| முகப்பு |
தக்கன் தவம் செய் படலம்
|
|
|
|
|
|
8311.
|
தந்தை இவ் வகை உரைத்தலும் கேட்டு உணர் தக்கன்
முந்து வீடு சேர் நெறியினை உன்னலன் முக்கண்
எந்தையால் அயன் முதல் அவர் தம்மினும் யான் ஓர்க்கு
அந்தம் இல் வளம் பெறுவன் என்று உன்னினன் அகத்துள்.
|
1 |
|
|
|
| |
|
|
|
|
|
8312.
| ஏத வல் வினை உழந்திடும் ஊழினால் இதனைக் காதலோடு உனித் தந்தையை வணங்கி நீ கழறும் ஆதி தன்னை யான் பரம் என அறிந்தனன் அவன் பால் மா தவத்தினால் பெற்றிட வேண்டினன் வளனே. |
2 |
|
|
|
| |
|
|
|
|
|
8313.
|
கணிப்பு இல் மா தவம் புரிதர ஓரிடம் கடிதில்
பணித்து நல்குதி விடை என நால் முகப் பகவன்
இணைப்பு இலாத தன் மனத்து இடைத் தொல்லை நாள் எழுந்த
மணிப் பெரும் தடத்து ஏகு என விடுத்தனன் மன்னோ. |
3 |
|
|
|
| |
|
|
|
|
|
8314.
| ஈசன் நல் அருள் அன்னது ஓர் மானதம் என்னும் வாச நீர்த் தடம் போகி ஓர் சார் இடை வைகி வீசு கால் மழை ஆதபம் பனிபட மெலியாப் பாசம் நீக்குநர் ஆம் என அரும் தவம் பயின்றான். |
4 |
|
|
|
| |
|
|
|
|
|
8315.
| காலை நேர் பெற ஓட்டியே கனலினை மூட்டிப் பால மார் அயன் வீட்டியே தன் உறு படிவத்து ஏலும் அன்பினில் மஞ்சனம் ஆட்டியே இறைக்குச் சீல மா மலர் சூட்டி உள் பூசனை செய்தான். |
5 |
|
|
|
| |
|
|
|
|
|
8316.
|
சுத்தம் நீடிய தன் உளம் ஒருமையில் தொடர
இத் திறத்தினால் எம் பிராற்கு அருச்சனை இயற்றிச் சித்த மேல் அவன் நாமமும் விதிமுறை செப்பிப் பத்து நூறு ஆண்டு அரும் தவம் புரிந்தனன் பழையோன். |
6 |
|
|
|
| |
|
|
|
|
|
8317.
|
அன்னம் ஊர்தி சேய் அன்ன மா தவம் செயும் அதனை
முன்னி நல் வளன் உதவுவான் மூரி வெள் ஏற்றில்
பொன்னின் மால் வரை வெள்ளி அம் கிரி மிசைப் போந்து
ஆல்
என்ன வந்தனன் உமையுடன் எம்மை ஆள் இறைவன். |
7 |
|
|
|
| |
|
|
|
|
|
8318.
|
வந்த செய்கையைத் தெரிதலும் விரைந்து எழீஇ மற்று என்
சிந்தை எண்ணமும் முடிந்தன ஆல் எனச் செப்பி உந்து காதலும் களிப்பும் உள் புக்கு நின்று உலவ எந்தை தன் அடி பரவுவல் யான் என எதிர்ந்தான். |
8 |
|
|
|
| |
|
|
|
|
|
8319.
| சென்று கண் நுதல் அடி முறை வணங்கியே சிறப்பித்து ஒன்று போலிய ஆயிரம் துதி முறை உரையா நின்ற காலையில் உன் செயல் மகிழ்ந்தனம் நினக்கு என் இன்று வேண்டியது இயம்புதி ஆல் கடிது எனலும். |
9 |
|
|
|
| |
|
|
|
|
|
8320.
| ஆற்றுதற்கு அரு நோன்மையன் ஆகியோன் அமலன் பேற்றின் வேண்டுவ கொள்க என இசைத்தலும் பிறவி மாற்றும் முத்தி அது இரந்திலன் தொல் விதி வழியே ஏற்ற புத்தியும் சேறலின் மயங்கி ஈது இசைப்பான். |
10 |
|
|
|
| |
|
|
|
|
|
8321.
