திருமணப் படலம்
 
8571.

தொல்லையில் வதுவை அம் தொழில் நடாத்திட
ஒல்லுவது எற்றை என்று உளம் கொண்டு ஆய்வுழி
நல்லன யாவும் அந்நாளில் நண்ணலும்
எல்லை இல் உவகை மிக்கு ஏம்பல் எய்தினான்.

1
   
8572.
அண்ணலுக்கு இப்பகல் அணங்கை ஈவன் என்று
உள் நிகழ் ஆர்வமோடு உளத்தில் தூக்கியே
விண்ணவர் யாவரும் விரைந்து செல்லிய
துண் என ஒற்றரைத் தூண்டினான் அரோ.
2
   
8573.
தன் நகர் அணிபெறச் சமைப்பித்து ஆங்கு அதன்
பின் உற முன்னினும் பெரிதும் ஏர்தக
மன்னுறு கோயிலை வதுவைக்கு ஏற்றிடப்
பொன் நகர் நாணுறப் புனைவித்தான் அரோ.
3
   
8574.
கடிவினை புரிதரக் காசின் றாக்கிய
படியறு திருநகர் பைய நீங்கியே
கொடி உறழ் மெல் இடைக் குமரிபால் வரும்
அடிகளை அணுகினன் அடிகள் போற்றியே.
4
   
8575.
அணுகினன் அண்ணல் நீ அணைந்து மற்று இவள்
மண நய வேட்கையால் மாது நோற்றனள்
நணுகுதி அடியனேன் நகரின் பால் எனா
நுணுகிய கேள்வியான் நுவன்று வேண்டவே.
5
   
8576.
இறையவன் நன்று என எழுந்து சென்று ஒராய்
நறைமலர் செறிகுழல் நங்கையாளொடு
மறல் கெழு மனத்தினான் மனை உற்றான் அரோ
அறைதரு நூபுரத்து அடிகள் சேப்பவே.
6
   
8577.
பூந்திரு நிலவிய பொருவில் கோயில் முன்
காந்தியொடு ஏகலும் கடவுள் முன்னரே
வாய்ந்தது ஒர் எண்வகை மங்கலங்களும்
ஏந்தினர் ஏந்திழை மார்கள் எய்தினார்.
7
   
8578.
தையலர் மங்கலத் தன்மை நோக்கியே
வையகம் உதவிய மங்கை தன்னுடன்
ஐயனும் உறையுளின் அடைந்து தான் ஒரு
செய்ய பொன் பீடமேல் சிறப்பின் வைகினான்.
8
   
8579.
அன்னது காலையில் ஆற்று நோன்பு உடைக்
கன்னியை மறைக் கொடி கண்டு புல்லியே
தன் உறு மந்திரம் தந்து மற்று அவள்
பின்னலை மெல் மெலப் பிணிப்பு நீக்கினான்.
9
   
8580.
சிற்பரை ஓதியின் செறிவை ஆய்ந்த பின்
பொற்புறு நான நெய் பூசிப் பூந் துவர்
நல் பொடி தீற்றியே நவை இல் கங்கை நீர்
பலபல குடங்கரின் பால் உய்த்து ஆட்டினாள்.
10
   
8581.
ஆட்டினள் மஞ்சனம் அணிய பூந் தொடை
சூட்டினள் பொன் கலை சூழ்ந்து பல்கலன்
பூட்டினள் எம்பிரான் புடையில் உய்த்தனள்
ஈட்டு உறும் உயிர்த் தொகை ஈன்ற ஆய்தனை.
11
   
8582.
மண அணி முற்றுறு மாது போந்து தன்
கணவனது ஒரு புடை கலந்த காலையில்
பணை முதல் ஆகிய பல் இயங்களும்
இணை அற இயம்பினர் யாரும் ஏத்தவே.
12
   
8583.
தூதுவர் உரை கொளீஇத் துண் என்று ஏகியே
மாதவன் முதலிய வான் உளோர் எலாம்
போதினை வளைதரு பொறி வண்டு ஆம் என
ஆதியை அடைந்தனர் அடி பணிந்துளார்.
13
   
8584.
வீழ்குறும் இழுது எனும் வெய்ய நோன் குரல்
காழ்கிளர் திவவுடைக் கடிகொள் யாழினை
ஊழ்கிளர் கின்னரர் உவணர் ஏந்துபு
கேழ் கிளர் மங்கல கீதம் பாடினார்.
14
   
8585.
கான் உறு பஃறலைக் காவு கான்றிடு
தேன் உறு விரைமலர் அடிகள் சிந்துபு
வானவர் மகளிர்கள் வணங்கி வாழ்த்து உரை
ஆனவை புகன்றனர் அமலை பாங்கரில்.
15
   
