371சீயினால் செறிந்து ஏறிய புண்மேல்
      செற்றல் ஏறிக் குழம்பு இருந்து எங்கும்
ஈயினால் அரிப்பு உண்டு மயங்கி
      எல்லைவாய்ச் சென்று சேர்வதன் முன்னம்
வாயினால் நமோ நாரணா என்று
      மத்தகத்திடைக் கைகளைக் கூப்பிப்
போயினால் பின்னை இத் திசைக்கு என்றும்
      பிணை கொடுக்கிலும் போக ஒட்டாரே            (2)