத்தும் ஆகுலம் மற்று அது கண்டு நீ
இருத்தியோ உயிரே இன்னும் என்றிடும்.
187
   
6791.
மருளும் அங்கை மறிக்கும் மதலையை
அருளின் நோக்கி அழும் விழும் சோர்வுறும்
புரளும் வாயில் புடைக்கும் புவியிடை
உருளும் நீட உயிர்க்கும் வியர்க்குமே.
188
   
6792.
மன்னர் மன்னவன் மற்று இது பான்மையால்
இன்னல் எய்தி இரங்கலும் அச்செயல்
கன்னி மா நகர்க் காப்பினுள் வைகிய
அன்னை கேட்டனள் ஆகும் எய்தினாள்.
189
   
6793.
நிலத்தில் வீழ்ந்து சரிந்து நெடு மயிர்
குலைத்த கையள் குருதிபெய் கண்ணினள்
அலைத்த உந்தியுள் ஆற்ற அரும் துன்பினள்
வலைத் தலைப் படு மஞ்ஞையின் ஏங்கினாள்.
190
   
6794.
அல்லல் கூர்ந்த அவுணன் தன் காதலி
தொல்லை வைகிய சூழலை நீங்கியே
இல்லை ஆகிய என் மகன் காண்பன் என்று
ஒல்லை ஆவலித்து ஓடினள் ஏகினாள்.
191
   
6795.
மா வலிக்கு மடங்கல் ஒப்பான் தனிக்
காவலிக்குத் துயர் வந்த கன்னிமீர்
நாவல் இக்கணம் நண்ணுதிர் என்று கூய்
ஆவலித்தனர் ஆயிழைமார் எலாம்.
192
   
6796.
வாங்கு பூ நுதல் மன்னவன் தேவி தன்
பாங்கர் மங்கையர் பற்பலரும் குழீஇக்
கோங்கம் அன்ன முலை முகம் கொட்டியே
ஏங்கியே துயர் எய்தி இரங்கினார்.
193
   
6797.
இந்திரைக்கு நிகர் வரும் ஏந்திழை
அந்தம் இல்லது ஒர் ஆயிழை மாரொடு
முந்தி யேகி முடிந்து துணிந்திடு
மைந்தன் மீமிசை வீழ்ந்து மயங்கினாள்.
194
   
6798.
மயங்கினாள் பின் மனம் தெளிவு எய்தினாள்
உயங்கினாள் மிக ஓ என்று அரற்றினாள்
தியங்கினாள் உரும் ஏறு திளைத்திடு
புயங்கம் என்னப் புரண்டு புலம்பினாள்.
195
   
6799.
வெய்யோன் என்று ஊழ் தீண்டுதலோடும் விண்ணில்                                    போய்
கையோடு அன்னாற் பற்றினை வந்து என் கண் முன்னம்
மொய்யோடு அன்று வெஞ்சிறை செய்த முருகாவோ
ஐயோ கூற்றுக்கு இன்று இரையாவது அறியேனே.
196
   
6800.
பண்டே வானம் செந்தழல் மூட்டிப் பகை முற்றும்
கொண்டே சென்றாய் அப்பகல் உன்றன் கோலத்தைக்
கண்டேன் இன்றே இக்கிடை தானும் காண்பேனோ
விண்டேன் அல்லேன் இவ்வுயிர் தன்னை வினையேனே.
197
   
4801.
பெற்றிடு திருவினில் பிறந்த வெம்சினம்
கற்றவர் உணர்வையும் கடக்கும் அன்னது
முற்று உறுகின்றதன் முன்னம் அன்பினோர்
உற்றன கூறியே உணர்த்தல் வேண்டும் ஆல்.
91
   
4802.
மன்னவர் செவி அழல் மடுத்ததாம் என
நன் நெறி தருவது ஓர் நடுவு நீதியைச்
சொன்னவர் அமைச்சர்கள் துணைவர் மேலையோர்
ஒன்னலர் விழைந்தவாறு உரைக்கின்றார் களே.
92
   
4803.
முற்று உற வருவது முதலும் அன்னது ஆல்
பெற்றிடு பயன்களும் பிறவும் தூக்கியே
தெற்றென உணர்ந்து பின் பலவும் செய்வர் ஏல்
குற்றம் ஒன்று அவர் வயின் குறுக வல்லதோ.
93
   