| நீள் நிலப் பெரு வைப்பும் நிகர் இலா வீணை வல்லவர் ஏனையர் மேவிய சேணும் மால் அயன் ஊரும் திசையும் என் ஆணை செல்ல அளித்து அருள் செய்தி ஆல். |
11 |
|
|
|
| |
|
|
|
|
|
8322.
| உன்னை வந்து வழுத்தும் உயிர் எலாம் என்னை வந்து வழுத்தவும் யான் இனி நின்னை அன்றி நெஞ்சாலும் பிறர் தமைப் பின்னை வந்தியாப் பெற்றியும் ஈதி ஆல். |
12 |
|
|
|
| |
|
|
|
|
|
8323.
| ஆய தேவர் அவுணர்கள் யாரும் யான் ஏய செய்கை இயற்றவும் ஏற்கும் நல் சேயினோர் களும் சிற்றிடை மாதரும் மாய் வில் கொள்கையில் மல்கவும் நல்குதி. |
13 |
|
|
|
| |
|
|
|
|
|
8324.
| ஆதி ஆகி அனைத்தையும் ஈன்ற நின் பாதி ஆன பராபரை யான் பெறு மாதர் ஆக மறையவன் ஆகி நீ காதல் ஆகக் கடிமணம் செய்தி ஆல். |
14 |
|
|
|
| |
|
|
|
|
|
8325.
| என்று தக்கன் இயம்பலும் இங்கு இது நன்று உனக்கு அது நல்கினம் நல் நெறி நின்றி என்னில் நிலைக்கும் இச் சீர் எனா மன்றுள் ஆடிய வானவன் போயினான். |
15 |
|
|
|
| |
|
|
|
|
|
8326.
| ஈசன் அவ் வரம் ஈந்தனன் ஏகலும் நேசமோடு அவன் நீர்மையைப் போற்றியே தேசின் மிக்க சிறு விதி யாரினும் பேச ஒணாத பெரும் மகிழ்வு எய்தினான். |
16 |
|
|
|
| |
|
|
|
|
|
8327.
| ஓகை மேயவன் ஓதிம ஊர்திமேல் ஏகும் ஐயனை எண்ணலும் அச் செயல் ஆகம் ஈது கண்டு அன்னவன் மங்கை ஓர் பாகன் ஈந்த பரிசு உணர்ந்தான் அரோ. |
17 |
|
|
|
| |
|
|
|
|
|
8328.
|
பெற்றிடும் மதலை எய்தும் பேற்றினை அவன்பால்
மேல் வந்து
உற்றிடும் திறத்தை எல்லாம் ஒருங்கு உற உணர்வால் நாடித்
தெற்று என உணர்ந்து தக்கன் சிவன் அடி உன்னிப் பல்நாள்
நல் தவம் புரிந்தவாறும் நன்று என உயிர்த்து நக்கான். |
18 |
|
|
|
| |
|
|
|
|
|
8329.
|
முப்புரம் முடிய முன்நாள் முனிந்தவன் நிலைமை ஆன
மெய்ப் பொருள் பகர்ந்தேன் மைந்தன் வீடுபெற்று
உய்ய அன்னான்
இப் பரிசு ஆனான் அந்தோ என் இனிச் செய்கேன் நிம்பம்
கைப்பது போமோ நாளும் கடல் அமிர்து உதவினாலும். |
19 |
|
|
|
| |
|
|
|
|
|
8330.
|
ஆல் அமர் களத்தோன் தானே ஆதி என்று உணர்ந்து போந்து
சாலவே இந்நாள் கானும் தலையது ஆம் தவத்துள் தங்கி
ஞாலம் மேல் என்றும் நீங்கா நவையொடு பவமும் பெற்றான்
மேலை நாள் வினைக்கு ஈடு உற்ற விதியை யார் விலக்க வல்லார்.
|
20 |
|
|
|
| |
|
|
|
|
|
8331.
|
செய்வது
என் இனியான் என்னாச் சிந்தையின் அவலம் செய்து
மை வளர் தீய புந்தி மைந்தனை அடைந்து வல்லே
மெய் வகை ஆசி கூறி மேவலும் வெய்ய தக்கன்
இவ் இடை நகரம் ஒன்றை இயற்றுதி ஐய என்றான். |
21 |
|
|
|
| |
|
|
|
|
|
8332.
