கந்த வெற்புறு படலம்
 
8207.
இப்படி சில நாள் இதன் மிசை வைகல் ஒன்றில்
ஒப்பு அரும் கந்த வெற்பில் உறைவது கருதிச் செவ்வேள்
செப்பு உறழ் கொங்கை யோடும் சின கரம் தணந்து செல்ல
அப் பரிசு உணர்ந்து வேதா ஆதியர் யாரும் போந்தார்.
1
   
8208.
பெருந்தகை அனைய காலைப் பிரமன் மால் முதலோர்                            யாரும்
விரைந்து தம் பதங்கள் செல்ல விடை புரிந்து அங்கண்                            வானத்து
இருந்து அரசு இயற்ற விண்ணோர்க்கு இறைவனை
                           நிறுவித் தெய்வத்
திருந்து இழை அணங்கினோடும் சென்று தன் தேரில்                            புக்கான்.
2
   
8209.
தேர் இடைப் புகுந்த ஐயன் திறல் உடை மொய்ம்பன்                                   பாகாய்ப்
பார் இடைச் சென்று முட்கோல் பற்றினன் பணியால்                                   உய்ப்பப்
போர் உடைச் சிலை வல்லோரும் பூதர் தம் கடலும்
                                  சுற்றக்
கார் உடைக் களத்துப் புத்தேள் கயிலை மால் வரையில்                                   போந்தான்.
3
   
8210.
போனது ஓர் காலை வையம் பொள் என இழிந்து முக்கண்
வானவன் தன்னை ஆயோடு அடிகளை வணக்கம் செய்து
மேனதோர் கருணையோடும் விடை பெறீஇ விண்                                உளோர்கள்
சேனை அம் தலைவன் கந்தச் சிலம்பினில் கோயில்                                புக்கான்.
4
   
8211.
புக்கது ஓர் குமர மூர்த்தி பொரு திறல் வயவர் யாரும்
தொக்கனர் பணியில் நிற்பத் தொல் படைக் கணங்கள்                                 போற்ற
மைக்கரும் குவளை ஒண்கண் மடவரலோடு மேவி
மிக்கு உயர் மணிப் பீடத்தில் வீற்று இருந்து                                 அருளினானே.
5
   
8212.
துய்யது ஓர் மறை களாலும் துதித்திடற்கு அரிய செவ்வேள்
செய்ய பேர் அடிகள் வாழ்க சேவலும் மயிலும் வாழ்க
வெய்ய சூர் மார்பு கீண்ட வேல் படை வாழ்க அன்னான்
பொய் இல் சீர் அடியார் வாழ்க வாழ்க இப் புவனம்                                      எல்லாம்.
6
   
8213.
காசினி வியத்தகு கந்த வெற்பு இடைத்
தேசு உடை முருகவேள் சேர்ந்த செய்கையைப்
பேசினன் இங்கு இனிப் பிறங்கு பொன்னகர்
வாசவன் இயற்கையும் மற்றும் கூறுகேன்.
1
   
8214.
துண் என அவுணரைத் தொலைத்த வேற் படைப்
பண்ணவன் அருளினால் பலரும் போற்றிட
விண் அரசு இயற்றிய வேந்தன் ஓர் பகல்
எண்ணினன் உளந்தனில் இனைய நீரதே.
2
   
8215.
பற்று அலர் சிறு தொழில் பலவும் ஆற்றியே
உற்றதும் அளப்பு இலா உகம் ஒளித்தது
மற்று அதன் இடை இடை வந்த தீமையும்
பெற்றிடும் துன்பமும் பிறவும் உன்னினான்.
3
   
8216.
மறுத்தனன் சசியுடன் வைகும் வாழ்க்கையை
வெறுத்தனன் வெறுக்கையை வேந்து இயற்கையும்
செறுத்தனன் தவத்தினால் சேர்வன் வீடு எனாத்
துறத்தலை உன்னினன் துறக்கம் மேயினான்.
4
   
8217.
இந்திரன் இயற்கையை எண்ணி வானவர்
மந்திரி ஆகியும் மன்னன் ஆகியும்
அந்தணன் ஆகியும் அமரும் பொன்னவன்
புந்தியில் ஈது ஒரு புணர்ப்பை உன்னினான்.
5
   
