பிரம யாகப் படலம்
 
8649.
இப்படி பல் நாள் யாரும் இவன் தனி ஆணைக்கு
                                    அஞ்சி
அப்பணி இயற்றலோடும் அம்புய மலர்மேல் அண்ணல்
முப்புரம் முனிந்த செம் கண் முதல்வன் அது அருளால்                                     ஆங்கு ஓர்
செப்பரும் வேள்வி ஆற்ற முயன்றனன் சிந்தை செய்தான்.
1
   
8650.
வேண்டிய கலப்பை யாவும் விதியுளி மரபினோடு
தேண்டினன் உய்த்துத் தக்கன் செப்பியது உன்னியானே
மாண்டிட வரினும் முக்கண் மதிமுடிப் பரமன் தன்னை
ஈண்டு தந்து அவிமுன் ஈவல் எனக்கு இது துணிபாம்                                     என்றான்.
2
   
8651.
இனையன புகன்று சிந்தை யாப்பு உறுத்து ஏவல்
                                   போற்றும்
தனையர் தம் குழுவைக் கூவித் தண்துழாய் முகுந்தன்                                    ஆதி
அனைவரும் அவிப்பால் கொள்ள அழைத்து நீர் தம்மின்                                    என்னாத்
துனையவே தூண்டிப் போதன் தொல் பெரும் கயிலை                                    புக்கான்.
3
   
8652.
கயிலையின் நடுவண் உள்ள கடவுள் மா நகரில் எய்தி
அயில் உறு கணிச்சி நந்தி அருள் நெறி உய்ப்ப                                  முன்போய்ப்
பயிலும் அன்பொடு நின்று ஏத்திப் பணிதலும் சிவன்                                  ஈண்டு உற்ற
செயலது என் மொழிதி என்னத் திசை முகன் உரைப்பது                                  ஆனான்.
4
   
8653.
அடியனேன் வேள்வி ஒன்றை ஆற்றுவல் அரண் மூன்றும்
பொடிபட முனிந்த சீற்றப் புனித நீ போந்து என் செய்கை
முடிவுற அருடி என்ன முறுவல் செய்து இறைவன் நம்தம்
வடிவுள நந்தி அம்கண் வருவன் நீ போதி என்றான்.
5
   
8654.
போக என விடுத்தலோடும் பொன் அடி பணிந்து
                               வல்லே
ஏகிய தாதை தக்கன் இருந்துழி எய்தியே யான்
பாக நல் வேள்வி ஒன்று பண்ணுவன் முனிவர்                                விண்ணோர்
ஆகிய திறத்தரோடும் அணுகுதி ஐய என்றான்.
6
   
8655.
என்னலும் நன்று முன்போய் இயற்றுதி மகத்தை என்னப்
பொன் அவிர் கமலத்து அண்ணல் மனோவதி                                 அதனில்போந்து
செம் நெறிபயக்கும் வேள்விச் செய்கடன் புரிதல்
                                உற்றான்
அன்னது ஓர் செய்கை மாலோன் ஆதியர் எவரும்                                 தேர்ந்தார்.
7
   
8656.
அக் கணம் தனில் மாயவன் இமையவர்க்கு அரசன்
மிக்க தேவர்கள் முனிவரர் யாவரும் விரைந்து
தக்கன் முன் உற மேவலும் அவரொடும் தழுவி
முக்கண் நாயகற்கு அவியினை விலக்குவான் முயன்றான்.
8
   
8657.
ஏற்றம் நீங்குறு தக்கன் அக் கடவுளர் யாரும்
போற்றியே தனைச் சூழ் தரத் தாதை தன் புரத்தில்
ஆற்றும் வேள்வியில் அணைதலும் அயன் எழுந்து ஆசி
சாற்றி ஆர்வமொடு இருத்தினன் பாங்கர் ஓர் தவிசின்.
9
   
8658.
கான் உலாவு தண் துளவினான் அடிகள் கை தொழுதே
ஆன பான்மையில் ஓர் தவிசு இருத்தினன் அல்லா
ஏனை யோருக்கும் வீற்று வீற்று உதவினன் இடையில்
தான் ஓர் ஆசனத்து இருந்தனன் மறை எலாம் தழங்க.
10
   
8659.
அம் கண் ஞாலம் அது அளித்தவன் அமர்தலும் அது                                   போழ்தின்
நங்கையாள் ஒரு பங்கினன் அருளொடு நந்தி தேவனை                                   நோக்கிப்
பங்கய ஆசனன் வேள்வியில் சென்று நம் பாகமும்                                   கொடுவல்லே
இங்கு நீ வருக என்றலும் வணங்கியே இசைந்து அவன்                                   ஏகுற்றான்.
11
   