4804.
மால் வரு தொடர்பினால் வனத்துச் செல்லுமீன்
கோல் வரும் உணவினைக் குறித்து வவ்வியே
பால் வரு புணர்ப்பினில் படுதல் போல நீ
மேல் வருகின்றதை வினவல் செய்கிலாய்.
94
   
4805.
இந்திரன் ஆதி ஆம் இறைவர் தங்களை
அந்தரத்து அமரரை அலைத்த தீயவர்
முந்து உறு திருவொடு முடிந்தது அல்லதை
உய்ந்து உளர் இவர் என உரைக்க வல்லமோ.
95
   
4806.
தேவர்கள் யாரையும் திரை கொள் வேலையின்
மேவரு மீன்தொகை விரைவிற்று அம் என
ஏவினை இனிது கொல் இனிய செய்கை தம்
ஆவியில் விருப்பு இலார் அன்றி யார் செய்வார்.
96
   
4807.
அறை கழல் வாசவற்கு அலக்கண் ஆற்றியே
இறையினை அழித்தனை இருந்த மாநகர்
நிறை தரு வளன் எலாம் நீக்கு வித்தனை
சிறை இடை உய்த்தனை தேவர் யாரையும்.
97
   
4808.
அத்தகு தேவரால் ஐய நங்களுக்கு
இத்துணை அலக்கண் வந்து எய்திற்று இங்கு இது
மெய்த் திறம் ஆம் என விரைந்து உள் கொள்ளலை
பித்தரின் மயங்கினை பேதை ஆயினாய்.
98
   
4809.
பொன் நகர் அழிந்த நாள் புகுந்த தேவரை
இன்னமும் விட்டிலை இரக்கம் நீங்கினாய்
அன்னதற்கு அல்லவோ ஆறு மாமுகன்
உன்னுடன் போர் செய உற்ற தன்மையே.
99
   
4810.
பேறு தந்திடு பிஞ்ஞகன் பெரும் திருவுடன் நீர்
நூறு தன்னுடன் எட்டுகம் இரும் என நுவன்றான்
கூறுகின்றது ஓர் காலமும் குறுகியது அதனைத்
தேறுகின்றிலை விதி வலி யாவரே தீர்ந்தார்.
100
   
4811.
எத் திறத்தரும் நுங்களை வெல்கிலர் எமது
சத்தி வென்றிடும் என்றனன் கண் நுதல் தலைவன்
அத் திறத்தினால் அல்லவோ அறுமுகக் குமரன்
உய்த்த செய்ய வேல் உண்டது தாரகன் உயிரை.
101
   
4812.
பேதை வானவர் தங்களைச் சிறை இடைப் பிணித்தாய்
ஆதலால் உனக்கு ஆனது என் துன்பமே அல்லால்
ஏதும் ஓர் பயன் இல்லது ஓர் சிறு தொழில் இயற்றி
வேதனைப் படுகின்றது மேலவர் கடனோ.
102
   
4813.
குரவரைச் சிறு பாலரை மாதரைக் குறைதீர்
விரத நல் தொழில் பூண்டு உளோர் தம்மை மேல் அவரை
அரு மறைத் தொழிலாளரை ஒறுத்தனர் அன்றோ
நிரய முற்றவும் சென்று சென்று அலமரும் நெறியோர்.
103
   
4814.
அமரர் தம் பெரும் சிறையினை நீக்குதி ஆயின்
குமர நாயகன் ஈண்டு போர் ஆற்றிடக் குறியான்
நமது குற்றமும் சிந்தையில் கொள்ளலன் நாளை
இமை ஒடுங்கு முன் கயிலையின் மீண்டிடும் எந்தாய்.
104
   
4815.
சிட்டர் ஆகியே அமர் தரும் இமையவர் சிறையை
விட்டிடாது நீ இருத்தியேன் மேவலர் புரங்கள்
சுட்ட கண்நுதல் குமரன் நம் குலம் எலாம் தொலைய
அட்டு நின்னையும் முடித்திடும் சரதம் என்று அறைந்தான்.
105
   
4816.
தடுத்து மற்று இவை உரைத்தலும் வெய்ய சூர் தடக்கை
புடைத்து வெய்து உயிர்த்து உரப்பியே நகை நிலாப்                                       பொடிப்பக்
கடித்து மெல் இதழ் அதுக்கி மெய் பொறித்திடக் கனன்று
முடித்தன் இத்தலை துளக்கியே இன்னன மொழிவான்.
106
   
