1757பொன் இவர் மேனி மரகதத்தின்
      பொங்கு இளஞ் சோதி அகலத்து ஆரம்
மின் இவர் வாயில் நல் வேதம் ஓதும்
      வேதியர் வானவர் ஆவர் தோழீ
என்னையும் நோக்கி என் அல்குல் நோக்கி
      ஏந்து இளங் கொங்கையும் நோககுகின்றார்
      அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன்-
      அச்சோ ஒருவர் அழகியவா             (1)