8218.
உன்னிய மேலவன் உம்பருக்கு எலாம்
மன்னவன் உழைதனில் வந்து வைகியே
கொன்னவில் வச்சிரம் கொண்ட பாணியாய்
இன்னன கேள் என இயம்பல் மேயினான்.
6
   
8219.
புன் தொழில் ஆகிய பொய்யும் வாய்மையாம்
ஒன்று ஒரு பெரும் பயன் உதவும் ஆயிடின்
என்றனர் சுர குரு இந்திரன் பதம்
நின்றிட ஈது ஒரு நிகழ்ச்சி கூறுவான்.
7
   
8220.
அன்பு நீங்கிய அவணருக்கு அரசனால் பட்ட
துன்பம் ஆனதை உன்னியே துறக்க மேல் அரசும்
இன்ப வாழ்க்கையும் வெறுத்தனை இவை                             வெறுத்தனையேல்
பின்பு நோற்று நீ ஆற்றலால் பெறும் பயன் யாதோ.
8
   
8221.
சிந்தை வெந்துயர் உழந்தவர் அல்லரோ திருவும்
அந்தம் இல் பெரு வாழ்க்கையும் எய்துவர் அது தான்
மைந்த வாழி கேள் நின் அளவு அன்று காண் மதிக்கின்
இந்த மூவுலகம் தனில் வழங்கிய இயற்கை.
9
   
8222.
ஓவரும் தவம் இயற்றிய முனிவரில் உலகத்
தேவர் தங்களில் பாதலத்தோர்களில் சிறந்த
மூவர் என்று பேர் பெற்றிடு முதல்வர்கள் தம்மில்
ஏவர் மங்கையர் முலைத் தலைப் போகம் விட்டு                                இருந்தோர்.
10
   
8223.
போன துன்பினுக்கு அஞ்சியே புகுந்த இத் திருவை
ஊனம் ஆம் எனத் துறந்து நீ தமியை நோற்று உழலின்
ஆன போது உறும் துயரினுக்கு அவதியும் உண்டோ
கானல் நீந்திட வெருவியே கடல் புக வற்றோ.
11
   
8224.
ஆக நோவுற வருத்தியே ஐம் புலன் அவித்து
மோகம் ஆதி ஆம் மூவிரு குற்றமும் முருக்கி
யோகு செய்திடும் மேலையோர் பெறும் பயன் உரைக்கில்
போகம் அன்றி ஒன்று இல்லை காண் எல்லை தீர்                                  புகழோய்.
12
   
8225.
காண் தகும் புலன் ஒடுங்குமாம் காரணமும் இலையாம்
பூண்ட செய்கையும் ஒழியுமாம் யாக்கையும் போமாம்
ஆண்டு ஒர் பேரின்பம் உண்டு என்பர் அதனையார்                                  அறிந்தார்
ஈண்டு கண்டதே மெய் என்பர் உலகு உளோர் யாரும்.
13
   
8226.
பொய்ம்மை உற்றிடு கானலைப் புனல் என விரும்பிக்
கைம்மிசைக் கொண்ட அமிர்தினைக் அமர் உகுத்து                                     ஆங்கு
மெய்ம்மையில் சிலர் உண்டு எனும் வீடு பேறு உன்னி
இம்மையில் பயன் இழக்குதி நன்று நின் எண்ணம்.
14
   
8227.
மங்கை மார் இடத்து இன்பமே இன்பம் மற்று அவரோடு
இங்கு வாழ்வு உறும் வாழ்க்கையே இயல்பு உறும்                                    வாழ்க்கை
அங்கு அவர் பெறு செல்வமே செல்வம் ஆங்கு அவர்தம்
கொங்கை புல்குறா வறுமையே கொடியது ஓர் வறுமை.
15
   
8228.
மறு இலாதவாள் மதி முக மடந்தையர் புணர்ப்பைச்
சிறிய இன்பம் என்று உரை செய்வர் அன்னதன் சிறப்பை
அறிவரே எனின் ஆங்கு அதே பேரின்பம் ஆகும்
இறைவ நீ அது கேட்டியேல் மொழிகுவன் என்றான்.
16
   
8229.
ஏமம் சான்றிடு குரவன் மற்று இவை இவை இசைப்ப
நாமம் சான்றிடு குலிச மாப் படையினன் நகையா
ஓமம் சான்றிடு தீ முன்னர் இழுது என உடைந்து
காமம் சான்றிடும் உளத்தனாய் இனையன கழறும்.
17
   