4817.
ஏவல் தொண்டு செய்து இன்னமும் கரந்த இந்திரற்கும்
தேவர்க்கும் சிறு பாலற்கும் சிவன் உறை கயிலைக்
காவல் பூதர்க்கும் அஞ்சினை கருத்து அழிந்தனையோ
மூவர்க்கும் வெலற்கு அரியது ஓர் மொய்ம்பு கொண்டு                                   உடையோய்.
107
   
4818.
எல்லை நாள் வரை இழைத்தலும் எம் பெரும் சத்தி
வெல்லும் நுங்களை என்றதும் கண் நுதல் விமலன்
சொல்ல யான் முன்பு கேட்டிலன் வஞ்சமும் சூழ்வும்
வல்லை வல்லை கொல் எம்பி நீ புதிது ஒன்று வகுத்தாய்.
108
   
4819.
நூற்றின் மேலும் ஓர் எட்டு உக நுவல் அரும் திருவின்
வீற்று இருந்து அரசு இயற்றுதிர் என்னினும் மேல் நாள்
ஆற்றினைச் சடை வைத்தவன் கொடுத்திடும் அழியாப்
பேற்றை யாவரே விலக்குவார் அது பிழை படுமோ.
109
   
4820.
ஆதிநாயகன் எம் பெரும் சத்தியே அல்லால்
ஏதிலார் வெலார் என்னினும் சத்தியும் இறையும்
பேதமோ வரம் கொடுத்தவன் அடும் என் கை பிழையே
ஓதலால் ஆவது ஓர் வழக்கமே உண்மையது அன்று ஆல்.
110
   
4821.
பழுது உறாது நம் போலவே வேள்வியைப் பயிலாது
அழிவு இலா வரம் பெற்றிலன் தாரகன் அதனால்
ஒழிவது ஆயினன் வச்சிர வாகுவும் உணர்வு இல்
குழவி ஆதலின் மாய்ந்தனன் ஈது கொல் குறையே.
111
   
4822.
அண்டம் ஆயிரத்து எட்டையும் தனி அரசாட்சி
கொண்டு வைகினன் குலத்தொடும் அமரர் தம் குழுவைத்
தொண்டு கொண்டனன் யாவர் வந்து எதிர்க்கினும்                                தொலையேன்
உண்டு கொல் இவண் எனக்கு நேர் ஆகவே ஒருவர்.
112
   
4823.
தவம் உயன்று உழல் அமரரின் அரக்கர்கள் தம்மின்
அவுணர் தங்களின் ஆயிரத்து எட்டு எனும் அண்டம்
புவனம் முற்றவும் ஒரு தனி ஆழியால் புரந்தே
எவர் எனக்கு நேர் ஆகவே அழிவு இலாது இருந்தார்.
113
   
4824.
மால் அயன் முதல் ஆகிய முதுவர்கள் வரம்பு இல்
காலமாக யான் அமரரைச் சிறை செயக் கண்டும்
சால என் தனக்கு அஞ்சியே இருந்தனர் தனியோர்
பாலனே கொலாம் அழிவு இலா என் உயிர் படுப்பான்.
114
   
4825.
வேறுபாடு உறா வச்சிரப் படிவமும் மிடலும்
ஈறு இலாதது ஓர் ஆயுளும் பெற்றிடும் என்னை
ஊறு தான் செயக் கூடுறாது ஒருவர்க்கும் என்றான்
மாறு போர் செய்து பாலனோ எனை அட வல்லான்.
115
   
4826.
எண் இலாதது ஓர் பாலகன் எனை வெல்வன் என்கை
விண் இலாதவன் தன்னை ஓர் கனி என வெஃகிக்
கண் இலாதவன் காட்டிடக் கை இலாதவன் போய்
உண்ணிலாத பேர் ஆசையால் பற்று மாறு ஒக்கும்.
116
   
4827.
என்று மற்று இவை சூரபன்மா இசைத்திடலும்
துன்று பஃறலைச் சீயமா முகம் உடைத் துணைவன்
நன்று நன்று என வினவியே இன்னமும் நான் இங்கு
ஒன்று கூறுவன் முனியலை கேட்டி என்று உரைப்பான்.
117
   
4828.
வாலிதாம் மதிச் சடிலமும் பவள மால் வரையே
போலும் மேனியும் முக்கணும் நால் பெரும் புயமும்
நீல மா மணிக் கண்டமும் கொண்டு நின்றனன் ஆல்
மூல காரணம் இல்லது ஓர் பரா பர முதல்வன்.
118
   