8660.
நூற்றுக் கோடி வெம் கணத்தவர் சூழ்தர நொய்தின்                         அக்கிரிநீங்கி
ஏற்றின் மேல் வரும் அண்ணலை உள் உறுத்து ஏர்
                        கொள் பங்கயப் போதில்
தோற்று நான்முகக் கடவுள் முன் அடைதலும் துண்
                        என எழுந்து அன்பில்
போற்றியே தொழுது இருந்தனன் என்ப ஓர் பொலன்                         மணித் தவிசின் கண்.
12
   
8661.
நின்ற பாரிடத் தலைவர்க்கும் வரன் முறை நிரந்த
                 ஆசனம் நேர்ந்து
பின்றை நான்முகன் வேள்வியது இயற்றலும் பிறங்கு
                 எரிஉற நோக்கி
நன்றி இல்லது ஓர் தக்கன் அக் கிரி உறை நக்கனுக்கு                  ஆளாகிச்
சென்றவன் கொலாம் இவன் என நகைத்தனன்
                 செயிர்த்து இவை உரைக்கின்றான்.
13
   
8662.
நாரணன் முதல் ஆகிய கடவுளர் நளின மா மகள்
                            ஆதிச்
சீர் அணங்கினர் மாமுனி கணத்தவர் செறிகுநர்
                            உறைகின்ற
ஆரணன் புரிவேள்வியில் விடநுகர்ந்து ஆடல்
                            செய்பவன் ஆளும்
சார தங்களுமோ நடு உறுவது தக்கதே இது என்றான்.
14
   
8663.
மேவலார் எயில் முனிந்த தீ விழியினன் வெள்ளிமால்                         வரை காக்கும்
காவலாளனும் நந்தியும் கணத்து அரும் கதும் என
                        இவண் மேவக்
கூவினார் எவரோ என உளத்து கிடைக் குறித்தனன்                         தெரிகுற்றான்
தேவர் யாவரும் வெருவுற அயன் தனைச் செயிர்த்து                         இவை உரைக்கின்றான்.
15
   
8664.
ஆதி நான்முகக் கடவுளை ஆகுநீ அழல் மகம்                       புரிசெய்கை
பேதை பாகனுக்கு உரைத்தனை அவன் விடப் பெயரும்                       நந்தியை என் முன்
காதலோடு கை தொழுது நள் இருத்தினை கடவதோ                       நினக்கு ஈது
தாதை ஆதலில் பிழைத்தனை அல்லது உன்
                      தலையினைத் தடியேனோ.
16
   
8665.
இன்னம் ஒன்றி யான் உரைப்பது உண்டு அஞ்ஞை கேள்                              ஈமமே இடன் ஆகத்
துன்னு பாரிடம் சூழ் தரக் கழி உடல் சூல மீமிசை ஏந்தி
வன்னி ஊடு நின்று ஆடுவான் தனக்கு நீ மகத்து இடை                              அவிக் கூற்ற
முன்னை வைகலின் வழங்கலை இப்பகல் முதல் அவன்                              தனக்கு இன்று ஆல்.
17
   
8666.
அத்தி வெம் பணி தலைக்கலன் தாங்கியே அடலை
                      மேல் கொண்டு உற்ற
பித்தன் வேள்வியில் அவி கொளற்கு உரியனோ
                      பெயர்ந்த இப்பகல் காறும்
எத் திறத்தரும் மறை ஒழுக்கு என நினைந்து யாவதும்                       ஓராமல்
சுத்த நீடு அவி அளித்தனர் அன்னதே தொன்மையாக்                       கொளல் பாற்றோ.
18
   
8667.
மற்றை வானவர் தமக்கு எலா நல்குதி மாலையே
                              முதல் ஆக
இற்றை நான் முதல் கொள்ளுதி இவற்கு முன் ஈகுதி
                              அவி தன்னைத்
கற்றை வார் சடை உடையது ஓர் கண் நுதல் கடவுளே                               பரம் என்றே
சொற்ற மாமறைச் சுருதிகள் விலக்குதி துணிவுனக்கு இது                               என்றான்.
19
   
8668.
என்ற வாசகம் கேட்டலும் நந்திதன் இரு கரம்                     செவிபொத்தி
ஒன்று கொள்கையின் ஆதிநாமம் தனை உளத்து இடை                     நனி உன்னி
இன்று இவன் சொலும் கேட்ப உய்த்தனை கொலாம்                     எம்பிரான் எனை என்னாத்
துன்று பையுளின் மூழ்குறா ஆய் இடைத் துண் என                     வெகுளுற்றான்.
20
   