8230.
பொருந்து மாசினை அகற்றி நல் காட்சியைப் புரியும்
மருந்து போலுறு குரவ நீ மடந்தையர் சிறப்பும்
திருந்து காம நல் இன்பமும் எனக்கு அருள் செய்யாது
இருந்த காரணம் என் கொலோ இன்று காறு என்றான்.
18
   
8231.
வெற்று உடலத்தில் விழித் தொகை பெற்ற
சிற்று அறிவோன் இவை செப்புதலோடும்
மற்று இவன் உள்ளம் மயங்கினன் என்னாக்
கற்று உணர் மந்திரி கட்டுரை செய்வான்.
19
   
8232.
மாதர்கள் மேன்மைகள் மன்மத நன்னூல்
ஓதிடும் உண்மையை ஓர்ந்து உணர் கின்ற
காதல் இலா வழி கட்டுரை செய்யார்
ஆதலின் ஐய அறைந்திலன் இந்நாள்.
20
   
8233.
கோண் மதியே குடையா வரு கோன் தன்
மாண் மதி நூல் எனும் வான் கடன் முற்றும்
நீண் மதியால் உணர்ந்தேன் அதன் நீர்மை
கேண் மதி என்று கிளத்திடு கின்றான்.
21
   
8234.
ஈறு இல என்றும் இயம்பினர் பத்தே
நூறுடன் எட்டு எனும் நூலும் நுவன்றார்
வேறும் இசைத்தனர் மெய்ச் சமயந்தான்
ஆறு என ஓதினர் ஆங்கு அவை தம்முள்.
22
   
8235.
சுதை அமுதே எனத் துய்த்திடு நீரார்க்கு
இதம் மிக நல்குவது இம்மையின் முத்திக்
கதி அருள் கிற்பது காமர் உலோகாய
அதம் எனவே நெறி ஒன்று உளது அன்றே.
23
   
8236.
அச் சமயத் தலை யாற்றிடை நின்றே
எச்சம் இல் வீடு பெற்று இன்புறு கின்றோர்
மெச்சியல் ஆடவர் மேலதை ஈவோர்
நச்சு உறு கூர் விழி நாரியர் தாமே.
24
   
8237.
அம் மடவார் இயலானவும் அன்னோர்
தம்மை அடைந்திடு தன்மையும் மேவும்
செம்மை கொள் ஆடவர் செய்கையும் எல்லாம்
மெய்மையது ஆக விளம்பிடும் வேள் நூல்.
25
   
8238.
சாதி இயற்கைகள் தத்துவம் மாந்தர்
தீது இல் குணத் தொடு தேசம் அவத்தை
போது கருத்திவை ஆதிய போர் வேள்
வேதம் உரைக்கும் விழுப் பொருள் மாதோ.
26
   
8239.
வசை தவிர் மானினி மால் வடவைப் பேர்
இசை இனி அத்தினி ஏந்திழை யோர்க்காம்
அசைவு அறு தொல் மர பாடவர் யார்க்கும்
கசன் இடபன் அசுவன் இதை தாமே.
27
   
8240.
முன்னம் உரைத்திடும் மும் மரபுக்குள்
கன்னியர் ஆடவர் காமர் குறிக்கும்
மன்னிய ஆழமும் நீளமும் முற்றும்
இன்னன வென்றிட ஏற்பது இயற்கை.
28
   
8241.
அந்தம் இல் தேவர் அருந்தவர் நாகர்
கந்தரு வத்தர் கணங்கெழு பூதர்
முந்தும் அரக்கர் இயக்கர் முரண் பேய்
தம் திறன் ஆவது தத்துவம் ஆமே.
29
   
8242.
எண்மை கொள் தத்துவ ஆற்று இடை நின்ற
பெண்மையரை வளி பித்து என ஓதும்
வண்மை கொள் முக்குணம் மன்னினர் மற்று அவ்
உண்மை படைத்திடல் ஒண் குணன் ஆமே.
30
   
8243.
உருவும் வண்ணமும் ஓங்கும் செயற்கையும்
அரிவை மார்கள் தம் நாளும் அனையவும்
தெரிய நாடித் தெளிந்து அறிகிற்பர் ஆல்
மரபு தான் முதல் வான் குணத்து ஈறுமே.
31
   
