616மற்று இருந்தீர்கட்கு அறியலாகா
      மாதவன் என்பது ஓர் அன்புதன்னை
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம்
      ஊமையரோடு செவிடர் வார்த்தை
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப்
      பேர்த்து ஒரு தாய் இல் வளர்ந்த நம்பி
மற் பொருந்தாமற் களம் அடைந்த
      மதுரைப் புறத்து என்னை உய்த்திடுமின்.             (1)