8586.
எல்லையது ஆகலும் இருந்து தக்கன் ஆங்கு
ஒல்லையின் மறை மொழி உரைத்துத் தன்மனை
வல்லி பொன் சிரக நீர் மரபின் வாக்கு உற
மெல் என அரன் அடி விளக்கினார் அரோ.
16
   
8587.
விளக்கிய பின்றையில் விரை கொள் வீ முதல்
கொளப்படு பரிசு எலாம் கொணர்ந்து மற்று அவற்கு
உளப்படு பூசனை உதவி மாதினை
அளித்திட உன்னினன் அமரர் போற்றவே.
17
   
8588.
சிற்கன வடிவினன் செம் கையுள் உமை
நால் கரம் நல்குபு நன்று போற்றுதி
நிற்கு இவள் தன்னை யான் நேர்ந்தனன் எனாப்
பொன் கரகம் தரு புனலொடு ஈந்தனன்.
18
   
8589.
மூர்த்தம் அங்கு அதன் இடை முதல்வன் அம்பிகை
சீர்த்திடு மண அணி தெரிந்து கை தொழூஉ
நீர்த் தொகை கதிரொடு நிலவு கண்டுழி
ஆர்த்தென வழுத்தினர் அமரர் யாவரும்.
19
   
8590.
மாடு உறு திசைமுகன் மணம் செய் வேள்வியில்
கூடுறு கலப்பைகள் கொணர்ந்து நூல் முறை
நேடினன் சடங்கு எலாம் நிரப்ப மால் முதல்
ஆடவர் இசைத்தனர் அமலன் வாய்மையே.
20
   
8591.
அன்னுழி உருவமும் அருவும் ஆவியும்
முன் உறும் உணர்வும் ஆய் உலகம் யாவிற்கும்
நல் நயம் புணர்த்தியே நண்ணு நாயகன்
தன் உரு ஒளித்தனன் அருளின் தன்மை ஆல்.
21
   
8592.
மறைந்தனன் இருத்தலும் மகிணன் காண்கிலாள்
அறந்தனை வளர்க்கும் எம் அன்னை நோற்று முன்
பெறும் பெரு நிதியினைப் பிழைத்து உளோர் எனத்
துறந்தனள் உவகையைத் துளங்கி மாழ்கியே.
22
   
8593.
பொருக்கு என எழுந்தனள் பூவின் மீ மிசைத்
திருக்கிளர் திருமுதல் தெரிவை மாதர்கள்
நெருக்கு உறு சூழல் போய் நிறம் கொள் தீ முகத்து
உருக்கிய பொன் என உருகி விம்மினாள்.
23
   
8594.
உயிர்த்தனள் கலுழ்ந்தனள் உணர்வு மாழ்கியே
அயர்த்தனள் புலந்தனள் அலமந்து அங்கமும்
வியர்த்தனள் வெதும்பினள் விமலன் கோலமே
மயிர்த்தொகை பொடிப்பு உற மனம் கொண்டு உன்னுவாள்.
24
   
8595.
புரந்தரன் மால் அயன் புலவர் யாவரும்
நிரந்திடும் அவையிடை நிறுக்கும் வேள்விவாய்
இருந்தனன் மாயையால் இறைவன் துண் எனக்
கரந்தனன் ஆதலின் கள்வன் போலும் ஆல்.
25
   
8596.
எய்தி எற் கொண்டது ஓர் இறைவன் தன்னை யான்
கைதவனே எனக் கருதல் ஆகுமோ
மெய் தளர் பான்மையின் வினையினேன் இவண்
செய்தவம் சிறிது எனத் தேற்றல் இன்றியே.
26
   
8597.
என்று என்று உன்னி உயிர்த்து இரங்கும் இறைவி
                     செய்கை எதிர் நோக்கி
மன்றல் நாறும் குழல் வேதவல்லி புல்லி மனம் தளரேல்
உன்றன் கணவன் பெறும் வாயில் தவமே இன்னும்                      உஞற்றுக என
நின்ற திருவும் நாமகளும் பிறரும் இனைய நிகழ்த்தினர்                      ஆல்.
27
   
8598.
அன்னை வாழி இது கேண்மோ அகிலம் முழுதும்                              அளித்தனை ஆல்
என்ன பொருளும் நின் உருவே யாண்டும் நீங்கா நின்                              கணவன்
தன்னை மறைக்கும் மறை உளதோ தவத்தை அளிப்பான்                              நினைந்தனையோ
உன்னல் அரிதாம் நுமது ஆடல் முழுதும் யாரே                              உணர்கிற்பார்.
28
   
