| முகப்பு |
தேவர்கள் போற்று படலம்
|
|
|
|
|
|
7795.
|
நேர் ஒரு சிறிதும் இல்லா நின்மலன் தனது வேலால்
சூர் உடல் பிளந்து இயாணர் மஞ்ஞையில் தோன்று காலைப்
பார் உலகு அயின்ற கண்ணன் பங்கயன் அமரர்கட்கு
ஓர்
ஆர் அமிர் எய்திற்று என்ன அன்னது கண்டே ஆர்த்தார்.
|
1 |
|
|
|
| |
|
|
|
|
|
7796.
|
ஆர்த்தனர் எழுந்து துள்ளி ஆடினர் பாடா நின்றார்
போர்த்தனர் பொடிப்பின் போர்வை பொலங்கெழு
பூவின் மாரி
தூர்த்தனர் அருளை முன்னித் தொழுதனர் சுடர் வேல் கொண்ட
தீர்த்தனை எய்திச் சூழ்ந்து சிறந்து வாழ்த்து எடுக்கல் உற்றார்.
|
2 |
|
|
|
| |
|
|
|
|
|
7797.
|
கார் தடிந்து துய்க்கும் கனை கடலின் நீர் வறப்பப்
போர் தடிந்து செல்லும் புகர் வேல் தனை விடுத்துச் சூர் தடிந்தாய் அன்றே தொழும் அடியேம் வல்வினையின் வேர் தடிந்தாய் மற்று எமக்கு வேறு ஓர் குறை உண்டோ. |
3 |
|
|
|
| |
|
|
|
|
|
7798.
| மாறு முகம் கொண்டு பொரு வல் அவுணர் மாளாமல் நூறு முகம் எட்டு நோதக்கன புரியத் தேறு முகம் இன்றித் திரிந்தேமை ஆள அன்றோ ஆறுமுகம் கொண்டே அவதரித்தாய் எம்பெருமான். |
4 |
|
|
|
| |
|
|
|
|
|
7799.
|
நீதிமுறை அதனில் நில்லா அசுரர் புரி
தீது பல உளவும் தீர்ந்தோம் பழி அகன்றோம்
வேத நெறி தொல்லை வெறுக்கை யோடு பெற்றனம்
ஆல்
ஏதும் இலையால் எமக்கு ஓர் குறை எந்தாய். |
5 |
|
|
|
| |
|
|
|
|
|
7800.
| மன்ற அவுணர் வருத்திட இந்நாள் வரையும் பொன்றின் அவர் என்னப் புலம்பித் திரிந்தனம் ஆல் இன்று பகை மாற்றி எமக்கு அருள் நீ செய்கையினால் சென்ற உயிர் மீண்டதிறம் பெற்றனம் ஐயா. |
6 |
|
|
|
| |
|
|
|
|
|
7801.
| செய்யும் அவனும் புலனும் செய்வித்து நிற்போனும் எய்தவரும் பொருளும் யாவையும் நீயே என்கை ஐய அடியேங்கள் அறிந்தனமால் அன்னதனால் வெய்ய பவம் அகன்று வீடும் இனிக் கூடுதும் ஆல். |
7 |
|
|
|
| |
|
|
|
|
|
7802.
| ஈண்டே எமருக்கு இடர் செய் அவுணர் எலாம் மாண்டே விளியும் வகை புரிந்து காத்தனை ஆல் வேண்டேம் இனி யாதும் மேலாய நின்கழற்கே பூண்டேம் தொழும்பு புகழேம் பிறர் தமையே. |
8 |
|
|
|
| |
|
|
|
|
|
7803.
| என்னா இயம்பி எவரும் இனிது ஏத்துதலும் கொன்னார் அயில் வேல் குமரன் அது கேளா அந் நாரணன் விரிஞ்சன் ஆதி ஆம் வானோர்க்குத் தன்னார் அருளின் தலைமை புரிந்தனனே. |
9 |
|
|
|
| |
|
|