8669.
பண்டு மூ எயில் அழல் எழ நகைத்திடு பரம் பரன்
                                 அருள் நீரால்
தண்ட நாயகம் செய்திடு சிலாதனார் தனிமகன் முனிவு                                  எய்தக்
கண்ட வானவர் யாவரும் உட்கினர் கனலும் உள் கவல்                                  உற்றான்
அண்டம் யாவையும் நடு நடுக்கு உற்றன அசைந்தன
                                 உயிர் யாவும்.
21
   
8670.
ஏற்றின் மேயநம் அண்ணல் தன் சீர்த்தியில் இறையுமே                          குறிக் கொள்ளா
ஆற்றலோடு அவி விலக்கிய தக்கனுக்கு அஞ்சினம்                          இசைந்தோம் ஆல்
மாற்றம் ஒன்றும் இங்கு உரைத்திடல் தகாது என மற்று                          அது பொறாது அந்தோ
சீற்றம் உற்றனன் நந்தி என்று உட்கினர் திசை
                         முகனொடு மாலோன்.
22
   
8671.
ஈது வேலையில் நந்தி அத் தக்கனை எரிவிழித்து
                       எதிர் நோக்கி
மாது பாகனை இகழ்ந்தனை ஈண்டு நின் வாய்                        துளைத்திடுவேன் ஆல்
ஆதி தன் அருள் அன்றென விடுத்தனன் ஆதலின்                        உய்ந்தாய் நீ
தீது மற்று இனி உரைத்தியேல் வல்லை நின் சிரம்                        துணிக்குவன் என்றான்.
23
   
8672.
இவை அயன் மகன் உள்ளமும் துண் என இசைத்து
                           மாகம் தன்னில்
அவியது எம் பிராற்கு இலது என விலக்கினை அதற்கு                            இறையவன் அன்றேல்
புவனமீது மற்று எவர் உளார் அரிதனைப் பொருளெனக்                            கொண்டாய் நீ
சிவனை அன்றியே வேள்வி செய் கின்றவர் சிரம் அறக்                            கடிது என்றான்.
24
   
8673.
இன்னது ஒர் சாபம் அது இயம்பி ஆங்கு அதன்
பின்னரும் இசைத்தனன் பிறை முடிப் பிரான்
தன் இயல் மதிக்கிலாத் தக்க நிற்கு இவண்
மன்னிய திருஎலாம் வல்லை தீர்கவே.
25
   
8674.
ஏறு உடை அண்ணலை இறைஞ்சல் இன்றியே
மாறு கொடு இகழ் தருவாய் கொள் புன் தலை
ஈறு உற உன் தனக்கு எவரும் காண்தக
வேறு ஒரு சிறு சிரம் விரைவின் மேவவே.
26
   
8675.
ஈரம் இல் புன் மனத்து இழுதை மற்று உனைச்
சார் உறு கடவுளர் தாமும் ஓர் பகல்
ஆருயிர் மாண்டு எழீஇ அளப்பு இலா உகம்
சூர் எனும் அவுணனால் துயரின் மூழ்கவே.
27
   
8676.
என்று மற்று இனையதும் இயம்பி ஏர் புறீஇத்
துன்றிரும் கணநிரை சூழ வெள்ளி அம்
குன்று இடை இறைக்கு இது கூறிக் கீழ்த் திசை
முன் திரு வாயிலின் முறையின் மேவினான்.
28
   
8677.
முன் உற நந்தி அம் முளரி மேலவன்
மன் உறு கடி நகர் மகத்தை நீங்கலும்
அன்னது ஒர் அவை இடை அமரர் யாவரும்
என் இது விளைந்தது என்று இரங்கி ஏங்கினார்.
29
   
8678.
நந்தி எம் அடிகள் முன் நவின்ற மெய் உரை
சிந்தை செய்து ஏங்கினன் சிரம் பனிப்பு உற
மைந்தனது உரையையும் மறுத்தற்கு அஞ்சினான்
வெம்துயர் உழந்தனன் விரிஞ்சன் என்பவன்.
30
   
8679.
முடித்திட உன்னியே முயலும் வேள்வியை
நடத்திட அஞ்சினன் நவின்று செய் கடன்
விடுத்தனன் அன்னதை விமலற்கு இன் அவி
தடுத்தவன் கண்டு அரோ யாதும் சாற்றலன்.
31
   
8680.
கறுவு கொள் பெற்றியான் கவற்சி கொண்டுளான்
வறியது ஓர் உவகையான் மனத்தில் அச்சமும்
சிறிது கொள் பான்மையான் தேவரோடு எழாக்
குறுகினன் தன் நகர்க் கோயில் மேயினான்.
32
   
8681.
அலர்ந்திடு பங்கயத்து அண்ணல் தன்மகம்
குலைந்திட ஆயிடைக் குழீஇய தேவர்கள்
சலந்தனில் நந்தி செய் சாபம் சிந்தியாப்
புலர்ந்தனர் தத்தம் புரத்துப் போயினார்.
33