8599.
வாக்கில் மனத்தில் தொடர் வரு நின் மகிணன் தனையும்                                   உன் தனையும்
நோக்கம் உற்றோம் தஞ்சம் என நுவறல் செய்யா                                   வினையாவும்
போக்கல் உற்றோம் தோற்றம் உறும் புரையும் தீர்ந்தோம்                                   போத மனம்
தேக்கல் உற்றோம் உய்ந்தும் யாம் செய்யும் தவமும் சிறிது                                   அன்றே.
29
   
8600.
என்னா இயம்பி வாழ்த்து எடுப்ப இறைவி அவர்க் கண்டு                               இனிது அருள் செய்
தன்னார் பொய்தல் ஒருவிப் போய் அரு மாதவமே                               புரிவாளாய்
முன்னா முன்னைக் கடி மாடம் முயன்று போந்தாள் இவ்                               அனைத்தும்
நன் நாரணனே முதலானோர் நோக்கி நனிவிம்மிதர்                               ஆனார்.
30
   
8601.
எங்கு உற்றனன் கொல் இறை என்பார் இஃது ஓர் மாயம்                                 என உரைப் பார்
மங்கைக்கு ஒளித்தது என் என்பார் வாரி காண்டுமேல்                                 என்பார்
அங்கு இத்தகைய பல பல சொற்ற அலமந்து ஏங்கி                                 அதிசயித்துக்
கங்குல் போதின் மாசு ஊர்ந்த கதிர்போல் மாழ்கிக் கவல்                                 உற்றார்.
31
   
8602.
நோக்கு உற்று அனைய பான்மை தனை நொய்தில்
                             தக்கன் நனி கனன்று
தீக் கண் கறங்க வெய்து உயிர்த்துச் செம் பொன் கடகக்                              கை புடைத்து
மூக்கில் கரம் தொட்டு அகம் புழுங்க முறுவல் செய்து                              முடி துளக்கி
ஆக்கத் தொடு யாம் புரி வதுவை ஆற்ற அழகு இதாம்                              என்றான்.
32
   
8603.
வரம் தான் உதவும் பெற்றியினான் மற்று என் மகடூஉ                            வயின் வாரா
இரந்தான் அதனை யான் வினவி இயல்பின் வதுவை
                           முறை நாடி
நிரந்து ஆர்கின்ற சுரர் காண நெறியால் நேர்ந்தேன்                            நேர்ந்து அதற்பின்
கரந்தான் யாரும் மானமுற நவை ஒன்று என்பால்                            கண்டானோ.
33
   
8604.
புனையும் தொன்மைக் கடிவினையைப் புன்மை ஆக்கி                                 ஊறு புணர்த்து
எனையும் பழியின் மூழ்குவித்தே இறையும் எண்ணாது                                 ஒளித்தானே
அனையும் தாதையும் தமரும் ஆரும் இன்றி அகன்                                 பொதுவே
மனை என்று ஆடும் ஒருபித்தன் மறையோன் ஆகில்                                 மயல்போமோ.
34
   
8605.
ஆயிற்று ஈதே அவன் இயற்கை அறிந்தேன் இந்நாள்                                 யான் என்று
தீ உற்று எனவே உளம் வெதும்பித்திருமால் முதலாம்                                 தேவர் தமைப்
போய் உற்றிடு நும் புரத்து என்று போக விடுத்துப்                                 புனிதன் செய்
மாயத்தினையே உன்னி உன்னி வதிந்தான் செற்றம்                                 பொதிந்தானே.
35
   
8606.
பொன்னார் மேனிக் கவுரி முன்னைப் பொலன்                  மாளிகையில் போந்து உலப்பின்
மின் ஆர் செறிந்த பண்ணையுடன் மேவி அம்கண்
                 வீற்று இருந்து
பல்நாள் ஈசன் தனை எய்தப் பரிந்து நோற்கப்
                 பண்ணவன் ஓர்
நல் நாள் அதனில் தாபதன் போல் நடந்தான்
                 அவன்தன் இடம் தானே.
36
   
8607.
நலன் ஏந்திய வெண்தலைக் கலனும் நறிய களப நீற்று                                அணியும்
களன் ஏந்திய கண்டிகை தொடுத்த கவின்சேர் வடமும்                                கடிப் பிணையும்
நிலன் ஏந்திய தாள் இடை மிழற்றும் நீடு மறையின்                                பரிஅகமும்
வலன் ஏந்திய சூலமும் பின்னல் வனப்பும் காட்டி                                வந்தனனே.
37
   
8608.
வந்து உமை முன்பட வந்தவனைக் கண்டு
எந்தை பிராற்கு இனி யார் இவர் என்னாச்
சிந்தனைச் செய்து எதிர் சென்று கை கூப்பி
அந்தரி போற்றினள் அன்பு உறு நீரால்.
38
   
8609.
பற்றொடு சென்று பராய்த் தொழும் எல்லைப்
பெற்றம் அதன்மிசை பெண் இடம் இன்றி
மற்று உள தொல் வடிவத்தொடு நித்தன்
உற்றனன் அவ்விடை ஒண்தொடி காண.
39
   
