1696கனம் செய் மா மதிள் கணபுரத்தவனொடும்
      கனவினில் அவன் தந்த
மனம் செய் இன்பம் வந்து உள் புக வெள்கி என்
      வளை நெக இருந்தேனை
சினம் செய் மால் விடைச் சிறு மணி ஓசை என்
      சிந்தையைச் சிந்துவிக்கும்
அனந்தல் அன்றிலின் அரி குரல் பாவியேன்
      ஆவியை அடுகின்றதே             (9)