4829.
தன்னை நேர் இலாப் பரம் பொருள் தனிஉருக் கொண்டது
என்ன காரணம் என்றியேல் ஐந் தொழில் இயற்றி
முன்னை ஆர் உயிர்ப் பாசங்கள் முழுவதும் அகற்றிப்
பின்னை வீடு பேறு அருளுவான் நினைந்த பேர் அருளே.
119
   
4830.
அப்பரன் தனை உன்னியே அளவை தீர் காலம்
மெய்ப் பெரும் தவம் இயற்றினை அது கண்டு                                 வெளிப்பட்டு
ஒப்பு இலா வரம் உதவியே ஆங்கு அதற்கு ஒழிவும்
செப்பி வைத்தனன் தேர்ந்திலை போலுமத்திறனே.
120
   
4831.
பெறல் அரும் திரு உடைய நீ அறத்தினைப் பேணி
முறை புரிந்திடாது ஆற்றலால் அமரரை முனிந்து
சிறையில் வைத்தனை அது கண்டு நின் வலி சிந்தி
இறுதி செய்திட உன்னினன் யாவர்க்கும் ஈசன்.
121
   
4832.
வரம் அளித்த யாம் அழிப்பது முறை அன்று வரத்தால்
பெருமை பெற்று உள சூரனை அடுவது பிறர்க்கும்
அரிது எனப் பரன் உன்னியே தன் உரு ஆகும்
ஒரு மகன் கொடு முடித்தும் என்று உன்னினான்                                      உளத்தில்.
122
   
4833.
செம் நிறத் திருமேனியும் திரு முகம் ஆறும்
அன்னதற்கு இருதொகை உடைத் தோள்களும் ஆக
முன்னவர்க்கு முன்னான் ஆகிய பரா பர முதல்வன்
தன் நுதல் கணால் ஒரு தனிக் குமரனைத் தந்தான்.
123
   
4834.
மானுடத்தரில் விலங்கினில் புட்களில் மற்றும்
ஊனம் உற்று உழல் யாக்கையில் பிறந்து உளார் ஒப்ப
நீ நினைக்கலை பரம் சுடர் நெற்றி அம் தலத்தே
தான் உதித்தனன் மறைகளும் கடந்த ஓர் தலைவன்.
124
   
4835.
சீலம் இல்லவர்க்கு உணர ஒண்ணாத சிற்பரனைப்
பாலன் என்றனை அவன் இடத்தில் பல பொருளும்
மேலை நாள் வந்து தோன்றிய சிறியது ஓர் வித்தின்
ஆலம் யாவையும் ஒடுங்கியே அவதரித்தது போல்.
125
   
4836.
அருவு மாகுவன் உருவமும் ஆகுவன் அருவும்
உருவும் இல்லதோர் தன்மையும் ஆகுவன் ஊழின்
கருமம் ஆகுவன் நிமித்தமும் ஆகுவன் கண்டாய்
பரமன் ஆடலை யாவரே பகர்ந்திடல் பாலார்.
126
   
4837.
வேதக் காட்சிக்கும் உபநிடத்து உச்சியில் விரித்த
போதக் காட்சிக்கும் காணலன் புதியரில் புதியன்
மூதக் கார்க்கு மூதக்கவன் முடிவிற்கு முடிவாய்
ஆதிக்கு ஆதியாய் உயிர்க்கு உயிராய் நின்ற அமலன்.
127
   
4838.
ஞானம் தான் உருவாகிய நாயகன் இயல்பை
யானும் நீயும் ஆய் இசைத்தும் என்றால் அஃது எளிதோ
மோனம் தீர்கலா முனிவரும் தேற்றிலர் முழுதும்
தானும் காண்கிலன் இன்னமும் தன் பெரும் தலைமை.
128
   
4839.
தத்த மாற்றங்கள் நிறுவிய சமயிகள் பலரும்
கத்து புன் சொலை வினவினர் அவன் செயல் காணார்
சுத்த வாதுள முதலிய தந்திரத் தொகுதி
உய்த்து உணர்ந்திடு நீர் அரே ஒரு சிறிது உணர்வார்.
129
   
