1882பிள்ளைகள் செய்வன செய்யாய் பேசின் பெரிதும் வலியை
கள்ளம் மனத்தில் உடையை காணவே தீமைகள் செய்தி
உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற
பள்ளிக் குறிப்புச் செய்யாதே பால் அமுது உண்ண நீ வாராய்            (6)