| 1091 | பாய்ந்தானை திரி சகடம் பாறி வீழ பாலகன் ஆய் ஆல் இலையில் பள்ளி இன்பம் ஏய்ந்தானை இலங்கு ஒளி சேர் மணிக் குன்று அன்ன ஈர் இரண்டு மால் வரைத் தோள் எம்மான்-தன்னை தோய்ந்தானை நிலமகள் தோள் தூதில் சென்று அப் பொய் அறைவாய்ப் புகப் பெய்த மல்லர் மங்கக் காய்ந்தானை எம்மானைக் கண்டுகொண்டேன் -கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே (5) |
|