4840.
கருவி மெய்ப்புலன் காட்டுவான் காண்பவன் காட்சிப்
பொருள் எனப்படு நான்மையும் ஐவகைப் பொறியும்
இரு திறத்து இயல் வினைகளும் காலமும் இடனும்
மரபின் முற்று உறு பயனுமாய் நின்றவன் வள்ளல்.
130
   
4841.
ஞாலம் உள்ளது ஓர் பரம் பொருள் நாம் எனப் புகலும்
மாலும் வேதனும் மாயை ஆம் வரம்பினுள் பட்டார்
மூலம் ஆகிய தத்துவ முழுவதும் கடந்து
மேல் உயர்ந்திடு தனி முதல்வன் அன்றிவேறு ஆர்.
131
   
4842.
தூய பார் முதல் ஆகவே குடிலையின் துணையும்
மேய அண்டமும் உயிர்களும் வியன் பொருள் பலவும்
மாயும் நின்றனன் அல்லனும் ஆயினன் அவன் தன்
மாயை யாவரே கடந்தனர் மறைகளும் மயங்கும்.
132
   
4843.
இன்ன தன்மை சேர் முதல்வனைச் சிறுவன் என்று                                     இகழ்ந்து
பன்னு கின்றனை அவுணர் தம் கிளை எலாம் படுத்து
நின்னையும் தடிந்திடுவன் ஓர் இமைப்பினின் இரப்பும்
தன் அருள் திறம் காட்டுவான் வந்தனன் சமர்மேல்.
133
   
4844.
அற்றம் இல்வகை ஆயிரத்து எட்டு எனும் அண்டம்
பெற்றனம் என வியந்தனை தத்துவ பேதம்
முற்றும் உணர்ந்திலை தரணியோ அளப்பில உளகாண்
மற்றை அண்டங்கள் கேட்டியேல் மருளுதி மன்னோ.
134
   
4845.
குடிலை ஈறதா வாரியே முதலாதாக் குழுமி
உடைய அண்டங்கள் அலகில என்பர் ஒன்று ஒன்றின்
அடைதல் உற்றிடு புவனத்தின் பெருமை யார் அறிந்தார்
முடிவு உறாதது ஓர் பொருளினை முடிவு கூற அற்றோ.
135
   
4846.
அன்ன ஆகிய அண்டங்கள் அனந்த கோடியையும்
தன்னது ஆணையால் ஓர் இமைப் பொழுதினில் தரவும்
பின்னர் மாற்றவும் வல்லது ஓர் ஆதி அம் பிரான் காண்
உன்னொடே பொரும் ஆடலால் செந்தி வந்து உற்றான்.
136
   
4847.
வச்சிரத் தனி யாக்கை பெற்றனம் என மதித்தாய்
இச் சிரத்தையை விடுமதி இருவினைக்கு ஈடா
அச் செடுத்திடும் உயிர்கள் மாய்ந்திடும் என அறிஞர்
நிச்சயித்தனர் முடிவு உறாது இருத்தி கொல் நீயே.
137
   
4848.
பெருமை பெற்றிடு வானத்தின் நிலத்திடைப் பிறந்தோர்
இருமை பெற்றிடு காயமும் இறந்திடும் திண்ணம்
பருமிதத்து நின் வச்சிர யாக்கையும் பாரின்
உரிமை பெற்று உளது ஆதலான் அழிவு இன்றி உறுமோ.
138
   
4849.
அழிவு இல் மெய் வரம் பெற்றனம் என்றனை அதற்கு
மொழிதரும் பொருள் கேண் மதி முச்சகம் தன் உள்
கெழிய மன் உயிர் போல் சில வைகலில் கெடாது
கழி பெரும் பகல் இருந்திடும் பான்மையே கண்டாய்.
139
   
4850.
அச்சுதன் அயன் அமரர் ஆகிய பெயர் அவர்க்கு
நிச்சயம் படு முகமனே ஆன போல் நினது
வச்சிரத் தனி யாக்கையும் அழிவு இலா வரமும்
முச்சகம் தொழப் பல் உகம் இருத்தலாய் முடியும்.
140
   
4851.
வான் செய் தேவரை நீ அலைக் கின்றதை மதியா
ஊன் செய்கின்ற பல் உயிர்க்கும் உயிரது ஆம் ஒருவன்
தான் செய்கின்ற தொல் வரத்தினைத் தான்                                தவிர்த்திடுமேல்
ஏன் செய்தாய் என வினவியே நிறுவுவார் எவரே.
141
   
