திருவழுதி நாடு என்றும் தென் குருகூர் என்றும்
மருவினிய வண் பொருநல் என்றும் அரு மறைகள்
அந்தாதி செய்தான் அடி இணையே எப்பொழுதும்
சிந்தியாய் நெஞ்சே தெளிந்து