8244.
ஏறு தேசம் தொறு ஈண்டிய மாதர் தம்
ஊறும் நீதியும் உள்ளமும் செய்கையும்
வேறு வேறு வினவி எல்லோர்களும்
தேற நிற்பது தேச இயற்கையே.
32
   
8245.
தரித்த வாலை தருணை பிரவுடை
விருத்தை ஆகும் வியன் பருவங்களின்
உரைத்த காலமும் உள்ளத்தின் வேட்கையும்
பிரித்து அறிந்திடப் பெற்ற தவத்தையே.
33
   
8246.
கோலம் ஆம் முக் குணத்தர் முப்பான்மையர்
நால்வர் எண்மர் ஆம் நாரியர் பற்று உற
ஏலும் ஆடவர் எய்துதற்கு கேற்ற பல்
காலமும் தெரிகிற்பது காலமே.
34
   
8247.
மக்கள் காமம் வடிவினில் வைகலும்
பக்கம் தோறும் இழிந்து உயர் பான்மையால்
புக்கது ஓர் இடை நாடிப் புரை ஒரீஇத்
தக்க செய்வதும் சாற்றிய மேலதே.
35
   
8248.
பற்று உளோரையும் பற்று இலர் தம்மையும்
முற்று உளோரையும் முற்று இலர் தம்மையும்
மற்று உளோரையும் மாந்தர்கள் தேற்றும் ஆல்
துற்ற செய்கை உளங்கொள் கருத்ததே.
36
   
8249.
இங்கு இவை ஆடவர் இயல்பும் சால்பு உறு
மங்கையர் பான்மையும் வகுத்தது அன்னவர்
பொங்கிய புணர்வகை புணர்ச்சிக்கு ஏற்பது ஓர்
அங்கிதம் பிறவுமேல் அறைய நின்றவே.
37
   
8250.
புல்லுதல் சுவைத்திடல் புணர் நகக்குறி
பல்லுறல் மத்தனம் பயிலும் தாடனம்
ஒல் ஒலி கரணமோடு உவகை ஆகிய
எல்லையில் புணர் நிலைக்கு இயைந்த என்பவே.
38
   
8251.
விரைதலே சமம் தூக்கு என்னும் வேகமும் உச்சம் நீசம்
புரைதவிர் சமம் என்று ஓதும் பொருண்மையும் குணத்தில்                                        பற்றிப்
பரவும் ஐ வகையில் ஈரைம் பகுதியால் பிறவால் சேர்தல்
உரைதரு புணர்ச்சி ஆகும் உபரியும் அனையது ஒன்றே.
39
   
8252.
உறுத்தலே நெருக்கல் மெல்ல உரோசுதல் உறுதல் முன்னா
மறுத்தவிர் தருவு சூழ்ந்த வல்லியே மரம் மேல் கோடல்
செறித்த வெள் அரிசி பாலார் தீம் புனல் செயிர் தீர்                                         காட்சிப்
புறத்தில் ஓர் உறுப்பு உறுத்தல் புணர்ச்சியில் புல்லல் பால.
40
   
8253.
வைத்தலே துடித்தல் ஒற்று மரபு ஒப்பு விலங்கு சுற்றே
உத்தர மதுக்கல் உள்ளீடு ஓங்கு சம்புடாதி தன்னால்
பத்துடன் ஒன்றும் ஏனைப் பல்வகை உறுப்பு நாடி
முத்திறத்து அமிர்தம் உண்டல் முன் மொழி சுவைத்தல்                                        ஆமே.
41
   
8254.
சுரிதகம் எண் நாள் திங்கள் தூய மண்டலமே மஞ்ஞை
நிரலடி முயலின் புன்கால் நெய்தலின் இதழே வேங்கை
உருகெழு நக விரேகை உருவில் ஏழ் உறுப்பு இலங்கும்
வரன் முறை நகத்தால் தீட்டல் வள் உகிர்க் குறியது                                      அன்றே.
42
   
8255.
துவர் படு பவள மாலை சுனக மூடிகமே ஏனக்
கவரடி மணிபோழ் வட்டக் கடி கண்டப் பிரத முற்றும்
இவை அல பிறவும் போல இன் அமுது உண்ட தானம்
அவை தமில் நெறியால் தந்தம் அழுத்தல் பல் குறியது                                        அம்மா.
43
   