4852.
கெடுதல் இல்லது ஓர் வளனொடு நீயும் நின் கிளையும்
படுதல் இன்றியே வாழ்தி என்று இன்னன பகர்ந்தேன்
இடுதல் கொண்டிடு சிறை இடைத் தேவரை இன்னே
விடுதல் செய்குதி என்றனன் அறிஞரின் மிக்கான்.
142
   
4853.
இன்ன பான்மையான் மடங்கல் அம் பெருமுகத்து இளவல்
சொன்ன வாசகம் வினவியே மணி முடி துளக்கிக்
கன்ன மூடு செம் கனல் செறித்தால் எனக் கனன்று
முன்னை ஆகியோன் பின்னரும் சில சில மொழிவான்.
143
   
4854.
காற்றில் தள்ளுண்டு நெருப்பினில் சூடுண்டு கங்கை
ஆற்றில் தாக்குண்டு சரவணம் புக்கு அலையுண்டு
வேற்றுப் பேர் முலை உண்டு அழுதே விளையாடும்
நேற்றைப் பாலனையோ பரம் பொருள் என நினைந்தாய்.
144
   
4855.
பிரமம் ஆகிய ஒரு பொருள் உயிர் எனப் பேர் பெற்று
உருவம் எண் இல கொண்டு தன்மாயை யால் உலப்பு இல்
கரும பேதங்கள் ஆற்றிடும் பல் புனல் கடத்துள்
இரவி தன் உருத் தனித் தனி காட்டிய இயல்பின்.
145
   
4856.
கடம் தகர்ந்துழி அவற்றிடை வெளி ககனத் தோடு
அடைந்தவாறு போல் யாக்கையின் பேதகம் அனைத்தும்
முடிந்த காலையில் தொன்மைபோல் அபேதம் ஆம்                                     மொழிக்கும்
தொடர்ந்த சிந்தைக்கும் நாட ஒணாது அமர் பெரும்                                     சோதி.
146
   
4857.
பிரமமே இவர் அல்லவர் இவர் எனப் பேதித்து
இருமை ஆகவே கொள்ளலை யாக்கையே வேறு
பரமம் ஆகிய உயிர் எலாம் ஒன்று பல் பணியும்
பொருளது ஆகிய ஒருமையாய் முடிந்தவா போல.
147
   
4858.
விறலும் வன்மையும் இல்லவர் தாழ்வர் மேதக்க
நெறியர் ஓங்குவர் ஈது உலகத்து இடை நிகழ்ச்சி
இறுதி இல்லது ஓர் பெரியன் யான் அறுமுகன் என்போன்
சிறியன் ஆதலின் அவனை யான் வெல்குவன் திண்ணம்.
148
   
4859.
தொகைமை சான்ற நம் குரவர் பல்லோர் உயிர்                                   தொலைத்த
பகைஞர் ஆதலின் அமரரைச் சிறை இடைப் படுத்தேன்
மிகை செய்தார் களை நாடியே வேந்து ஒறுத்திடுதல்
தகைமையே என மனுமுறை நூல்களும் சாற்றும்.
149
   
4860.
மாகராய் உளோர் காப்பினை விடுகிலன் மற்றைப்
பாக சாதனன் தன்னையும் அரும் சிறைப் படுப்பன்
ஏக நாயகன் எய்தினும் எதிர்ந்து போர் புரிவன்
ஆகையால் இனி இச் சிறு மொழிகளை அயர்த்தி.
150
   
4861.
உரைப்பது என் இனி ஒரு வயிற்று என்னுடன் உதித்துப்
பெருக்கம் உற்றனை நம் குலப் பகைஞரைப் பெரிது
நெருக்கல் இன்றியே அவர்கள் பால் பட்டனை நீயே
இருக்க மற்று ஒரு தெவ்வரும் வேண்டுமோ எனக்கே.
151
   
4862.
பத்துக் கொண்ட நூறு உடையதோர் சென்னியும் பலவாம்
கொத்துக் கொண்டு அமர் தோள்களும் கரங்களின்                                    குழுவும்
எத்துக்கு ஆற்றினை வன்மையும் வீரமும் இழந்தாய்
பித்துக் கொண்டவர் தம்மினும் பேதைமை பிடித்தாய்.
152
   
4863.
தானவர் வழிமுறை தன்னை விட்டனை
வானவர் போன்றனை வன்மை சிந்தினை
மேல் நிகழ் திட்பமும் விறலும் மாண்டனை
மோனமொடு அரும் தவம் முயலப் போதி நீ.
153
   
