| 1140 | தாங்கு அரும் போர் மாலி படப் பறவை ஊர்ந்து தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை ஆங்கு அரும்பிக் கண் நீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான்-தன்னை- கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலைக் குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டுத் தீங் கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (4) |
|