8256.
உரமுதல் ஐந்தில் ஐம்பால் உணர் தொழில் முறையால்                                     ஏற்பப்
பொருவரு புணர்ச்சி வேலை புடைத்திடல் புடைப்பது                                     ஆகும்
கரி கரம் ஆதி ஆய கனங்குழை மகளிர் வெஃக
மருவிய வழிபாடு அன்றே மத்தனம் என்ப வல்லோர்.
44
   
8257.
மயில் புற அன்னம் காடை வண்டு வாரணம்                              செம்போத்துக்
குயில் என இசைக்கும் எட்டின் குரலினைப் பயின்று
                             காமர்
இயல் உறு மகளிர் பாங்கர் எய்து உழி இவையில்                              வேண்டும்
செயல் வகை புரியுமாறு சிறந்தசீற் காரம் ஆமே.
45
   
8258.
பாரியல் கிராமியம் சீர்ப் பவுத்திக நாக பாசம்
ஏரியல் நாகரீகம் இந்திராணி இகமே கூர்மம்
சாரிதம் ஆய்தம் மூர்த்தம் சங்கிராணி கமண்டூகம்
பாரிசம் பிடிதம் சூலம் சுரும்பிதம் பதும பீடம்.
46
   
8259.
எண் தகும் சம்புடம் வேட்டிதம் விசும்பிதம் உற்புல்லம்
பிண்டிதம் பீடிதம்மே பிரேதுகை அநுபாதம் தான்
பண்டதங் கடக மத்த பத்ம வாசனம் சமூர்த்தம்
தண்டகம் லளிதம் வேணுச் சாரிதம் சமவே சன்னம்.
47
   
8260.
ஆடவம் சம புடத்தோடு அமர் பரிவத்த கஞ்சம்
காடகம் தேனு கம்மல் கடகம் ஐம்பதமே சானு
மாடு அமர் துகிலம் பீனம் ஆத்திகமே கூர்ப் பன்னம்
பீடிதோர் உகமம் பீதம் பீடிகையோடு பின்னும்.
48
   
8261.
ஒட்டு விக்கிரமமே கோயூதகம் என்னும் நாற்பான்
எட்டு உள திறத்தினானும் இவை அல பிற வாற்றானும்
மட்டு அமர் குழலினார்கள் மகிழ்தர மதநூல் தேறும்
சிட்டர்கள் புணரும் பான்மை சித்திரக் கரணம் ஆமே.
49
   
8262.
திணை நிலை மகளிர் தத்தம் திறங்களும் சேர்தல்                                    மாண்பும்
உணர்குவர் எனினும் மற்ற ஓண் குழு அதனுள் நின்ற
கணிகையில் பரத்தை காமக் கன்னியர் ஓழிந்தோர்                                    தம்மைப்
புணர்கையும் பிறவும் தேர்தல் புலமையோர் கடனாம்                                    அன்றே.
50
   
8263.
முன்னுற மதன நூலின் முறை எலாம் தொகையில் கூறி
அன்னதன் வகையும் கூறி அகலமும் எடுத்துக் கூறிப்
பொன்னவன் இருத்தலோடும் புரந்தரன் அவற்றை ஓர்ந்து
கன்னியை புணரும் காமக் கவலை மேல் கருத்தை                                   வைத்தான்.
51
   
8264.
கொற்ற வெங் குலிச வள்ளல் குரவனை இறைஞ்சி
                                 எந்தை
சொற்றிடு பான்மை எல்லாம் துணிவு அதுவாகக்                                  கொண்டேன்
மற்று ஒரு பொருளும் வெஃகேன் வரம்பிலா இன்பம்                                  தன்னைப்
பெற்றனன் போலும் என்னப் பெரு மகிழ்வு எய்திப்                                  போனான்.
52
   
8265.
திரை செறி கடல் எனத் திளைக்கும் இன்பநூல்
உரை செய்து பொன்னவன் உவப்பில் போந்திட
விரை செறி தொங்கலான் மேலைப் பொன்னகர்
அரசினை மதலை பால் ஆக்கினான் அரோ.
53
   
8266.
விண் உலகு ஆளுறும் வேந்து இயற்கையை
அண்ணல் அம் சயந்தனுக்கு அருளி இந்திரன்
தண் உறு சசிமுகச் சசியைக் கூடியே
எண்ணரும் போகம் உற்று இனிது வைகினான்.
54
   