4864.
மறந்தனை இகழ்ந்தனை மான நீங்கினை
சிறந்திடும் அவுணர் தம் சீர்த்தி மாற்றிடப்
பிறந்தனை ஈண்டு ஒரு பயனும் பெற்றிலை
இறந்தனை போலும் நீ இருந்துளாய் கொலோ.
154
   
4865.
மந்திரி ஆதியான் மற்று இதற்கு நீ
சிந்தையில் வெருக் கொளின் திசை முகத்தர் போல்
ஐந்தியல் அங்கம் ஒன்று அம் கை பற்றுதி
வெம் திறலே எனப் படையும் வீசியே.
155
   
4866.
கிளைத்திடு கள்ளியின் கிளை களாம் என
வளர்த்தனை பல தலை வரம்பு இல் கைத்தலம்
நெளித்தனை சுமந்தனை நெடிது காலமா
இளைத்தனை வலி இலாய் யாது செய்தி நீ.
156
   
4867.
பண்டு உணர்வு இல்லது ஓர் பருவம் ஆதலின்
கண்டனை வருணனைத் தளையின் இட்டனை
அண்டரை அலைத்தனை அறிவு கூடலின்
பெண்டிரின் நடுங்கினை பேடி போலும் நீ.
157
   
4868.
பல் நெடும் தலை உடைப் பாலன் ஆகும் முன்
வன்மையும் ஆடலும் வந்து பார்த்திட
இன்னமும் வந்திலள் வருந்தி ஈன்ற தாய்
அன்னை தன் குறை கொலோ அருவ மானதே.
158
   
4869.
பகை என ஒன்று உறில் பதை பதைத்து எழீஇச்
சிகை உடை வால் உளைச் சீயம் சீறியே
தகு விறல் கொள்ளும் ஆல் அவற்றின் தன்மை ஆய்
மிகுதலை பெற்றதும் வீண் கொல் எம்பி நீ.
159
   
4870.
பூதரைத் தலைவரைப் புராரி மைந்தனை
ஏதிலர் யாரையும் யான் வென்று ஏகுவன்
நீ தளர்வு எய்திடல் நினது மா நகர்
போதுதி என்றனன் புலன் இல் புந்தியான்.
160
   
4871.
என்று இவை அவுணர் கோன் இசைத்த காலையின்
நன்று இவன் உணர்வு என நகைத்துக் கண் தொறும்
துன்றிய பேர் அழல் சொரிய வெம் சினத்து
ஒன்றிய தன் உளத்து இனைய உன்னுவான்.
161
   
4872.
உறுதியை உரைத்தனன் உணர்வு இலாதவன்
வறிது எனை இகழ்ந்தனன் வருவது ஓர்கிலன்
இறும் வகை நாடினன் யாது ஒர் புந்தியை
அறிவு இலர்க்கு உரைப்பவர் அவரில் பேதையோர்.
162
   
4873.
உய்த்தனர் தேன் மழை உதவிப் போற்றினும்
கைத்திடல் தவிருமோ காஞ்சிரங் கனி
அத்தகவு அல்லவோ அறிவு இலாதவன்
சித்தம் அது உணர் வகை தெருட்டு கின்றதே.
163
   
4874.
தொலைக்கரும் திருவுடைச் சூரன் புந்தியைக்
கலக்கினும் உய்வகை கருது கின்றிலன்
அலக்கண் உற்று இருந்து நாம் இரங்கி ஆவது என்
விலக்கரும் விதியை யாம் வெல்ல வல்லமோ.
164
   
4875.
ஆவது விதி எனின் அனைத்தும் ஆயிடும்
போவது விதி எனின் எவையும் போகும் ஆல்
தேவருக்கு ஆயினும் தீர்க்கத் தக்கதோ
ஏவரும் அறி ஒணா ஈசற்கு அல்லதே.
165
   
4876.
நீண்ட செம் சடை முடி நிமலன் ஈந்த நாள்
மாண்டது மாய்ந்திடும் எல்லை வந்ததால்
ஈண்டு உளார் யாவரும் இறையும் துஞ்சும் ஆல்
பூண்டிடும் அமரர் கோன் தவமும் பொய்க்குமோ.
166
   
