2485திண் பூஞ் சுடர் நுதி நேமி அம் செல்வர் விண் நாடு அனைய
வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம்? இவையோ
கண் பூங் கமலம் கருஞ் சுடர் ஆடி வெண் முத்து அரும்பி
வண் பூங் குவளை மட மான் விழிக்கின்ற மா இதழே 9