|
என்ன அத் தக்கன் கூற இமைப்பினில் அமைப்பன் என்றே
கொன் உறு கமலத்து அண்ணல் குறிப்பொடு கரங்களாலே
தன்னகர் என்ன ஒன்று தக்கமா புரி ஈது என்றே
பொன்னகர் நாணுக் கொள்ளப் புவி இடைப் புரிந்தான் அன்றே.
|
22 |
|
|
|
| |
|
|
|
|
|
8333.
|
அந்த மா நகரம் தன்னில் அரும் தவத் தக்கன் சென்று
சிந்தையுள் உவகைப் பூத்துச் சேண் நகர் தன்னுள்
ஒன்றும்
இந்தவாறு அணியது அன்று ஆல் இணை இதற்கு இஃதே என்னாத்
தந்தை பால் அன்பு செய்து தன் பெரும் கோயில் புக்கான்.
|
23 |
|
|
|
| |
|
|
|
|
|
8334.
|
தன் பெரும் கோயில் எய்தித் தவ முனிவரர் வந்து ஏத்த
மன்பெரும் தன்மை கூறும் மடங்கல் அம் தவிசின் உம்பர்
இன்பு உறு திருவினோடும் இனிது வீற்று இருந்தான் என்ப
பொன் புனை கிரியின் மீது பொலம் சுடர்க் கதிர் உற்ற என்ன.
|
24 |
|
|
|
| |
|
|
|
|
|
8335.
|
கேசரி அணையின் மீது கெழீஇயின தக்கன் எண்தோள்
ஈசன் நல் வரம் பெற்று உள்ள இயற்கையை ஏமம் சான்ற
தேசிகன் ஆகும் பொன் போய்ச் செப்பலும் துணுக்கம் எய்தி
வாசவன் முதலா உள்ள வானவர் யாரும் போந்தார். |
25 |
|
|
|
| |
|
|
|
|
|
8336.
|
வானவர் போந்த பான்மை வரன்முறை தெரிந்து மற்றைத்
தானவர் குரவன் அனோன் தயித்தியர்க்கு இறையைச் சார்ந்து
போனது உன் அவலம் அஞ்சேல் புரந்தரன் தனக்குத் தக்கன்
ஆனவன் தலைவன் ஆனான் அன்னவன் சேர்தி என்றான்.
|
26 |
|
|
|
| |
|
|
|
|
|
8337.
|
சேருதி என்னும் மாற்றம் செவி தளிப்பு எய்தக் கேளா
ஆர் அமிர் அருந்தினான் போல் அகம் உறும் உவகை பொங்க
மேருவின் ஒருசார் வைகும் வெம் திறல் அவுணர் கோமான்
கார் என எழுந்து தொல்லைக் கிளை ஞரைக் கலந்து போந்தான்.
|
27 |
|
|
|
| |
|
|
|
|
|
8338.
|
ஆள் அரி ஏறு போலும் அவுணர் கோன் சேறலோடும்
வாள் உறு கதிர்ப்புத் தேளும் மதியமும் மற்றும் உள்ள
கோளொடு நாளும் ஏனைக் குழுஉறு கணத்தினோரும்
நீள் இருந் தடம் தேர் மீதும் மானத்தும் நெறியில் சென்றார்.
|
28 |
|
|
|
| |
|
|
|
|
|
8339.
|
மங்குல் தோய் விண்ணின் பாலார் மாதிரம் காவலோர்கள்
அங்கத நிலையத்து உள்ளார் அனையவர் பிறரும் உற்றார்
இங்கு இவர் யாரும் தக்கன் இணை அடி வணங்கி ஈசன்
பொங்கு பேர் அருளின் ஆற்றல் புகழ்ந்தனர் ஆகி நின்றார்.
|
29 |
|
|
|
| |
|
|
|
|
|
8340.
|
அவ் வகை முளரி அண்ணல் ஆதி ஆம் அமரர் தம்தம்
செய்வினை ஆக உன்னி வைகலும் செறிந்து போற்ற
மெய் வகை உணராத் தக்கன் வியன் மதிக் குடையும் கோலும்
எவ் வகை உலகும் செல்ல இருந்து அரசு இயற்றல் செய்தான்.
|
30 |
|
|
|
| |
|
|