4877.
இறப்பது சரத மேல் இறைவன் என் உரை
வெறுத்தனன் இகழுமேல் வேண்டி இன்னும் யான்
மறுத்து எதிர் மொழியலன் மன்ன என் பிழை
பொறுத்தி என்று இன் உரை புகல்வது அல்லதே.
167
   
4878.
மன்னவர் மன்னவன் வள்ளல் வேலினால்
இன் இனி இறந்திடும் இதுவும் நோக்கியே
பின்னும் இங்கு இருந்திடல் பிழையது ஆகும் ஆல்
முன் உற முடிவதே முறை அதாம் எனா.
168
   
4879.
சிந்தனை செய்திடு சிங்க மா முகன்
தந்தையை நிகர் வரு தம் முன் தாள் தொழா
வந்தனை செய்தனன் மன்ன சீறிடேல்
புந்தி இலேன் பிழை பொறுத்தல் வேண்டும் ஆல்.
169
   
4880.
சிறியவர் ஒரு பிழை செய்யின் மேலவர்
பொறையொடு பின்னரும் போற்றல் அல்லதை
இறை அதும் வெகுள்வரோ யானும் செய் பிழை
அறிவன் நீ அன்றியே ஆர் அது ஆற்றுவார்.
170
   
4881.
பொறுத்தனை கோடி என் புன்மை உள்ள மேல்
செறுத்து எனை இகழ்ந்திடல் செருவில் சென்றுயான்
மறுத்து எதிர் மலைந்திடும் ஆற்றலார் தமை
ஒறுத்திடு கின்றனன் அதனை ஓர்தி நீ.
171
   
4882.
செருவினுக்கு ஏகுவன் செறுநர் தம்மிசைத்
தருதி ஆல் விடை எனத் தம்பி கேட்டலும்
பெரிது உளம் மகிழ்ந்தனன் பிறங்கு காதலால்
வருதி என்று அனையனை மார்பில் புல்லினான்.
172
   
4883.
பை அரவு அளித்திடும் பாதலத்தினில்
வையக வரைப்பினில் திசையின் வான்களிற்
செய்ய அண்டங்களில் செய்யும் வென்றி உள்
ஐய நிற்கு ஏது கொல் அரியது ஆனதே.
173
   
4884.
நீக்கம் இல் கேள்வியாய் நீ முன் சொற்றன
தூக்கு உறின் என் மனத் துணிவும் திட்பமும்
ஊக்கமும் உணரவே ஒன்னலார் எனும்
மாக்களை அடுவது ஓர் மடங்கல் அல்லையோ.
174
   
4885.
சென்றனர் மாற்றலர் என் கை தேர்தியேல்
கொன்ற பின் அல்லது கும்பிட்டு ஓடிட
வென்ற பின் அல்லது வெகுளி தீர்தியோ
உன்றனது ஆற்றலை உணர்கிலேன் கொலோ.
175
   
4886.
இற்றை நாள் நின் நகர் ஏகி ஆயிடை
உற்றிடு படை எலாம் ஒருங்கு கொண்டு நீ
கொற்றம் ஒடு இருக்குதி குமரன் ஈண்டு நின்
மற்று உனை விளிக்குவன் வருதியால் என்றான்.
176
   
4887.
ஒல் என முருகவேள் உனது மா நகர்
செல்லினும் ஏகலை செருவுக்கு அன்னது
சொல்லினை விடுத்தி ஓர் தூதன் தன்னை யான்
வல்லையின் அமர் செய வருகின்றேன் என்றான்.
177
   
4888.
என்றலும் அவுணருக்கு இறைவன் ஈங்கு இது
நன்று என விடை அது நல்கத் தாழ்ந்து போய்த்
தன் திருமா நகர் சார்ந்து வைகினான்
வன் திறல் உடையது ஓர் மடங்கல் பேரினான்.
178
   
4889.
ஆனது ஓர் பொழுதினில் அரசன் ஆண்டு உறை
தானை அம் தலைவரைத் தனயர் தங்களை
ஏனையர் யாரையும் ஏகச் செய்து தன்
மா நகர் இந்திர வளத்தின் வைகினான்.
179
   
4890.
அந்தம் இல் வளன் உடை அவுணர் காவலன்
மந்திரம் இருந்தது வகுத்துக் கூறினாம்
இந்திரன் முதலினோர் யாரும் ஏத்திடச்
செந்தியின் அமர்ந்தவன் செய்கை செப்புவாம்.
180