முகப்பு
தொடக்கம்
3136
கோவை வாயாள்பொருட்டு ஏற்றின்
எருத்தம் இறுத்தாய் மதிள் இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்
குல நல் யானை மருப்பு ஒசித்தாய்
பூவை வீயா நீர் தூவிப்
போதால் வணங்கேனேலும் நின்
பூவை வீயாம் மேனிக்குப்
பூசும் சாந்து என் நெஞ்சமே (1)