8610.
பார்ப்பதி ஆகிய பாவை நுதல் கண்
நால் புயன் என் வயின் நண்ணினன் என்னா
எற்புறு சிந்தை கொடு இன்னல் இகந்தே
மேல்படும் ஓகையின் வீற்றினள் ஆனாள்.
40
   
8611.
பல் முறை வீழ்ந்து பணிந்து பராவி
என்முனம் முந்தை இகம் தனை இன்றிப்
புன்மையை நீக்குதி போந்தனை கொல்லோ
சின்மய என்று எதிர் சென்று உரை செய்தாள்.
41
   
8612.
அம்முறை செப்பும் அணங்கு தனைக் கூய்
மைம்மலி கண்டன் மலர்க்கரம் ஓச்சித்
தெம்முனை சாடுறு சீர் விடை மேற்கொண்டு
இம் என வேதன் இடத்தினில் வைத்தான்.
42
   
8613.
நீல் விடம் மேயினன் நேரிழை யோடும்
பால் விடை ஊர்ந்து படர்ந்தனன் வெள்ளி
மால் வரை ஏகினன் மற்று அவள் பாங்கர்
வேல் விழி மாதர் விரைந்தது கண்டார்.
43
   
8614.
இக் கென உட்கி இரங்கினர் ஏகித்
தக்கன் இருந்திடு சங்க முன் ஆகிச்
செக்கர் எனத் திகழ் செம் சடை அண்ணல்
புக்கனன் ஆல் ஒரு புண்ணியனே போல்.
44
   
8615.
கண்டனள் நின் மகள் கைதவம் ஓராள்
அண்டினள் சேர்தலும் ஆயவன் வல்லே
பண்டை உருக்கொடு பால்பட அன்னாள்
கொண்டு செல்வான் இது கூறுவது என்றார்.
45
   
8616.
பாங்கியர் இன்ன பகர்ந்தன கேளாத்
தீங் கனல் மீ மிசை தீயது ஓர் தூ நெய்
ஆங்கு பெய்து என்ன அளப்பு இல செற்றம்
தாங்கி உயிர்ப்பொடு தக்கன் இருந்தான்.
46
   
8617.
அக் கணம் வானவர் ஆயினர் எல்லாம்
தொக்கனர் வந்து தொழும் கடன் ஆற்றிப்
பக்கமது ஊடு பராவினர் வைகத்
தக்கன் அவர்க்கு இவை சாற்றுதல் உற்றான்.
47
   
8618.
என் புகல்வேன் இனி என் மகள் தன்னை
அன்பு உற வேட்டு அருள் ஆல மிடற்றோன்
மன் புனையும் கடி மன்றல் இயற்றும்
முன்பு கரந்தனன் முன் அரிது ஆகி.
48
   
8619.
அற்று அலது இன்றும் என் ஆடவள் பாங்கில்
கற்றை முடிக் கொள் கபாலி எனச் சென்று
உற்றனன் என்முன் உறாமல் ஒளித்தான்
பற்றினன் அன்னவளை படர் கின்றான்.
49
   
8620.
அன்னையும் அத்தனும் ஆர்வமொடு ஈய
மன்னிய கேளிர் மகிழ்ந்தனர் வாழ்த்தப்
பின்னர் மகள் கொடு பேர்ந்திலன் ஈன்றோர்
தன்னை மறைத்து இது செய்வது சால்போ.
50
   
8621.
இங்கு இது போல்வன யாவர் செய்கிற்பார்
சங்கரனேல் இது தான் செயல் ஆமோ
நங்கள் குலத்தை நவைக் கண் உறுத்தான்
அங்கு அதும் அன்றி என் ஆணையும் நீத்தான்.
51
   
8622.
இரந்தனன் சிவன் எனும் ஏதம் எங்கணும்
நிரந்தது மற்று அது நிற்க இவ் இடை
கரந்தனன் என்பது ஓர் உரையும் காசினி
பரந்தது வேறும் ஓர் பழி உண்டாயதே.
52
   
8623.
பண்டு ஒரு பாவையைப் பரிந்து மன்றல் வாய்
ஒண் தொடிச் செம்கையின் உதக மேஉறக்
கொண்டிலன் என்பதும் கொள்ளு நீரரைக்
கண்டிலன் என்பதும் காட்டினான் அரோ.
53
   
8624.
என்று இவை பலபல இசைத்துச் செய் நலம்
கொன்றிடு சிறுவிதி குழுமித்து அன்புடைத்
துன்றிய சுரர்தமைத் தொல்லைத் தத்தம் ஊர்
சென்றிட ஏவினன் செயிர்த்து வைகினான்.
54