8267.
அலைகடல் அமிர்தினை வெறுக்கும் ஆயிழை
இல இதழ் அமுதமே இனிது என்று உண்டிடும்
கொலை அயிராவதம் துறக்கும் கோல்வளை
முலை அயிராவதம் முயங்கி மேவுமே.
55
   
8268.
வெல்குறும் வலி உடை விருத்திரன் மிசைச்
செல்குறும் தெய்வதத் தேரைச் சீறிடும்
ஒல்குறு நுசுப்பினை உடைய மங்கை தன்
அல்குல் அம் தேர்மிசை அசைந்து வைகுமே.
56
   
8269.
கருங்கடல் சூழ் புவி கவிழ்ந்து துன்புற
இரங்கிய இடிக் கொடி இகழ்ந்து காய்ந்திடும்
பொருங்கணை விழி உடைப் புலோமசைத்திரு
மருங்குல் மின் கொடியின் மேல் மகிழ்ச்சி கொள்ளுமே.
57
   
8270.
இயல் படு தவ முனி யாக்கை என்பினால்
செயல் படு வச்சிரம் செங்கை நீத்திடு
மயில் பெடை அன்னது ஓர் மடந்தை கண் எனும்
அயில் படை சேர்ந்திட அதனைத் தாங்குமே.
58
   
8271.
இருள் நிற விசும் பினில் இடை அறாமலே
வரு சிலை இரண்டையும் மறக்கு மா மலர்த்
திரு நிகர் வனப்பு உடைத் தெய்வ மங்கை தன்
புருவ வெஞ் சிலைகளே பொருள் என்று உன்னும் ஆல்.
59
   
8272.
ஏந்தல் அம் புயலினை இகழும் ஏந்திழை
கூந்தல் அம் புயல் மிசை உவகை கூர்ந்திடும்
பூந் தரு வல்லியை முனியும் பூண் முலை
வாய்ந்திடும் உரோமமாம் வல்லி புல்லுமே.
60
   
8273.
இத்திறம் இந்திரன் இந்திராணி பால்
வைத்திடும் உளத்தினன் மறுமை எய்தினும்
கைத்திடு கருத்தினன் காமத்து இன்பமே
துய்த்தனன் மதன நூல் துணிபு நாடியே.
61
   
8274.
அன்னது ஓர் நாளில் ஓர் நாள் அமரர் கோன் ஆணை                                    போற்றிப்
பொன் நகர் செங்கோல் ஓச்சிப் புரந்திடும் சயந்தன்                                    என்போன்
தன் அயல் வந்து வைகும் தாபதர் அமரர் தம் முள்
முன் உறுகின்ற ஆசான் முகன் எதிர் நோக்கிச்                                    சொல்வான்.
62
   
8275.
எந்தை கேள் மலரோன் ஆதி இயம்பிய அமரர் யாரும்
அந்தம் இல் முனிவர் யாரும் ஆற்றல் வெஞ் சூரன்                                     தன்னால்
வெந் துயர் உழந்து தொல்லை மேன்மையும் இழந்து தாழ
வந்தகாரணம் அது என் கொல் என்றலும் மறையோன்                                     சொல்வான்.
63
   
8276.
விண்ணவர் ஆயினோர்க்கும் மேதகு முனிவர் யார்க்கும்
எண்ணம் இல் சூரன் தன்னால் எய்திய தீமை எல்லாம்
நண்ணலர் புரம் மூன்று அட்ட நாதனை அன்றித் தக்கன்
பண்ணிய மகத்தில் புக்க பாவத்தால் விளைந்தது என்றான்.
64
   
8277.
என்றலும் சயந்தன் கேளா ஈது காரண மேல் அந்தப்
புன்தொழில் தக்கன் வாழ்க்கை புரம் எரி படுத்த தேவை
அன்றியே செய்த வேள்வி ஆயிடை நிகழ்ச்சியாவும்
ஒன்று அற உரைத்தல் வேண்டும் சிறியனேன் உணர்தற்கு                                       என்றான்.
65
   
8278.
சயந்தன் என்று உரைக்கும் வள்ளல் சாற்றியது உணரா                                       ஆற்ற
வயந்தனை எய்தி வாழி மதலை கேள் இதனை என்னா
வியந்திடும் அகந்தை தன்னால் மிக்குறு தக்கன் காதை
நயம் தரு மொழியால் ஆசான் இத்திறம் நவிலல் உற்றான்.
66